கிரி அலுவா

தேதி: August 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.9 (7 votes)

 

கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்)
சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
முந்திரி - ஒரு கைப்பிடி
பட்டர் - 20 கிராம்


 

திக் பாட்டம் உள்ள நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரையுடன் 3 மேசைக்கரண்டி நீர் விட்டு கரைய விடவும். ஒரு தட்டிலும், ஒரு கத்தியிலும் சிறிது வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும். சர்க்கரை கரைந்ததும் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் வெண்ணெய் சேர்த்து சிறுந்தீயில் வைத்து கலக்கவும்.
சிறிது நேரத்தில் பொங்கி வரும். கலந்து கொண்டே இருக்க வேண்டும். பாத்திரம் சற்று ஆழமானதாக இருந்தால் நல்லது.
சிறிது சிறிதாக கெட்டியாகி கொண்டே வரும். 15 நிமிடத்துக்கு மேல் எடுக்கும். நன்று கெட்டியாகும் போது பொடியாக நறுக்கிய முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்த சில நொடிகளில் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
உடனே எடுத்து வெண்ணெய் தடவிய தட்டில் பரப்பி, வெண்ணெய் தடவிய கத்தியால் மேல் பக்கம் தேய்த்து சமமாக்கவும். சூடு இருக்கும் போதே மேலே லேசான கோடு போட்டு வைக்கவும். எனக்கு 1 1/2 இன்ச் அளவில் 12 சதுர துண்டுகள் கிடைத்தது.
மிதமான சூடுக்கு வந்ததும், அல்லது ஆறியதும் கத்தியால் கோடு போட்ட இடத்தில் அழுத்தி வெட்டி துண்டுகளாக்கவும். சுவையான கிரி அலுவா தயார். இது ரொம்ப சாஃப்ட்டாக இருக்காது, அதே சமயம் கெட்டியாகவும் இருக்காது. சிறு வயதில் பச்சை நிற காகிதம் சுற்றி ஒரு சாக்லேட் கிடைக்கும், இப்போது கிடைப்பதில்லை, ஏறக்குறைய அதே சுவை வரும்.

இவர் இலங்கையை சேர்ந்தவர். ஆனால் மாலத்திவிலும் மிக பிரபலம். குடிசை தொழில் போல் இந்த “Home made Milk Toffee" செய்யப்படுகிறது. இங்கும் இதே பெயர் தான் Kiri aluwa. Kiri என்றால் பால், aluwa என்றால் அல்வா / இனிப்பு. இதில் 1/4 கப் சர்க்கரையே ரொம்ப இனிப்பு அதிகமா எனக்கு தோன்றியது. ஆனால் இதை விட அதிக சர்க்கரை சேர்க்கிறார்கள். 1 டின் கண்டன்ஸ்டு மில்க் என்றால் 250 கிராம் சர்க்கரை சேர்க்கிறார்கள். 1 பீஸ் சாப்பிட்டாலே திகட்ட துவங்கிடும். அதிக இனிப்பு விரும்புபவர்கள் சேர்க்கலாம். விரும்பினால் இதில் சிறிது கோக்கோ பவுடரும் சேர்க்கலாம்.
செய்ய ஆரம்பிக்கும் முன்பே எல்லாம் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் வைத்த பின் இடையே எந்த வேலைக்கும் திரும்ப இயலாது. கிளறிக்கொண்டே இருக்கவும். சிறுந்தீயில் மட்டுமே வைக்கவும். தீ கூடினால் நன்றாக வராது. இதையே மைக்ரோவேவிலும் செய்யலாம். அது இன்னும் சுலபம். எல்லாம் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் ஹையில் 4 நிமிடம் வைக்கவும். நல்ல குழியான பாத்திரம் பயன்படுத்தவும். எடுத்து கலந்து விட்டு மீண்டும் 4 நிமிடம் வைக்கவும். பதம் வரும் வரை பார்த்து பார்த்து கலந்து வைக்கவும். அதிக பட்சம் 8 நிமிடம் தான் ஆகும். கடைசியாக முந்திரி சேர்க்கவும்.
முந்திரியை வறுத்தும் சேர்க்கலாம். வாசம் நன்றாக இருக்கும். தட்டில் கொட்டிய உடனே பரப்பி விடவும். இல்லை எனில் பரப்ப வராது, உடனே கெட்டியாகும் தன்மையுடையது. இதை வெளியேவே காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிரி அலுவா அசத்தலா இருக்கு...வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நலமா அலுவா ரொம்ப அற்புதமா இருக்கு ஒவ்வொரு படமும் பார்க்க எடுத்து டேஸ்ட் பண்ணிடலாமானு தோணுது சூபர் சுவையான குறிப்பு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

வனி கிரி அலவா சூப்பர் .உங்க குறிப்புல ஹைலைடே உங்க பின் குறிப்புதான். எந்த சந்தெகமும் வராத மாதிரி விள்க்கமா சொல்லிடறிங்க... எனக்கு ஒரு சந்தேகம் இது நாந்ஸ்டிக் பாத்திரத்தில்தான் செய்யனுமா... சீக்கிரம் டிரை பண்ணிடரங்கோ.

Be simple be sample

கிரி அலுவா,சாப்பிடனும் போல இருக்கு வனி.ரொம்ப தெளிவான விலக்கம்,அசத்துறீங்க,,

வனி,
சிம்ப்ளி சூப்பர்!!!அவசியம் செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப சிம்பிளாவும் டேஸ்டியாவும் இருக்கு

வனி
கிஃப்ட் மாதிரி ஸ்வீட் கொடுத்தா வேணாம்னு சொல்ல முடியுமா?
எப்படி அலங்கரிக்கனும்னு உங்ககிட்ட தான் கத்துக்கணும் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலக்குறீங்க வனி.

‍- இமா க்றிஸ்

கிரி அலுவா, ஆள அசத்துது வனி! :) சிம்பிள் அன்ட் கலக்கல் குறிப்பு.
அவசியம் செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா அக்கா சூபரா இருக்கு கிரி அலுவா ஈசி அண்ட் சிம்பிள் ஸ்வீட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) முதல் பதிவு இப்பலாம் உங்களுடையதாக தான் இருக்கு. மகிழ்ச்சி இந்திரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா... ரொம்ப நாளைக்கு பின் பார்க்கிறோம். வேலையெல்லாம் எப்படி போகுது? :) அவசியம் செய்தும் பாருங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்யும் போது ஃபேஸ் பண்ற விஷயங்கள் தான் சொல்றேன், புதுசா ட்ரை பண்றவங்க அதை எல்லாம் மிஸ் பண்ணாம இருக்க தான். உதவினால் மகிழ்ச்சியே. நான்-ஸ்டிக் தான் நல்லா திரண்டு வரும். சாதா பாத்திரத்தில் என்றால் வெண்ணெய் கூட விட வேண்டி வரும். இல்லன்னா நிறைய ஒட்டும். நான்-ஸ்டிக் பயன்படுத்தியே செய்யுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து சாப்பிடுங்க, கட்டாயம் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பாருங்க குட்டீஸ்கு பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஆமாம் செய்வது ரொம்ப சுலபம். செய்து பாருங்க பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. //எப்படி அலங்கரிக்கனும்னு உங்ககிட்ட தான் கத்துக்கணும் ;)// - ஏதோ கைக்கு கிடைக்குறதை வெச்சு எதையாவது பண்றேன்... என்கிட்ட கத்துக்க என்ன இருக்கு. ஒவ்வொரு முறை ரிஸார்ட் போகும் போது அவங்க ஃப்ரூட்ஸ், டெஸர்ட்ஸ் ஏரியாவில் செய்து வைக்கிறதை எல்லாம் பார்த்தா அப்படியே அசந்துருவோம். அத்தனை அழகா உணவை அலங்கரிக்கறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,கலக்குறிங்க.........

கிரி அலுவா பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு :) எப்போவும் போல அழகாக ப்ரசன்ட் பன்னி இருக்கிங்க............

மிக்க நன்றி. நான் மாலேவில் சாப்பிட்டிருக்கேன், சித்ரா வேலை பார்த்தப்போ எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுத்தாங்க. இலங்கை போன போது அங்க இதை வேறு விதமா பேக் பண்ணி வெச்சிருந்தாங்க.... பார்த்தேன், சுவைத்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பாருங்க, குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. எங்க வீட்டில் தினமும் ஆபீஸ் போகும் முன் ஒன்னு, போய் வந்து ஒன்னுன்னு ரெகுலரா போயிகிட்டு இருக்கும். இந்த முறை தீந்து போய் இன்னும் செய்யல, இவரு கேட்டுகிட்டே இருக்கார் மிட்டாய் எங்கன்னு ;) யார் சின்ன பிள்ளை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொலுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இந்த சிம்பிள் குறிப்பு இத்தனை பேருக்கு பிடிக்கும்னு எதிர் பார்க்கல :) மகிழ்ச்சி. பார்த்தா சாப்பிட முடியாது, அதனால் செய்து சாப்பிடுங்க :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ஸ்வீட், இப்படி ஒரு ஸ்வீட்டான ஸ்வீட்ட பாத்துட்டு செய்து பார்க்காமல் இருந்தா அது ஸ்வீட்டுக்கு பண்ற துரோகம், செய்து பாத்துட்டு சொல்றேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

மிக்க நன்றி. துரோகம் எல்லாம் பண்ண கூடாது... அதனால் சீக்கிரமே செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிரி அலுவா அருமையான குறிப்பு அக்கா . இப்படியே தொடர்ந்து கலக்கலான குறிப்புகளை கொடுத்து கொண்டே இருந்தால் நாங்கள் என்ன செய்வது....?பார்த்து விட்டு சும்மா இருக்க முடியலையே ..../ உண்மையாகவே சுவைக்க தூண்டுகிறது :)

மிக்க நன்றி :) அறுசுவையில் வரும் எல்லா குறிப்பும் கலக்கலா தான் இருக்கு, சும்மா இருக்க முடியுமா? நாம செய்து சாப்பிட்டுகிட்டே இருக்க வேண்டியது தான் ;) இதையும் செய்து சாப்பிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வென்று சொல்வதம்மா
வனி அக்கா கை பக்குவதை......
சுசுசுசுசுசுப்பர், டயட்ல இருக்கேன், டயட் முடியட்டும் கண்டிப்பா செய்துபார்கிறேன்

மிக்க நன்றி :) அவசியம் டயட் முடிஞ்சதும் செய்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லாயிருக்கீங்களா?,நல்ல குறிப்பு,மைக்ரோவேவில் ட்ரை பண்ணிட்டுஎப்படி இருந்த்ததுன்னு நாளை சொல்றேன்.உங்க குறிப்பு நிச்சயமா நல்லா தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி... உங்க நம்பிக்கைக்கும் சேர்த்து :)

நலமா இருக்கீங்களா? எங்க உங்களை காண முடியல?? வாங்க அடிக்கடி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கிரி அலுவா சூப்பர் அதைவிட பிரசெண்டேசன் ரொம்ப அழகு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. :) நலமா இருக்கீங்களா? இன்னும் பிசியா போகுதா? எல்லாரும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா