சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

ஹாய் பிந்து,ஸ்கந்தா....கணக்கு கரக்டா இருக்கு பா :)

நேற்று இரவு இட்லி பொடி,புதினா மல்லி சட்னி செஞ்சாச்சு....சுவையாக இருந்தது....

இன்று என் கணக்கு :)

ரேவதி - புதினாமல்லி சட்னி,வாழைக்காய் தேங்காய் வறுவல்

மங்கம்மா - அரைத்த பூசணிக்காய் சாம்பார்

கமர்நிஷா - எலுமிச்சை ரசம்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிந்து, ஸகந்தா...

மங்கம்மாவின் பருப்பு ரசம் நேற்று இரவு செய்தது.
இன்று கமர் நிஷாவின் சிக்கன் பிரியாணி

கணக்கில் சேர்த்து போடுங்கோ கணக்குபிள்ளை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் ரயிலைப் புடிச்சுட்டேன் :)

இன்னிக்கு மங்கம்மா அவர்களின் அரைத்த பூசணிக்காய் சாம்பார், ரேவதியின் குழிப்பணியாரம் செய்தேன். கணக்கில் சேர்த்துக்கோங்கோ. நாளைக்கும் சமைக்க ரெசிப்பி தேர்ந்தெடுத்தாச்சு. அதை நாளைக்கு வந்து சொல்றேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மாலை ரேவதியின் குழிப்பணியாரம் :)

ஸ்கந்தா... இதுவரை போட்ட லிஸ்ட் செக் பண்ணிட்டேன். பெர்ஃபெக்ட்!! சபாஷ். இப்போ சொன்ன 3 ஐட்டமும் சேர்த்து லிஸ்ட் அப்டேட் பண்ணிக்கங்க. :) தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று சமைத்த லிஸ்டை குடக்க நேரமில்லை, அதனால் இன்று தரேன் ஸ்கந்தா கணக்குல சேத்துடுங்க.
மங்கமாவின் அரைத்த பூசணிக்காய் சாம்பார், வெண்டைக்காய் கறி.
ரேவதியின் மட்டர் பனீர்.
இன்றைய சமையல் லிஸ்ட்:
ரேவதியின் மினி பூரி மசாலா
கமர் நிஷாவின் எலுமிச்சை ரசம்
ரேவதியின் குல்பி

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

கவிசிவா,
எப்படியோ கடைசி நிமிஷத்தில வந்து ரயிலை பிடிச்சிட்டீங்க... சூப்பர் :)
உங்களை நானும் ஸ்கந்தாவும் அன்புடன் வரவேற்கிறோம்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா, என்னுடைய அக்கவுன்ட்டில, கமர் நிஷாவோட சிக்கன் பிரியாணி சேர்த்துக்கோங்க...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஏன் இந்த பகுதி இரண்டு நாளாக டல் அடிக்கிறது... எல்லோருக்கும் லாங் வீக்எண்டா இல்லை வார இறுதி நாட்கள் என்பதாலா?? ;-)

:D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்று நம் சமைத்து அசத்தலாம் பகுதி 1ன் இறுதி நாள்....

எல்லோரும் சமைத்து பதிவு போட மறந்த குறிப்புகளை இன்றே இங்கே குறிப்பிடுங்கள். சமைக்க நினைத்து பெண்டிங்கில் விட்டு வைத்தவற்றை மறக்காது இன்று சமைத்து இங்கே பதிவிடுங்கள் :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்