சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

என்னோட கணக்கில் ரேவதியின் குழிப்பணியாரம், ஈஸி பீஸா ஓகே வா.
கணக்கு சரியா இருக்கட்டும்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ஸ்கந்தா, எங்கே காணாமல் போயிட்டீங்க????

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கணக்கு போட்டுகிட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல பதிவு போடறேன் அக்கா

மிக்க நன்றி ஸ்கந்தா....
நான் ஒரு நாள் மிஸ் பண்ணிட்டேனே... இன்னைக்கு அதற்கு எல்லாம் சேர்த்து சமைக்கனும்ல.... அதுக்கு தான்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுவர்ணா!!! வாங்க வாங்க... உங்கள் வருகை நல் வரவாகுக!! புது அக்கவுன்ட் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்....
என்ன நீங்க சாரி எல்லாம் சொல்றீங்க? சாரி தான் எனக்கு பிடிக்காத பல வார்தைகளில் ஒன்று ;-)

உங்களுக்கு இல்லாத இடமா... பெரிய இடமாகவே கொடுத்திடலாம் :) மிக்க நன்றி... :D

வினோஜா,
புது அக்கவுன்ட் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.... லேட்டா வந்தாலும் இந்த ஸ்பீடில போனால் நீங்க சீக்கிரமே எங்க எல்லோரையும் தாண்டி முன்னே போய் விடலாம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரம்யா (11): ஈசி பிசா, செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, மினி பூரி மசாலா, புதினாமல்லி சட்னி, தேங்காய் பொடி, குழிப்பணியாரம், முளைகட்டியபயறு சுண்டல், கத்திரிக்காய் புளிப்பு கறி, ப‌ருப்பு ர‌ச‌ம், இனிப்பு போண்டா
அனுஷ்யா (10): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பயத்தம் பருப்பு பாயாசம், இனிப்பு போண்டா, புதினாமல்லி சட்னி, சம்பா கோதுமை ரவை அடை, ப‌ருப்பு ர‌ச‌ம், கத்திரிக்காய் புளிப்பு கறி, குழிப்பணியாரம், ஈஸி பீஸா
உமாகுணா (9): செட்டிநாடு புலாவ், சப்பாத்தி ரோல், சப்பாத்தி தால், பருப்பு ரசம், மசாலா கறி, பொங்கல் சாம்பார், மினி பூரி மசாலா, புதினா மல்லி சட்னி, அரைத்த பூசணிக்காய் சாம்பார்
பிந்து (7): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பாவ் பாஜி, மாங்காய் சாதம், அரைத்த குடைமிளகாய் கறி, தேங்காய் பால் ரசம், லெமன் ரசம்
வனிதா (7): இட்லி பொடி, புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ், தேங்காய் பொடி, எலுமிச்சை ரசம், வெண்டைக்காய் கறி, பூண்டு தொக்கு
சுஸ்ரீ (7): ஈஸி பீஸா, முட்டை பூஜ்யா, குழிப்பணியாரம், முளைகட்டியபயறு சுண்டல், அரைத்த குடமிளகாய் கறி, ப‌ருப்பு ர‌ச‌ம், அரைத்த‌ பூச‌ணிக்காய் சாம்பார்
மகாசிவா (6): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, வடகறி, குழிப்பணியாரம், பருப்பு ரசம், கத்திரிக்காய் புளிப்பு கறி
ஷமீலா (6): மினி பூரி மசாலா, செட்டிநாடு புலாவ், சிக்கன் நூடுல்ஸ், பொங்கள் சாம்பார், தவா சிக்கன், தேங்காய் பால் புளி சாதம்
இந்திரா (5): முட்டை பூஜ்யா, வடகறி, நெத்திலி குழம்பு, சிக்கன் பிரியாணி, தவா சிக்கன்
சரண்யா (4): சப்பாத்தி ரோல், புதினாமல்லி சட்னி, முட்டை பூஜ்யா, பருப்பு ரசம்
கனிமொழி (4): சிக்கன் நூட்லஸ், சம்பா கோதுமை ரவை அடை, தேங்காய் பொடி, தேங்காய்பால் புளிசாதம்
வினோஜா (4): மினி பூரி மசாலா, அரைத்த பூசணிக்காய் சாம்பார், கருனைக்கிழங்கு கட்லெட், முளைக்கீரை பொரியல்
சமீஹா (4): சப்பாத்தி தால், செட்டிநாடு புலாவ், தவா சிக்கன், சம்பா கோதுமை ரவை அடை
ஸ்கந்தா (4): முட்டை பூஜ்யா, பருப்பு ரசம், புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ்
லலிதா (2): குழிப்பணியாரம், முளைகட்டியபயிறு சுண்டல்
சுவர்ணா (2): முளைக்கீரை பொறியல், சப்பாத்தி தால்

ஸ்கந்தா,
சூப்பர், சூப்பர்... மிக்க நன்றி...
நீங்கள் தான் சகல கலா கணக்கு :D

யாருக்கேனும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கிட்டத்தட்ட வெள்ளி முடிந்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது நீங்கள் எல்லோரும் சமைத்து அசத்த...

அதனால், சீக்கிரமாக சமைத்து அசத்தி இங்கே பதிவு செய்யுங்கள்... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
என்னுடைய கணக்கில் இதை சேர்த்து கொள்ளுங்கள்...

கத்தரிக்காய் புளிப்பு கறி (மங்கம்மா )
வடகறி (ரேவதி)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நம்முடைய இந்த வார சமைத்து அசத்தலாம் முடிவு பெற இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன.....

எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைத்து பென்டிங்கில் இருக்கும் குறிப்புகளை விரைவாக செய்து விட்டு, இங்கே மறக்காது பதிவு செய்யுங்கள்...

;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்