காகித ரோஜாக்கள் பாகம் - 2

தேதி: August 30, 2012

5
Average: 4.9 (18 votes)

 

கலர் காகிதங்கள்
டூத் பிக்

 

இப்போது உள்ளே இருந்த மடித்த காகிதத்தை கீழ் நோக்கி மடிக்கவும்.
இப்படி கிடைக்கும். நன்றாக உள் வரை மடித்து விட வேண்டும். இதே போல் 4 முனைகளையும் மடிக்கவும்.
மடித்து உள்ளே அழுத்திய முனையை பாதியாக மேல் பக்கம் பார்த்து மடித்து முக்கோண வடிவில் மேலே தெரியும்படி மடிக்கவும்.
இதே போல் 4 முனையை செய்யவும்.
இப்போது டூத் பிக்கின் முன் பகுதி கொண்டு ஒற்றையாக இருந்த காகிதத்தை இப்படி சுருட்டி விடவும்.
இதே போல் மேலே நீட்டி நின்ற முக்கோணத்தையும் சுருட்டி விடவும். இப்படி சுருட்டி விட்டால் இதழ்களுக்கு இயற்கையான தோற்றம் கிடைக்கும்.
இலைகள் செய்ய பூ செய்த அதே அளவு சதுரத்தை 4 துண்டுகளாக வெட்டவும். ஒரு சதுரத்தை எடுத்து முக்கோண வடிவில் மடிக்கவும்.
இரண்டு முனைகளை உள்பக்கமாக படத்தில் இருப்பது போல் மடிக்கவும்.
அதன் மேலே ஒரு பக்கம் படத்தில் இருப்பது போல் சிறு மடிப்பு கொடுக்கவும்.
பின் இலைகளில் நரம்பு போல் தெரிய, லேசாக மடித்து விட்டு எடுக்கவும். மடித்து எடுத்தால் இப்படி கோடுகள் தெரியும்.
நடுப்பகுதியையும் லேசாக ஓவர்லேப் ஆவது போல் மெல்லிய மடிப்பு கொடுக்கவும்.
இதன் ஓரங்களையும் டூத் பிக் கொண்டு சுருட்டி விடவும்.
தண்டு செய்ய பூ செய்த அதே அளவு சதுரத்தை ஒரு முனையில் இருந்து டூத் பிக் கொண்டு சுற்றவும்.
சுற்றி கிடைக்கும் ஒரு வளைவில் இலையின் அடி முனையை வைத்து சுற்றி கடைசியில் பிரிந்து வராமல் இருக்க ஒட்டிவிடவும்.
இப்போது தண்டு பகுதியை பூவின் அடிப்பகுதியில் நுழைக்கவும்.
இதோ ரோஜா பூ தயார்.
அழகான காகித ரோஜாக்கள் ரெடி.
இந்த ரோஸ் மினியேச்சர் வகை. முதலில் செய்த பூ அளவுகளில் அரை மற்றும் கால் பாகம் அளவில் உள்ள பேப்பரை கொண்டு செய்தது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நல்ல இருக்கு இலை ரொம்ப அழகா இருக்கு இன்னும் என்னலாம் திறமை உள்ள இருக்கு சொல்லுங்க என் கண்ணே பட்டுடும் போல அவளோ அழகான பூக்கள் வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

இந்த குறிப்பு அளவுக்கு எந்த குறிப்புக்கும் உங்களுக்கு வேலை இருந்திருக்காது. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். வெரி சாரி. இத்தனை அழகா அதை தேவையான மாற்றங்களோடு வெளியிட்டிருக்கீங்க... பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டீம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்... லவ்லி ரோஸஸ் வனி! ...

ஒவ்வொரு பூக்களுமே
அழகாய் சிரிக்கிறதே...
கைவினை என்றால்
வனியின் நினைவு வருகிறதே...

வனி,
மார்வலஸ்!! முகப்பில் ரோஜாக்கொத்தை பார்த்ததும் என்னை மறந்து பார்த்திட்டே இருக்கேன்... :) அத்தனை அழகு!!
படங்கள் அத்தனையும் செம ஷார்ப் & க்ளாரிட்டி. மொத்தத்தில் சூப்பர்ர்ர்ர்! :)
மனம் நிறைந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

Romba Nallairukkunga, arumaiyana alagana Padaippu, Thodattum vaazhthukkal :)

நட்புடன்
குணா

ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன...அழகோ அழகு... வாழ்த்துக்கள்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரோஸ் மினியேச்சர் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்

Life is one enjoy and give happiness to others

வனி

ரொம்ப அழகா இருக்கு ;)
எனக்கும் உங்களை பார்த்து தான் இந்த ஆரிகாமி பேப்பர்ஸ்ல இன்ரஸ்ட் வர ஆரம்பித்தது. நன்றி.
இதே ரோஸ் நானும் செய்து வைத்தேன். ஆனா நீங்க இலைகளும் செய்து அசத்திட்டிங்க.
அருமை.. ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலக்கலான ரோஜா. பாக்கறதுக்கு நிஜ ரோஜா போல கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.

வனி ரோஜாக்கள் ரொம்ப அழகா இருக்கு. கன்டிப்பா செய்துபார்க்கிரேன்.

அன்புடன்,
லலிதா

வாவ் வனி......எனக்கு என் சகோதரர் மூலியமாக ஏற்க்கனவே ஆரிகாமி பரிச்சயம் என்றாலும் அதன் மேல் ஒரு ஈர்ப்பு உங்களின் படைப்புகளால் தான். வனி என்றாலே பெர்ஃபெக்‌ஷன் தான். இது மாதிரி பிக்ட்சர் பெர்ஃபெக்ட்டாக வர அந்த கலையை உள்வாங்கி செய்ய வேண்டும். அதற்காகவே உங்களுக்கு வாழ்த்துக்கள். நானும் உங்களை போல பெர்ஃபெக்டாக செய்யவேண்டும் என்று எத்தனையோ.....ஆனாலும் இத்தனை கட்சிதமாக அமையவில்லை. வாழ்த்துக்கள்.

//குழந்தையையும் கவனித்து அதுகிட்டேயிருந்து காப்பாத்தி செய்ததற்காகவே உங்களுக்கு அதே பூங்கொத்து பரிசு//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அருமை...அருமை...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

உள்ளம் கொள்ளை போகுதே! அழ...கு.

‍- இமா க்றிஸ்

சூப்பர் உண்மையான ரோஜாக்கள் மாதிரியே இருக்கு. இலைகள் மடித்த விதம் நல்லா இருக்கு வனி. வாழ்த்துக்கள்.

நிஜ ரோஜாவே பக்கத்துல நிக்க முடியாது போல அருமையா அசத்தலா இருக்கு. பிங்க் ரோஸ் ரொம்ப அழகா இருக்கு. கல்லிலே கலைவண்ணம் கண்டார்னு சொல்றது போல உங்களால காகிதத்தைலே கலைவண்ணம் கண்டார்னு மாத்திக்கலாம் போல அவ்வளவு தர்ரூபமா இருக்குங்க வனிதா

என் பெரியம்மா வீட்டில் சின்ன சின்ன மணிகளால் ஆன குதிரை, ஒட்டகம், ஆண், பெண் உருவங்கள் கொண்ட பொம்மைகளை பார்தேன். அது அவர்களுக்கு யாரோ கொடுததாம். அதை எப்படி செய்ய வேண்டும் என யாருக்காவது தெரியுமா?

wow. Superb Vani. You are the sparkling star of Arusuvai.

நிஜரோஜாக்கள் போல் ஜொலிக்கின்றன. பாராட்டுக்கள்.
செபா.

மிக்க நன்றி. அப்பப்போ வரீங்க, காணாம போறீங்க ;) கண்ணு பாட்டிருந்தா பூவுக்கு சுத்தி போட்டுடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) பாட்டெல்லாம் ரொம்ப நாளைக்கு அப்பறம் வருது போலிருக்கே ;) உங்க பாராட்டில் நான் இரண்டு நாளா பறந்துட்டே இருந்தேன்... அதான் பதில் பதிவு இம்புட்டு லேட். ஹிஹிஹீ. மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு சுஸ்ரீ... இவ்வளவு நேரம் ஒதுக்கி அழகாய் பதிவிட உங்களால் மட்டுமே முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தவறாமல் என்னோட படைப்புகளில் பதிவுடுறீங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) டைம் கிடைச்சா செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) டைம் கிடைச்சா செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நீங்க கைவினை எல்லாம் கலக்குவீங்கன்னு தான் இங்க எங்க எல்லாருக்கும் தெரியுமே :) நீங்க செய்யலன்னா தான் ஆச்சர்யம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து வைங்க அவசியம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்து என் தம்பிக்கு குடுங்க ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி லலி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹையோ... என்னால முடியல. முதல்ல சுஸ்ரீ பதிவில் பறக்க ஆரம்பிச்சனா, அடுத்து உங்க பதிவால் அங்கையே நின்னுட்டேன்... இன்னும் கீழ வரல ;) ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி லாவி. நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செபா ஆண்ட்டி நலமான்னு கேட்க மாட்டேன்... அவங்ககிட்டையே கேட்டுடுறேன் ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) டைம் கிடைச்சா செய்து பாருங்க வினோ. ஒன்னு செய்துட்டா மடிப்பு பழகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பாட்டா நீங்களும் ;) நன்றி உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொல்லும் வேலை நானும் பார்த்திருக்கேன், பாட்டி வீட்டில் என் அம்மா செய்தது :) ஊருக்கு போனா அம்மாவை கேட்டு எதாவது செய்து அனுப்பறேன். எனக்கு தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க அன்பான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா இருக்கீங்களா?? பாராட்டுக்கு மிக்க நன்றி ஆண்ட்டி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) யார்ப்பா அது, குடும்பத்தையே கூவுறதுதுன்னு யோசிச்சுட்டு வந்தேன். ம். வனிக்கு சந்தோஷமா இப்போ!

‍- இமா க்றிஸ்

அதிலென்ன சந்தேகம் ;) செபா ஆண்ட்டி வந்தா உங்களை விட அதிகம் மகிழ்ச்சி எனக்கு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்கிடீங்க வனி அக்கா சுபர இருக்கு அக்கா லாஸ்ட் ஸ்நாப் ல இது ஆர்டிபிஷியல் கண்டே புடிக்காதா அளவுக்கு தத்ரூபமா இருக்கு அக்கா ஹ்ம்ம் நானும் ட்ரை பண்றேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணுங்க, இதை விட சூப்பரா வரும். செய்தா போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிடுங்க... இல்ல ஃபேஸ் புக்கில் பப்லிக் வியூ கொடுத்து போட்டுடுங்க ;) நான் பார்த்துக்கறேன். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா