மறதி

அன்பு தோழிகளுக்கு வணக்கம் . என் வேலை பழுவின் காரணமாக எனக்கு ரொம்ப மறதி ஆகிவிட்டது . எனக்கே தெரிகிறது என்ன செய்யலாம் மறதிய சரி செய்ய உதவுங்கள் தோழிகளே

எவ்வளவு வேலை இருந்தாலும் ரிலாக்ஸா செய்யுங்க.அய்யோ இவ்வளவு வேலையா அப்படினு நினைக்காதீங்க அப்படி நினச்சாலே ஈஸியான வேலை கூட கஷ்டம் ஆயிடும். அப்புறம் மன அழுத்தம் வரும் அதனால தான் மறதி வரும். அதனால வேலைய நினச்சி டென்சன் ஆகாம இருந்தாலே மறதி காணாம போயிடும். இதெல்லாம் என் அனுபவத்துல தான் சொல்றேன். நான் ஏதாவது விஷயத்துக்காக டென்சன் ஆனாலோ கோவப்பட்டாலோ எனக்கு ஒரு சின்ன விஷயம் கூட நியாபகம் இருக்காது.ஆனாலும் கோவப்படுறத குறைக்க முடியல என்ன பண்ண?நான் முடிஞ்சவரை இத தான் ஃபாலோ பன்றேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முன்னாடியெ plan பண்ணி வேலை செய்யலாம்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

எந்த ஒரு பொருளை எடுத்தாலும் வைத்தாலும் எப்பொழுதும் ஒரே இடமாக இருக்க பழக்கபடுத்தி கொள்ளுங்கள்.இது நியாபக சக்தியை அதிகபடுத்தும்.

அப்படியே எந்த ஒரு பொருளை கானோம் என்றாலும் பதட்டதுடன் எல்லா இடத்திலும் தேடாமல் நன்றாக யோசித்து நாம் எங்கெல்லாம் சென்றோம் நம்மயும் அறியாமல் எங்கெல்லாம் செல்வோம் உதாரனத்திற்க்கு ஏதாவது வேலையை மனதி வைத்து கொண்டு ஸ்டோர் ரூம் செல்வோம் ஆனால் அதை முடிக்காமலே திரும்பிடுவோம் அப்பொழுது உங்கள் கைகள் உங்கலையும் அறியாமல் அங்கே வைத்திடும் இப்படி யோசித்து பாருங்கள்.

வல்லாரை கீரை சாப்பிடுங்கள்.யோகா பண்ணுங்கள்.

நீங்கள் அடுப்பில் பால் வைத்து விட்டு ஹால் அல்லது ரூமுக்கு செல்வதாக இருந்தால் அந்த கரண்டியையும் சேர்த்து கொண்டு செல்லுங்க அதை பார்க்க பார்க்க அடுப்பில் பால் வைத்த நியாபகம் இருக்கும்

என் ஹஸ் ஊரில் இருந்தா நான் இப்படி தான் செய்வேன்.

ட்ரை பண்ணி பாருங்க

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

இந்து கார்த்திகா ssameeha ரொம்ப நன்றிகள் எனக்கு அட்வைஸ் பண்ணதுக்கு . கண்டிப்பா நீங்க சொன்ன மாதுரி ட்ரை பண்றேன்.
இந்து : கண்டிப்பா இந்து நீங்க சொல்ற மாதுரி தான் நெறைய வொர்க் வரும் பொது டென்ஷன் ஆயிர அப்புறம் தலை வலி வேற இதுனால வந்துருசு. எங்க ஹோமேல எதுக்கு எடுத்தாலும் அனிதா அனிதா நு கூபிட்டே இருபாங்க . மாமா அத்தை முடியாது நீங்க பாருங்க அந்த வோர்க்னு சொல்லவும் முடியல. அட்ஜஸ்ட் பண்ணியே ஓடுது லைப். இதுல அத்தை ஒரு வொர்க் மாமா ஒரு வொர்க் என் ஹஷ் ஒரு வொர்க் தந்துருபாங்க. நான் வேற ஒன்னு நெனசுடு போவேன். கடைசில ஏதாசு மாத்தி சென்சுருவேன்.
கார்த்தி : இப்ப எல்லாம் பிளான் போட்டு தான் பண்றேன் . ஆபீஸ் வொர்க் வேற .
24 மணி நேரம் எனக்கு லைப் ல பத்த மடிங்குது . என் ஹெல்த் வேற வர வர எனக்கு உதவ மடிங்குது
ssameeha : நீங்க சொன்ன ஐடியா சூப்பர் . அத இனிமேல் ட்ரை பண்ண போறேன்
யோகா பண்ணலாம் ஆன எனக்கு டைம் பத்தாது. இருந்தாலும் ட்ரை பன்னுவேன். நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்