சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

நான் இன்னிக்கி ரேவதியோட நெத்திலி குழம்பு செய்தேன். கணக்கு பிள்ளை இதோட என் கணக்கு 3 ஆச்சி....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் நேற்று பாக்கியலட்சுமி அவர்களின் தக்காளி மல்லி சட்னி செய்தேன்................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

பிந்து குறிப்பிட்டிருக்கும் 4 பேரோட குறிப்பை தான் செய்து சொல்லணும் :) மற்றவைகளை செய்தா இங்க சொல்ல வேண்டாம், அங்க பதிவு போட்டா போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank you

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?

நான் இன்னைக்கு காலைல மங்கம்மா அவர்களுடைய சம்பா கோதுமை ரவா அடை (வித் சட்னி மை ஸ்பெஷல்) செய்தேன் சூப்பெர்.

சரி மதியம் ரேவதி அவர்களுடைய செட்டிநாடு புலாவ் தவா சிக்கனையும் சேர்த்து செஞ்சிட்டு மொத்தமா பதிவு போடலாம் என்று பார்த்தேன் பட் குக்கர் விசில் வரலை அதான் அவசரம் வந்துட்டேன்.

ஸ்கன்தா....

மங்கம்மா அக்கா---ஸம்பா கோதுமை ரவா அடை

ரேவதி அக்கா----ஸெட்டிநாடு புலாவ்,தவா சிக்கன்

என் கணக்கு சரியா இருக்கனும் அதான் நீங்க சிரமப்படகூடாதென்று தனியா எடுத்து கான்பித்தேன்

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ஹாய் தோழிஸ் ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த சைடு வந்திருக்கிறேன்.. இந்த சமைத்து அசலாம் பகுதியில் இந்த முறை என்னால் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.. அடுத்த முறை நிச்சயம் நானும் சமைத்து அசலாம்ன்னு இருக்கேன்.. இந்த வாரம் என் குறிப்பும் உள்ளது.. ரொம்ப சந்தோஷம் நன்றி பிந்து.. என் குறிப்பை சமைத்து பார்த்து பதிவிட்ட அனைத்து தோழிகளுக்கும் என் நன்றிகள்.. வனி உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய், நானும் வந்துட்டேன் சமையல் செய்த லிஸ்டோட,
ரேவதி: செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா
மங்கம்மா: பயத்தம் பருப்பு பாயாசம்.
இதெல்லாம் செய்து வச்சுருக்கேன், எல்லாமே நல்லா வந்துருக்கு. இன்று என்னுடைய கணவர் பிறந்தநாள், அதுக்காக மதியம் சாப்பிட ஸ்பெஷல் ஐடம்ஸ் செய்தாச்சு. மாலை சிற்றுண்டி கமர் நிஷாவோட இனிப்பு போண்டா செய்யலாம்னு இருக்கேன், இதையும் செய்து பாத்துட்டு மீண்டும் வந்து பதிவு போடுறேன்.

ஸ்கந்தா என்னுடைய கணக்கையும் சரியா சேத்துக்குங்க பா.
பிந்து, ஸ்கந்தா இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நான் இப்போது ரேவதியின் செட்டிநாடு புலாவ் செய்தேன்

இன்று காலை ரேவதியின் புதினாமல்லி சட்னி செஇதேன்,[ full day power cut அதான் ஸ்கந்தா தாமதம்,காலை டைப் பன்னும்போதே பவர் கட் ஆச்சு ]

பிந்து, ஸ்கந்தா...

கமர் நிஷாவின் எலுமிச்சை ரசம்
ரேவதியின் செட்டிநாடு புலாவு

இதை இன்னைக்கு என் கணக்கில் சேர்த்துப்போடுங்கோ :) வண்டி சம ஸ்பீடில் போவது போல் இருக்கே. குட் குட்.

யாராவது எதுக்காவது ஸ்டெப் ஸ்டெப்பா படம் எடுத்திங்களா? இருந்தா இங்க சொல்லிடுங்க, இல்லன்னா மத்தவங்களும் அதையே எடுத்துட போறாங்க ;) ஆனா இம்முறை எல்லாமே ஏறக்குறைய விளக்கபட குறிப்பு தான்... ரேவதியின் ஒரு சில குறிப்பு தான் படமில்லாதது. அடுத்த வாரம் ஒரு கை பார்த்துடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்