சிக்கன் கிரேவி

தேதி: August 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (12 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
வர மிளகாய் - 4
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காயைத் துருவி பாலெடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விடவும். பின் வெங்காயம், வர மிளகாயை போட்டு வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் சிக்கனை சேர்த்து வதங்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சிக்கன் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
மிளகாய்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக ஆகும் வரை கொதிக்க விடவும்.
இப்போது காரசாரமான சிக்கன் தேங்காய் பால் கிரேவி தயார். சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

பட்டை, கிராம்பு போன்ற எந்த வாசனை பொருட்களும் சேர்க்காத எளிமையான குறிப்பு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு என் முதற்கண் நன்றி....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மிக மிக .....எளிமையான,சுவையான குறிப்பு.இந்த முறைப்படி குக்கரில் வைத்தால் வெகு சீக்கிரமாகவே செய்திடலாம் போலே ...... வாழ்த்துக்கள் !

விப்ஜி வாழ்த்திற்கு மிக்க நன்றி:-))

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
குறிப்பு அருமை............... முதல் குறிப்பா...................அசத்துங்க...................பாபா எப்படி இருக்கு......

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு வாழ்த்துக்கு நன்றி. இது மூன்றாவது குறிப்பு. பாப்பா நல்லா இருக்கா.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

chicken gravy superbbbbbbbbbbbbbbbbbbbb........ enaku patta, sombu, kirambu taste pidikadhungo.... neenga enaku eetha madhiri senjurukinga..... nice.....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வாழ்த்துக்கு நன்றி ரேவதி.உங்களுக்கு ஏத்த குறிப்பா அப்போ நிச்சயம் செஞ்சி பாருங்க உங்களுக்கு பிடிக்கும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இது சிக்கன் வாரமா?கிரேவி ரொம்ப நல்லா வந்துஇருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

//இது சிக்கன் வாரமா//அப்படித்தான் நானும் நினைக்கிறேன் எல்லாரும் ஒரே சிக்கன் குறிப்பா அனுப்புறாங்க என்னயும் சேத்துதான்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா அக்கா : அட அட என்னமா நம்ம சிக்கன் மினுறாரு சூப்பர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப சுலபமான சிக்கன். இதே முறையில் (வரமிளகாய் சேர்ப்பது) செல்வி குறிப்பு ஒன்னு செய்திருக்கேன். ஆனால் அது தூள் இல்லாமல் ட்ரையா ஃப்ரை மாதிரி இருக்கும். இது நல்லா இருக்கு, டிஃபரண்ட்டா. அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிக்கன் கிரேவி பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு. பார்ட்டிக்கு ஏற்ற டிஷ். பார்ட்டி வைக்கும் போது கண்டிப்பா செய்து பாக்குறேன், வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

வாழ்த்துக்கு மிக்க நன்றி... செஞ்சி பாத்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அனுஜெய் வாழ்த்துக்கு மிக்க நன்றி... ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த்ரா
நம்ம சிக்கன் செய்யாம இருப்போமா?
அவசியம் செய்து பார்க்கிறேன்.
யம்மி சிக்கன்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கு நன்றி... அவசியம் செய்து பார்த்துட்டு எப்படி இருந்துச்சினு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
சிக்கன் குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக எளிமையான குறிப்பு,வழ்த்துக்கள் இந்திரா.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Nalla Thelivana Padangal Colourfulla irukku.Try pannitu Solren .Vaalthukkal Indira:)

"Happiness is a habit, cultivate it"

வாழ்த்திற்கு மிக்க நன்றி... செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா சூப்பரான டிஷ்க்கு முதலில் வாழ்த்துக்கள். இன்றைக்கு செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது. மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்

வாழ்த்திற்கு நன்றி. செஞ்சி பார்த்து பிடிச்சி இருக்குனு பதிவிட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு. தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.