ஈவ்னிங் வாக்கிங்.....

தோழிகள் யாராது பதில் அளியுங்கள்.நானும்,என் கணவரும் வாக்கிங் செல்கிறோம்.எங்களுக்கு 8pm தான் டைம் கிடைக்கிறது,நாங்கள் செல்கிறோம்.என் சந்தேகம் என்னவென்றால் நாங்கள் எப்படி டின்னர் எடுத்து கொள்வது.சாப்பிட்டு செல்வத,இல்லை சாப்பிட்ட பிறகு செல்வதா[இதி்ல் எது நல்லது கூறவும்] என்று குழப்பமாக உள்ளது..பதில் கூறவும்..

வாக்கிங் போய்விட்டு வந்து அரைமணி நேரம் கழித்து டின்னர் சாப்பிடவும்.நாங்கள் இப்படித்தான் செய்வோம். சாப்பிட்டவுடன் வாக்கிங் போக கூடாது.அப்படி போவதென்ரால் சாப்பிட்டு ஒருமணி நேரம் ஆனபின்பு தான் போகனும்.எப்போதும் எம்டி ஸ்மக்குடன் வாக்கிங் போவது தான் சிறந்தது.அதே போல் போய்ட்டு வந்தவுடன் சாப்பிடகூடாது.அரை மணினேரம் கழித்து டின்னர் சாப்பிடுங்கள்.

நன்றி ப்ரவின் பானு..சாப்பிட்டு 1மணிநேரம் களித்து தூங்க செல்வது பயன் அளிக்கும் தானே?.

ஷபானா,

சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் தூங்க வேண்டும் என்றால்,லைட் டின்னர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்,ஹெவியாக சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரத்தில் தூங்க வேண்டாம்.

ஆமாங்க வாணி சொல்வது சரி ஒரு மணி நேரத்தில் சாப்பாடு ஜீரனம் ஆகாது .1 1/2 மணி நேரத்திர்க்கு மேலே ஆகும்.சும்மா படுத்து ரிலாக்ஸ் பன்னுங்க அப்பரம் தூங்குங்க.

மேலும் சில பதிவுகள்