தேதி: August 31, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - 4 கப்
சர்க்கரை - ஒரு கப்
எலுமிச்சை சாறு - கால் கப்
ஏலக்காய் - 3
குங்குமப்பூ - சிறிது
நறுக்கிக் கொள்ள:
பிஸ்தா - 5 அல்லது 6
பாதாம் - 2
முந்திரி - 2
2 கப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பால் கொதித்தவுடன் எலுமிச்சை சாறை ஊற்ற வேண்டும்.

இப்பொழுது பால் திரிவதை (பனீர்) பார்க்கலாம். பால் நன்கு திரிந்தவுடன் தீயை அணைத்துவிட வேண்டும் (பனீரை ரொம்ப நேரம் கொதிக்க விடக்கூடாது)

பிறகு ஒரு துணியில் பனீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பனீரின் மேல் தண்ணீர் விட வேண்டும். (எலுமிச்சை வாசனை போக) பின் நன்றாக துணியை பிழிந்து தண்ணீரை எடுக்க வேண்டும்..

வடிகட்டிய பனீரை மெதுவாக உள்ளங்கையால் பிசைய வேண்டும். ஒரு பந்துபோல் வந்தவுடன் சிறுத் துண்டை எடுத்து கையில் உருட்டி பார்க்க வேண்டும்.

பனீரை சிறு சிறு பந்துகளாக உருட்ட வேண்டும். குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சர்க்கரை போட்டு தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறு பனீர் பந்துக்களை அதில் போட வேண்டும். பின் குக்கரை மூடி 7 அல்லது 8 நிமிடங்கள் மீடியம்-ஹை சூட்டில் வைக்கவும்.

குக்கரின் மேல் குளிர்ந்த நீரை விட வேண்டும். ரசகுல்லாவை (பனீர் பந்துக்கள்) எடுத்து வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். பின் ஏலக்காய், நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியுடன் 5 அல்லது 6 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இப்பொழுது எடுத்து வைத்த ரசகுல்லாவில் உள்ள தண்ணீரை சிறிது பிழிந்து கொதிக்கும் பாலில் போட வேண்டும். பின் 2 நிமிடத்திற்கு பிறகு தீயை அணைத்து விடவும்.

குளிர்ந்த பிறகு குங்குமப்பூ தூவி பிறகு சில்லென்று பரிமாறவும்.

இது என்னோட முதல் குறிப்பு. ரசமலாயில் முந்திரி, பாதாம் உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
lalithaa
ஹையா இங்கயும் நான் தான் பர்ஸ்ட் என்ட்ரி யா ஜாலியோ ஜாலி லலிதா மேடம் முதல் குறிப்பே இனிப்பை குடுத்து அசதிடீங்கலே ரொம்ப நாள் வீட்ல ஈசியா ரசமலாய் பண்ணும் நு ஆச பட்டேன் என்ஆச போலவே ரொம்ப ஈசியா ரசமலாய் பண்ற டிஷ் குடுத்து இருக்கீங்க நன்றி ட்ரை பண்ணிட்டு சொலுறேன் மேடம் இது போலவே இன்னும் பல நூறு குறிப்புகள் வழங்கி அசத்திட வாழ்த்துக்கள்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
லலி!!!
ஆகா... சொல்லாம இப்படிலாம் இன்ப அதிர்ச்சியா!!! வாவ் லலி. சூப்பர்.... சூப்பர் சூப்பர். இனி என்ன... வரிசையா குறிப்புகள் வருமில்ல :) வாழ்த்துக்கள் லலி. இப்ப தான் முழுசா அறுசுவையில் வர ஆரம்பிச்சிருக்கீங்க ;) மகிழ்ச்சி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அற்புதமாக இருக்குதுங்க.நாளை
அற்புதமாக இருக்குதுங்க.நாளை செய்யல்லான்னு இருக்கிரேன்.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்ங்க.குக்கரில் பன்னிர் துண்டுகளை வைத்து வேக விடும் போது விசில் போட்டு வேக வைக்க வேண்டாமா?7 ,8 நிமிடங்கள் மீடியமாக வைத்தாலும் குக்கரில் ஆவி வருமே.அப்படியெவா வேக வைக்க வேண்டும்? விசில் போடுனுமா? வேண்டாமா?தண்ணிர்,சுகர்ருடன் பன்னிர் துண்டுகளையும் சேர்த்து தானே வேக வைக்க வெண்டும்??
அன்பே சிவம்.
மனோரஞ்சிதா
கனிமொழி
நன்றி கனிமொழி.. கன்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
அன்புடன்,
லலிதா
வனி
நன்றி வனி... :) கடசியா முதல் குறிப்ப பதிவு செஞ்சிட்டேன் ;)
அன்புடன்,
லலிதா
மனோரஞ்சிதா
நன்றி மனோரஞ்சிதா. குக்கரில் விசில் போட வேண்டாம் 7 நிமிடங்கள்தான் எடுத்துக்கொல்லூம் அப்படியே ஆவி வர விடுங்கள். குக்கரில் தண்ணீர், சக்கரை சேர்த்த பின் சக்கரை தண்ணி கொதிக்கும் பொழுது பன்னீரை பொட்டு முடிவிட வேண்டும்.
அன்புடன்,
லலிதா
ரசமலாய்
லலிதா,
ரசமலாய் சூப்பரா செய்து காண்பித்து இருக்கிங்க! படங்கள் எல்லாமும் தெளிவா அழகா வந்திருக்கு. பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது! :)
அசத்தலான முதல் குறிப்புக்கும், இனி மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்கவும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
மிக்க நன்றி சுஸ்ரீ.
அன்புடன்,
லலிதா
அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்,
லலிதா
ஹாய் லலிதா
ஹாய் லலிதா..ரசமலாய் மிகவும் அருமை..என்னிடம் ப்ரெஷ் பனீர் இருக்கிறது (பால் திரிஞ்சு போச்சு :( பனீர் செஞ்சுடேன் வேற வழி :) )இன்னைக்கு இந்த குறிப்பை செய்திட்டு சொல்றேன்.முதல் முறையாக ரசமலாய் ட்ரை பண்ண போறேன்...செஞ்சுட்டு படிவிடுகிறேன் தோழி.....
லலிதா
ரசமலாய் பார்க்கவே அழகா இருக்கு... கண்டிப்பா டைம் கிடைக்கும் போது செஞ்சி பாக்குறேன்.இது மாதிரி இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!!!
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
லலிதா
லலிதா ரசமலாய் அட்டகாசமா இருக்குங்க படங்கள் அதைவிட அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
hai
ரசமலாய் அற்புதமாக செய்து காண்பித்து இருக்கிங்க!
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
லலிதா...
லலிதா,
இன்று உங்கள் ரசமலாய் செய்ய போகிறேன்..
ஸ்டேப் 6ல் "குக்கரின் மேல் குளிர்ந்த நீரை விட வேண்டும்" என்று சொல்லி இருக்கிறீர்களே அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்?????
நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள். நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
சமீலா
தோழி சமீலா மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கல் வரவேர்க்கப்படுகின்ற்ன :)
அன்புடன்,
லலிதா
இந்திரா
இந்திரா அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
லலிதா
சுவர்ணா
சுவர்ணா உங்கள் பாராட்டிர்க்கு நன்றி. கண்டிப்பா செய்து பாருங்க.
அன்புடன்,
லலிதா
முசி மிக்க நன்றி.
முசி மிக்க நன்றி.
அன்புடன்,
லலிதா
பிந்து
பிந்து உங்க பாராட்டிர்க்கு நன்றி :)
5தாவது கட்டத்தை முடித்தவுடன் குக்கரின் ஆவி போன பிறகு குக்கர் மூடியைய் திரக்காமல் அதன்மேல் குளிர்ந்த நீரை திரந்துவிடவேண்டும். குக்கரின் சூடு தணிந்த பிறகு குக்கர் மூடியை திரக்க வேண்டும்.
அன்புடன்,
லலிதா
Hi, Today I shall try doing
Hi,
Today I shall try doing Rasamalai using your tips. Hope to get good results. Please instruct me as how to type in Tamil. Typing in Tamil will help me to interact in a better way!!
நான் தமிழ் இல் type செய்ய
நான் தமிழ் இல் type செய்ய பழகறேன்
pix
photos nalla iruku, paakaumpothey senchi sapta thripthi, kandipa try pannnanum,innum itha mathiri neraya kuripu solla vazhthukal!
pix
photos nalla iruku, paakaumpothey senchi sapta thripthi, kandipa try pannnanum,innum itha mathiri neraya kuripu solla vazhthukal!
ரசமலாய்...
லலிதா,
வெற்றிகரமா ரசமலாய் செய்தாச்சு...
என் கணவருக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட் இது :) பார்க்க சூப்பரா இருக்கு... டேஸ்ட்டும் சூப்பரா தான் இருக்கும்... ஈவ்னிங் சாப்பிட்டுட்டு சொல்றேன்...
மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
பிந்து மிக்க நன்றி... கன்டிப்பா சுவைத்தவுடன் உங்க பதிவை போடவும்... நானும் ரொம்ப ஆவலாக இருக்கேன் :)
அன்புடன்,
லலிதா
ரசமலாய்
லலிதா,
உங்க ரசமலாய் செம டெஸ்ட் சான்சே இல்லை :) இரண்டே நிமிஷத்தில மொத்தமாக எல்லாம் காலி ஆகிவிட்டது :) மிக்க நன்றி :)
இங்கே அப்டேட் போட மறந்து விட்டேன்.. என் மகள் தான் மீண்டும் எப்போது செய்வேன் என்று கேட்டு நினைவு படுத்தினாள் :) இனிமேல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியது தான் :) நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
நன்றி எல்லாம் எதுக்கு பிந்து.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... :)
அன்புடன்,
லலிதா
unga recipe romba nala
unga recipe romba nala iruku..all the best ..
rasamalai... Romba
rasamalai... Romba superb.thanks
Doubt regarding rasamalai
While making balls and adding in water in a cooker, the balls seperate and dissolve in water.. give me suitable solution for this problem..
i tried Rasamalai.. it was
i tried Rasamalai..
it was fantastic hit this Diwali..
Made this Diwali special,, thank u..
hello mam
I am also tried,its came very nice.i like ur recipe.
thank you............