தேங்காய் பால் சாதம்

தேதி: August 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

அரிசி - மூன்று ஆழாக்கு
நெய் - 5 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் - எல்லாவற்றிலும் மூன்று
புதினா இலை - கால் கட்டு
கொத்தமல்லி தழை - கால் கட்டு
எலுமிச்சம்பழம் - ஒன்று
தேங்காய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு (அ) ஐந்து

அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து வைக்கவும். தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து வைத்து கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் மூன்று தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளித்து அதில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் கரம் மசாலா சேர்க்கவும்.
பச்சை வாசனை போனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து கிளறவும். பின் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
பின் அரிசி சேர்த்து கிளறி அதில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விடவும்
பின்னர் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் சிம்மில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கி கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.
இதற்கு சைட் டிஷ்ஷாக சிக்கன் 65, சிக்கன் கிரேவி சேர்த்து பரிமாறவும்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்..கனி உங்க குறிப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது....கடைசி படம் சூப்பரா இருக்கு....

தேங்காய் பால் சாதம் பார்க்கவே நல்லா இருக்கு சாப்ட்டா நிச்சயம் சூப்பரா இருக்கும். படங்களும் நல்லா தெளிவா அழகா இருக்கு...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

naan thengaai saadham kelvipatiruken, paal saadham kelvipatiruken.. but idhu 2ndayume serthu senju asathitiye da. vazhthukkal.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

தேங்காய்ப்பால் சாதம் சூப்பரா இருக்கு, நான் கசகசா சேர்த்தது இல்லை.உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் ...படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள் !

தேங்காய் பால் சாதம் ரொம்ப நல்லா வந்துஇருக்கு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க மிக்க நன்றி அட்மின் அண்ட் வெறி ஸ்பஷல் தாங்க்ஸ் டூ பத்மா மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஷமீலா அக்கா : உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இந்திரா அக்கா : ஆமா நிஜமாவே செஞ்சு சமைச்சு சாப்ட்டு பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரேவதி அக்கா : உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களின் பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்க பெயர் தெரில சாரி உங்களின் பாரட்டிற்கு மிக்க நன்றி மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிபிர்க்கு பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பரா இருக்கு. படங்கள் வர வர சூப்பராகிட்டே போகுது :) சீக்கிரமே விருதுகள் வாங்குவீங்க போலிருக்கே ;) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கடா எங்கடா வனி அக்காவ இன்னும் காணோமேனு பாத்துட்டே இருந்தேன் வந்துடீங்களா நீங்க இப்டிலாம் என்கரேஜ் பண்றது தான் என்ன இன்னும் நிறையோ சமைச்சு அனுப்பனும் நு மோடிவ் பணுது சோ அதுக்கு ஒரு ஸ்பஷல் தாங்க்ஸ் அக்கா அப்புறம் உங்களோட பாராட்டிற்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

kani moor kuzhmpu seiththooda sari,ithaium,easy chickenum try pannittu solreen ,vaazhththukkal kani

கனி
படங்கள் அருமை.
சாதத்துடன் சைட் டிஷ்ஷும் சேர்த்து இப்படி கொடுத்தா எனக்கு ரெண்டு வயிறு வந்திடும்.அப்பறம் நிறையா சாப்பிடலாம் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சரண்யா மிக்க நன்றி நீங்க மோர் குழம்பு ட்ரை பணத்துக்கு அத போலவே இதையும் நீங்க ட்ரை பண்ணுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரம்யா அக்கா நல்லா சாப்டா தானா ஹெல்தியா இருக்க முடியும் தாங்க்ஸ் அக்கா உங்களோட பதிவிற்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி,
அழகா செய்து பரிமாறி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கனிமொழி,

தேங்காய்பால் சாதம் அட்டகாசமா இருக்கு! :)
படங்கள் அத்தனையும் பளிச் பளிச்! கடைசிப்படம் ப்ரசண்டேஷன் வெகு அழகு! பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கவிதா அக்கா உங்களின் பதிவிற்கு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுஸ்ரீ அக்கா உங்களின் பத்விர்க்கு மிக்க நன்றி அண்ட் உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி தேங்காய் பால் சாதம் பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா அக்கா உங்களின் பதிவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்னிக்கி உன் தேங்காய் பால் சாதம் செஞ்சேன் நல்ல சுவையா இருந்துச்சி.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.