அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

ஹலோ, அனைவருக்கும் இனிய காலை / மாலை வணக்கங்கள்...

இன்று முழுக்க பிந்து பிஸி ;-) எல்லோரும் ஒழுங்கா சமையல் முடித்து விட்டு, நம்ம சமைத்து அசத்தலாம்ல பதிவு போடுங்க...

வனிதா தங்கச்சி, உங்க கை வலியை உங்க லலி தங்கச்சிக்கு கொடுத்துட்டீங்க போல :(

ம்ம்ம்... உங்க தங்கச்சி பேர் வசுதவா???? நிறைய ரமணி சந்திரன் கதையில ஹீரோயின் பேர் வசுதா தான் :) சரி இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க அதை கஷ்டப்பட்டு டைப் செய்யவே வேண்டாம் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வசுமதி அவ பேரு. நாவலில் வந்த பேரு தான். அம்மா கல்யாணம் ஆன புதிதில் நிறைய நாவல் படிப்பாங்க. பல நாவல்களை தொடர்ச்சியா கலக்ட் பண்ணி பைண்ட் பண்ணி வீட்டில் 2 பெரிய மர பெட்டிகளில் வெச்சிருந்தாங்க. உறவுகள் எல்லாம் கொண்டு போய் இப்போ பெட்டி தான் மிச்சம். நீங்க பிரபலமா சொல்லும் எல்லா எழுத்தாலருடைய நாவல்களும், அத்தனை பிரபலமான நாவல்களும் அம்மாவிடம் ஒரு பேப்பர் மிஸ் ஆகாம இருந்தது. இப்போ அதெல்லாம் ரொம்ப விலை அதிகம்... லைப்ரரில தான் பிடிக்க முடியும்... அதான் கையில் கிடைச்சதை ஆளுக்கு ஒன்னா தள்ளிட்டு போயிட்டாங்க. அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க அதை ஏன் கிராமத்தில் கொண்டு போய் வெச்சோம்னு.

நிறைய க்ரைம் நாவல்கள் நாங்க படிக்க கூடாதுன்னு பைப் போட தோண்டிய குழியில் போட்டு மூடப்பட்டது. :) இது போல் க்ளாசிக் நாவல்கள் தான் அவங்ககிட்ட பத்திரமா இருந்தது. எங்க அம்மாக்கு இது ஒரு அடிக்‌ஷன் மாதிரி... புக்ஸ் படிப்பது. எங்களுக்கு விவரம் புரிஞ்சு அதெல்லாம் கையில் எடுக்கும்வரை அவங்க படிச்சாங்க. நாங்க எடுக்குறது அவங்களுக்கு விருப்பமில்லை... இன்னும் மெசுரிட்டி வேணும் எங்களுக்கு என்ற நிலையில் எங்களுக்காக படிப்பதை விட்டுட்டங்க.

//நிறைய ரமணி சந்திரன் கதையில ஹீரோயின் பேர் வசுதா தான் :) சரி இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க அதை கஷ்டப்பட்டு டைப் செய்யவே வேண்டாம் ;-)// - இந்த பதிலை எதிர் பார்த்திருக்க மாட்டீங்களே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:O நிஜம் தான் எதிர்பார்க்கவில்லை... அப்புறம் எப்படி நீங்க மட்டும் இப்படி??? :P ஒரு வேளை உங்கள் தங்கைக்கு படிக்கும் பழக்கம் இருக்கிறதோ???

எங்க வீட்டில் எங்க அப்பா செல்ப் செல்பா புக்ஸ் வச்சிருக்கார்.. சின்ன வயசில் இருந்தே எங்க எல்லோருக்கும் படிக்கும் பழக்கம் வந்ததே அவரால் தான்... ஊரில் பெரியப்பா வீட்டில் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கிறது... எங்க வீட்டில் இருக்கும் பைண்ட் செய்த புத்தகங்கள் எல்லாம் நான் வளரும் போது பல வார இதழ்களில் வந்தது... ஆனால் பெரியப்பாவிடம் இருப்பவை எல்லாம் நீங்கள் சொல்வது போல் பழைய புத்தகங்கள்... சிறு வயதில் அங்கு படித்த சில கதைகளை தேடுகிறேன் எங்கும் மாட்ட தான் மாட்டேங்கிறது...

என்னுடைய கணவரும் நிறைய புத்தகங்கள் வைத்திருக்கிறார் ஆனால் அவை எல்லாமே personality dev / career oriented புத்தகங்கள். அதை பார்த்தாலே எனக்கு தூக்கம் வரும் :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

:) அந்த எக்ஸ்ட்ரா பத்தி நான் கவனிக்கவில்லை...
உங்க மேல் உங்க அம்மாக்கு அவ்வளவு நல்ல எண்ணம் போல ;-) சும்மா தான் சொன்னேன் :)

எங்கள் வீட்டில் பொதுவாக சிறுவயதில், சம்மர் லீவ் நேரத்தில் அப்பா ஆபிஸ் லைப்ரரியில் இருந்து நான் கேட்கும் எழுத்தாளரின் புத்தகம் எடுத்து வருவார்.. ஆப்புறம் சின்ன அக்கா recommend செய்த கதைகள் என்று அப்படியே படிக்கும் பழக்கம் தொடர்ந்து விட்டது :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எங்க வீட்டில் எல்லா புக்கும் இருந்தது. வார இதழ் மாத இதழ் நாவல்னு ஒன்னும் விட மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு நான் 11ஆவது படிக்கும் போது வரை அம்மா பைண்ட் பண்ணி வெச்சுகிட்டிருந்தாங்க.

எங்க முன்னாடி அம்மா படிச்சதில்லை... நாங்க வீட்டில் இருக்கும் போது அம்மா தான் எங்களூக்கு பாடம் சொல்லி கொடுப்பாங்க. நாங்க ஸ்கூல் போன பிறகு, தூங்கின பிறகு தான் அம்மா படிப்பாங்க. நாங்க எடுத்தா கூட “அதெல்லாம் படிக்க இன்னும் வயசிருக்கு”னு சொல்வாங்க.

எங்க இருவருக்குமே புத்தகம் படிக்க பிடிக்காது... பாட புத்தகம் முதல் கதை புத்தகம் வரை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:) ம்ம்ம்ம்.... ரொம்ப ஸ்ட்ரிக்டான அம்மா போல இருக்கு :P ஆனாலும் ஆச்சர்யமாக தான இருக்கு ;-)

ஒரு வேளை அது தான் அம்மாக்கும் அப்பாக்கும் வித்தியாசமோ என்னவோ... எங்க வீட்டில் எங்க அம்மா கதைகள் படிக்க மாட்டாங்க பேப்பர், மேகசின்ஸ் அதோட சரி... அப்பாக்கு மட்டும் தான் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்...

எனக்கு கதை புத்தகம் பிடிக்கும் ஆனால் அந்த இன்னொரு புத்தகம் சொல்லி இருக்கீங்களே அது ரொம்ப அலர்ஜி :) என்னுடைய சின்ன அக்கா இரண்டு வகை புத்தகங்களும் படிப்பாள்.. பெரிய அக்கா வெறும் பாட புத்தகங்கள் தான்... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் க்ரைம் நாவல்கள் படிச்சது உண்டு... நீண்ட பயணங்களின் போது. படிக்கும் காலத்தில் கல்லூரியில் பழக்கம். கல்யாணத்துக்கு பின் இவரும் கேட்டா வாங்கி தருவார். இப்போ அதையும் விட்டுட்டேன். நேரம் இல்லை அறுசுவையில் வந்த பிறகு புக் படிக்க எல்லாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:) ம்ம்ம்ம்.. இது எல்லாம் ஆர்வத்தை பொறுத்தது தானே... உங்களுடைய 100% focus அறுசுவை.... :-) நல்லது தான்... :)

அது சரி, உங்கள் அம்மா அறுசுவை அரட்டை பக்கம் எல்லாம் படிப்பாங்களா??? தப்பா எடுத்துக்க போறாங்க :) நான் சும்மா தான் சொன்னேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எங்க வீட்டில் அறுசுவை என்னை தவிற பார்ப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் யாரும் இல்லை.

என்ன சமையல் இன்னைக்கு? நான் நைட் என்ன பண்ணலாம்னு ஒரே குழப்பத்தில் இருக்கேன்.

---------------

சரிங்க... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன் :)

சுஸ்ரீ வந்திருக்காங்க அரட்டை பக்கம் காணோமே...

லலியும் காணோம் இன்னும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னும் நான் சமையல் பற்றி யோசிக்கவே இல்லை :)

இப்போதைக்கு இங்கே கத்தரிக்காய், தக்காளி, broccoli தான் இருக்கு... மே பீ கத்தரிக்காய் புளிப்பு கறியும், சாம்பாரும் செய்ய வேண்டியது தான் :)

லலிதா பொதுவாக கொஞ்சம் லேட்டாக தான் வருவார்கள்... சுஸ்ரீ சமைத்து அசத்தலாம் பக்கம் பதிவு போட வந்திருப்பார்கள். கொஞ்சம் நேரம் கழித்து ப்ரீயாக இருக்கும் பொது அரட்டை பக்கம் வருவார்கள்..

எல்லாம் என் ஊகம் தான்...;-)

சரி நீங்கள் வேலையை பாருங்கள்.. அப்புறம் பேசுவோம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்