காகித ரோஜாக்கள் பாகம் - 1

தேதி: August 30, 2012

4
Average: 3.6 (7 votes)

 

கலர் காகிதங்கள்
டூத் பிக்

 

முதலில் ஒரு A4 காகிதத்தை சதுரமாக நறுக்கவும். அந்த சதுர பேப்பரை 4 துண்டுகளாக வெட்டி வைக்கவும். இந்த அளவில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் காகித்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள ஒரு சதுரத்தை எடுத்து அதை முக்கோணமாக மடிக்கவும். விரித்து அடுத்த பக்கம் இதே போல் முக்கோணமாக மடிக்கவும். ‘X’ இந்த வடிவில் கோடுகள் இருக்கும்.
விரித்து செவ்வகமாக மடிக்கவும். மீண்டும் விரித்து அடுத்த பக்கத்தில் இருந்து செவ்வகமாக மடிக்கவும். இப்போது காகிதத்தை விரித்தால் ‘+’ இப்படி கோடுகள் விழுந்திருக்கும்.
இப்போது காகிதத்தை மீண்டும் முக்கோணமாக மடிக்கவும். முக்கோணத்தின் வலது முனையை உள்நோக்கி மடிக்கும்போது பேப்பரின் நடுவே ஒரு முக்கோணம் போல் தோன்றும். இரண்டையும் சேர்த்து வலது பக்கத்தில் மடித்து வைத்து விட்டு, இடது பக்கத்தின் உள்ள முக்கோணத்தின் முனையையும் உள்நோக்கி மடிக்கவும். அதிலும் இவ்வாறு முக்கோணம் தோன்றும் அதனை இடது பக்கத்திலே மடித்து வைக்கவும். மடித்த பக்கங்கள் படத்தில் உள்ளது போல் இருக்கும்.
அடிபக்கத்தை பிடித்து கொண்டு ஆரம்பிக்கவும். மேலும் கீழும் ஒவ்வொரு காகிதமும், நடுவே >< இந்த அடையாளத்தில் மடிப்பு உள்ள காகிதமாக இருக்கும்.
மடித்த அந்த பேப்பரை படத்தில் உள்ளது போல் வைத்துக் கொள்ளவும். இப்போது மேலே உள்ள காகிதத்தை இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக மடிக்கவும்.
மடிக்கும் போது முனைகள் ஒன்றோடு ஒன்று சேராமல் சற்று தள்ளி வருவது போல் மடிக்க வேண்டும்.
நடு மடிப்பை அழுத்தி விட்டதும் இப்படி இருக்கும்.
நடுவில் தூக்கிக்கொண்டு இருந்த முக்கோண வடிவை ஓரங்களோடு ஒன்றி வருவது போல் மடித்து விடவும்.
காகிதத்தை திருப்பிக்கொண்டு அடுத்த பக்கமும் இதே போல் மடிக்கவும் .
மறுப்பக்கத்தில் மடித்த காகிதமும் இவ்வாறு இருக்கும்.
இப்போது அடிப்பக்கத்தை பார்க்கும் போது மடிப்புகள் அதிகம் உள்ள பக்கமாக இருக்கும். அதன் நடுவே அடிமுனை ’x' வடிவில் இருக்கும்.
அந்த ‘X’ வடிவத்தை விரித்து பிடித்து கீழே உள்ள பகுதிகள் விரிந்து இருக்கும்படி வைக்கவும்.
இப்போது ‘X' வடிவின் நடுவே 4 விரல்கள் கொண்டு பிடித்து உள்ளங்கையில் வைத்து க்ளாக்வைசாக (இடமிருந்து வலமாக) சுற்றவும்.
சுற்றி கொண்டே இருந்தால் நடுவில் இப்படி கிடைக்கும்.
இப்போது நடுமுனையை டூத் பிக்கின் பின் பக்கம் கொண்டு உள் நோக்கி அழுத்தி விடவும்.
நன்றாக அழுத்தி விட்டு சுற்றினால் இப்படி கிடைக்கும். 4 முனைகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும்.
அதில் ஒரு முனையை பிடித்து வெளியே உள்ள காகிதமும், உள்ளே உள்ள மடிப்பும் நேராக வருவது போல் மடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

unga flower romba super pa renuka pencil stand try panniten but enga origami paper kedakala so chart paper la than pannen unga rose flower try pannen pa 4,5,6 step ennaku puriyala pa ebdi fold panni irukanganu pls konjam ennaku explain pannunga pa....

Intha work romba alga iruku. Ungaloda padipugal parka parka than kathukanum ndra ennam varuthu. Ungaloda ela work um enaku romba pidichuruku. Padam 6 il irunthu enaku puriyala. Pls i need explanation mam. Romba arvama iruku kathukanum nu.

Intha work romba alga iruku. Ungaloda padipugal parka parka than kathukanum ndra ennam varuthu. Ungaloda ela work um enaku romba pidichuruku. Padam 6 il irunthu 10 vara enaku puriyala. Pls i need explanation mam. Romba arvama iruku kathukanum nu.

இருவருக்கும் மிக்க நன்றி. :)

படம் 4: பேப்பரை +, X வடிவம் கிடைக்கும்படி மடிக்க சொன்னேன் இல்லையா... அப்படி மடிச்ச பேப்பரில் உள்ள x வடிவ முனைகளை சேர்த்து பிடிங்க. அதாவது சதுரத்தின் 4 முனைகளை சேர்த்து பிடிங்க.

படம் 5: மடிப்புகள் சேருமிடம் நடு பகுதியை தான் நான் கையால் பிடிச்சிருக்கேன். இப்போ முன்னாடி இருக்க பக்கம் பாருங்க... அந்த 4 முனை தெரியுதா?

படம் 6: அந்த 4 முனை இருக்க பக்கத்தை உங்களை நோக்கி இருக்கும்படி ஒரு டேபில் மேல வைத்து பிடிங்க. இப்போ மடிப்பில் மேல் பக்கத்தில் இருக்க பேப்பரை உங்க இடது கையால் அப்படியே தூக்கி வலது கை பக்கமா மடிங்க.

படம் 7: அப்படி மடிக்கும் போது வலது கை பக்கம் உள்ல பேப்பரின் மடிப்போடு அப்படியே நேரா நிக்க கூடாது இந்த காகிதம். கொஞ்சம் தள்ளி நேரா வராத மாதிரி மடிக்கணும். படத்தில் நான் விரம் வைத்திருக்கும் இடம் பார்த்தால் புரியும்.

படம் 8: அப்படி மடிச்சு பிடிச்சதும் பேப்பர் நடுவில் தூக்கி கொண்டு தான் நிற்கும். அந்த தூக்கி கொண்டு இருக்கும் இடத்தை விடுங்க. அதன் கீழே நீங்க மடிச்ச காகிதம் மடிப்பு விழும். அதை அழுத்தி விடுங்க. அது சரியா தூக்கிட்டு இருக்க பேப்பருக்கு மேலயும் கீழயும் வரும்.

படம் 9: இப்போ தூக்கிட்டு நின்னுதே... அந்த பேப்பரை அப்படியே உங்க வலது கை பக்கம் மடிங்க. சரியா ஓரங்கள் பொறுந்தும் படியா மடிக்கனும்.

படம் 10: இதையே தான் அடுத்த பக்கமும் ரிப்பீட் பண்ண சொல்லி இருக்கேன்.

தோழிகளே இதை படத்தை பார்த்து குழப்பிக்காம காகிதத்தை எடுத்து ஒவ்வொரு படமா பார்த்து மடிச்சுகிட்டே வாங்க... அப்போ குழப்பம் இருக்காது. ஏன்னா உங்க பேப்பரின் பொஷிஷன், படத்தில் உள்ள படியே வெச்சு பார்த்தா நான் என்ன பண்ணி இருக்கேன் என்பது தெளிவா புரியும். சரியா? அவசியம் செய்து பார்த்து எந்த ஸ்டெப்பில் சந்தேகம் வந்தாலும் கேளுங்க. :) எல்லா படங்களிலும் காகிதம் உங்களை பார்த்து இருப்பது போல் தான் படம் இருக்கு. அதனால் உங்கள் முன் மேஜையில் வைத்து மடிக்க ஆரம்பியுங்க. புரியும் நிச்சயம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga soli irukara mathir na try pannren pa thank u so much dear....vani ennaku oru doubt entha paper a4 size la shop la kedakama illa namba vangi cut pannanuma?naa erode pa entha paper yenga kedaikum nu theriyala frnd naa chart paper la than try panni pakka poren pa...origami sheet cost evala varum nu konjam sollamudiyuma?

சார்ட்டில் ட்ரை பண்ணாதீங்க சத்யா. வராது சுத்த. திக்கா இருக்குமே. சாதாரண வெள்ளை காகிதத்தில் ட்ரை பண்ணுங்க, வரும். A4 என்பது எல்லா ஸ்டேஷனரி ஷாப்பிலும் கிடைக்கும். ப்ரிண்டவுட் எடுக்க, ஃபோட்டோ காப்பி எடுக்கலாம் இதை அதிகமா பயன்படுத்துவாங்க. அதிகபட்சம் 50பைசா இருக்கும் ஒரு பேப்பர்ன்னு நினைக்கிறேன். தனியா வாங்கினா. எனக்கு நம்ம ஊரில் விலை தெரியல. ஆனா நிச்சயம் புக் ஷாப், ஸ்டேஷனரி ஷாப்பில் கிடைக்கும். கேளுங்க. இதுக்கு ஆரிகமி பேப்பர் தேவை இல்லை, சாதாரண a4 கலர் பேப்பர் போதும். ட்ரை பண்ண வெறும் வெள்ளை காகிதத்தை கூட சதுரமா கட் பண்ணி செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vani ka nan ipa than parthan. Kandipa try pannitu soldran. Thanks ka nenga vilakamalithatharku.

Hi ma nanum erode than. Nenga entha area. Enna pandrenga.