சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

ரேவதியின் புதினாமல்லி சட்னி
மங்கம்மாவின் தேங்காய் பொடி

:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்கந்தா, என்னுடைய அக்கவுன்ட்டில லெமன் ரசம் (கமர் நிஷா) சேர்த்துக்கோங்க...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//யாராவது எதுக்காவது ஸ்டெப் ஸ்டெப்பா படம் எடுத்திங்களா? இருந்தா இங்க சொல்லிடுங்க, இல்லன்னா மத்தவங்களும் அதையே எடுத்துட போறாங்க ;) ஆனா இம்முறை எல்லாமே ஏறக்குறைய விளக்கபட குறிப்பு தான்... ரேவதியின் ஒரு சில குறிப்பு தான் படமில்லாதது. அடுத்த வாரம் ஒரு கை பார்த்துடலாம்.//

நேற்று பாவ் பாஜி செய்த போது, படம் எடுக்கலாம் என்று பிளான் வைத்திருந்தேன் ஆனால் என் மகளுக்கு லைப்ரரியில் அப்பாயின்ட்மென்ட்(!!) இருந்ததால் அவசரமாக சமையல் முடிக்க வேண்டியதாகி விட்டது.. :(

ஆனால் அது என்ன ஒரு கை பார்ப்பது??? இரண்டு கையையும் பார்த்தால் என்ன????

நிஜமாகவே தெரிந்துக் கொள்ள தான் கேட்கிறேன் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் பிந்து,ஸ்கந்தா வாழ்த்துக்கு நன்றி...
நேற்று இரவு சிக்கன் நூடுல்ஸ் செய்தேன்..இன்னைக்கு செட்டிநாடு புலாவ் செய்தேன்...ரெண்டும் ஹிட்...நிறைய செய்ய ஆசையா இருக்கு...ஆனால் அலுவல் காரணமாக இதான் செய்ய முடிந்தது :( :(நாலை செய்திட்டு பதிவிடுறேன்...

பிந்து, ஸ்கந்தா...

மங்கம்மாவின் வெண்டைக்காய் கறி
பிந்து அக்காவின் பூண்டு தொக்கு

இது எங்க கணக்கு :) சேர்த்து போடுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று மாலை கமர் நிஷாவோட இனிப்பு போண்டா செய்தாச்சு.
இன்று காலை மங்கமாவின் சம்பா கோதுமை ரவை அடை
ரேவதியின் புதினாமல்லி சட்னி செய்தாச்சு, நல்ல காம்பிநேஷன்.
நல்ல பகுதி பா இது நேற்றில் இருந்து எங்க வீட்டில் வித விதமான சமையல்.
மதியம் என்ன செய்யலாம்னு பாத்துட்டு இருக்கேன் செய்துட்டு வந்து பதிவு போடுறேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

என்ன இன்னைக்கு எல்லோரும் சமையலுக்கு லீவா?? அசத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது...

எல்லோரும் சீக்கிரம் வந்து என்னென்ன சமைத்து அசத்தினீர்கள் என்று சொல்லுங்கள்..

ஸ்கந்தா, கணக்கு வேலையில் உதவி தேவை என்றால் கேளுங்கள்... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து & ஸ்கந்தா,

ஈவினிங் ஸ்னாக்ஸ் (2)
மங்கம்மாவின் முளைகட்டியபயறு சுண்டல்
ரேவதியின் குழிப்பணியாரம்

நைட் டின்னர் (3)
மங்கம்மாவின் அரைத்த குடமிளகாய் கறி,
ப‌ருப்பு ர‌ச‌ம் &
அரைத்த‌ பூச‌ணிக்காய் சாம்பார்

அனைத்தும் சுவை அருமை! ஸ்னாக்ஸ்க்கு பின்னூட்ட‌ம் கொடுத்தாச்சு, டின்ன‌ர் ஐய்ட்ட‌ங்க‌ளுக்கு இனிதான் கொடுக்க‌னும் :) ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

என்னோட லிஸ்டில் பரப்பு ரசம்(மங்கம்மா), கத்திரிக்காய் புளிப்பு கறி(மங்கம்மா) சேர்த்துடுங்க. ஜெட் ஸ்பீட்ல போயிட்டு இருக்கு, இந்த வாரம் எங்க வீட்டில் அறுசுவை வாரம். மாலை சிற்றுண்டி முடுச்சுட்டு அடுத்த லிஸ்டோட வரேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

பிந்து / ஸ்கந்தா,
NIght - மங்கம்மாவின் முளைகட்டியபயறு சுண்டல்
ரேவதியின் குழிப்பணியாரம்

Lunch - பரப்பு ரசம் - மங்கம்மா,
கத்திரிக்காய் புளிப்பு கறி-மங்கம்மா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்