எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

சமீஹா:எனக்கு கோழி சூப் ரொம்ப புடிக்கும்...அதுவும் நாட்டு கோழி வேற...:)..நான் ஆபிஸ் க்கு சாம்பார்,உருளை வறுவல் தான் கொண்டு வந்தேன்...
இந்து : பரவாயில்லை....மறதி எல்லோருக்கும் இருக்கிர்றது தானே....

இந்திரா என்ன இப்படி கேட்டுட்டீங்க...?
நம்ம இந்திராக்கு கொடுக்காமலா?சூப் ஒரு பார்செல் அனுப்பிடவா ?

அச்சச்சோ...! நீங்க நீங்க சவுதில இருக்கீங்களா! சூப் கெட்டு போயிடுமே......

இப்போ என்ன செய்வது????? சரி ஒன்னும் பிரச்சனை இல்லை...
நீங்க எப்போ ஊருக்கு வருவீங்க என்று சொல்லுங்க நானே என் கையால் சமைத்து கொண்டு வரேன்.
சரியா.....!

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ஜீரக சம்பா அரிசி வைத்து குக்கர்ல பிரியானி பண்ணும் போது பாசுமதி அரிசி போல 1:2 அளவில் தண்ணீர் சேர்த்தால் குழயாமல் வருமா தெரிந்தவர்கல் சொல்லுஙக

சீரக சம்பான்னு இல்லைங்க எல்லா அரிசிகும் 1:2 ரேஷியோ சரியா தான் வரும். ஆனால் எதுக்கும் கொஞ்சமா தனியா செய்து பார்த்து தண்ணி அளவை சரி பண்ணிக்கங்க. ஏன்னா சீரக சம்பாவா இருந்தாலும் சரி, பொன்னியா இருந்தாலும் சரி, பச்சரிசி, பாசுமதி எதுவா இருந்தாலும் சரி... அரிசீக்கு அரிசி நீர் அளவு கொஞ்சம் மாறும். அரிசி எந்த அளவு பழசு, எவ்வளவு காய்ந்திருக்கு, என்ன வகை அரிசி என எல்லாம் இருக்கு. இப்போ நான் பொன்னி அரிசிக்கு குக்கரில் 1:3 வைக்கிறேன் ;) அப்ப தான் விதை விதையா இல்லாம வெந்து வருது. இப்போ நான் சொல்ல வருவது புரியுது தானே? தனியா 1/4 கப் அரிசியை வெச்சு 1/2 கப் நீர் விட்டு பாருங்க. எப்படி வருதுன்னு தெரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அச்சச்சோ...! நீங்க நீங்க சவுதில இருக்கீங்களா! சூப் கெட்டு போயிடுமே......

இப்போ என்ன செய்வது????? சரி ஒன்னும் பிரச்சனை இல்லை...// - முடியல... வர வர உங்க லொல்லு தாங்க முடியல ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா வாங்க வாங்க உங்க பையனுக்கு தேவலையாக்கா?டாக்டரிடம் போனீங்களா?

நான் உங்களை பார்த்ததில்லை உங்க கூட பேசியதும் இல்லை ஆனால் உங்க குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னதிலிருந்து எனக்கு மனசு ரொம்ப வேதனையா இருக்கு.

என்னையும் அறியாமல் திடீரென்று ஒரு கவலை வருது என்னவென்று யோசித்தால் உங்க நியாபகமும் உங்கள் பையன் நியாபகமும் வருதுக்கா.அந்த செகென்டே உங்க பையனுக்காக அல்லாஹ் விடம் நான் நான் துஆ கேட்டுவிடுகிறேன்.

//// வர வர உங்க லொல்லு தாங்க முடியல ;)////

என்ன செய்வதுக்கா உங்கள மாதிரி பல திறமையா என்னிடம் இருக்கு சோ இப்படி பேசினால் தானே நானும் கொஞ்சம் அருசுவையில் மறக்க முடியாத தோழியாக இருக்க முடியும்

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

vanitha akka ungaluku enna ninaivu irukiratha?

All is well

நன்றி வனிதா அக்கா
1 கிலோ சீரக சம்பா வாங்கி வைத்து விட்டு ஒரே குழப்பம். இந்த வெள்ளி கிழமை செய்து பார்கிறேன்.
குட்டி பையன் சுகம் ஆகி விட்டானா.

ஹாய் ஷமிலா,ஷமிகா,இந்து யாராது அரட்டைல இருக்கிங்கலா?

அஸ்ஸலாமு அலைக்கும் ஷபானா நல்லா இருக்கீங்களா.நான் இவ்லோ நேரம் இருந்தேன் பா பட் இப்பொ நான் என் ஃப்ரன்டை பார்க்க வெளிலே போறேன்

ஆனால் என்ன ஒற்றுமை பாருங்க அவ பேரும் ஷபானா தான் .

சரி பா நான் போய்ட்டு வரெனன் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லஹ் நாம் இன்னொரு டைம் கன்டிப்பா பேசலாம் ஓகே சாரிமா பை

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

மேலும் சில பதிவுகள்