மட்டன் வறுவல்

தேதி: September 3, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு
எலுமிச்சை ரசம் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை


 

கறியை நன்கு கழுவி குக்கரில் போட்டு அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், கால் கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சட்டியில் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வேகவைத்துள்ள கறியை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். தொடர்ந்து உப்பு, மிளகாய்தூள் போட்டு கறி வெந்த நீரையும் ஊற்றி நன்றாக கிளறி விடவேண்டும்.
தண்ணீர் சுண்டும் வரை வதக்கி கரம் மசாலாவைத் தூவிவிட்டு வறுத்தெடுக்க வேண்டும். பரிமாறும் முன் எலுமிச்சைரசத்தை தெளித்து விட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Manogari
I did this recipe and it was very tasty.
Thank u.

sajuna

ரொம்ப நன்றி சஜுனா.