அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் .நான் சௌமியன் .எங்களது பாப்பா வுக்கு நன்கு மாதம் நிறைவுற்று உள்ளது .இன்னும் தலை நிற்க வில்லை மற்றும் குப்புத்து கொள்ளவில்லை .இன்று மருத்துவர் பரிசோதனை செய்த போது சில குழந்தைகள் ஐந்து மாத நிறைவில் தலை நின்று மற்றும் குப்புத்து கொள்ளும் .கவலை வேண்டாம் என சொன்னார்கள் .தோழிகள் இது பற்றிய தங்கள் அனுபங்களை சொல்லுங்கள் ப்ளீஸ் .குழந்தை பேறு கு முன்பு இருந்து இப்ப வரை எங்களுக்கு நிறைய தகவல்கள் தந்த தோழிகள் அனைவர்க்கும் நன்றிகளை சொல்லும் உங்கள் சௌமியன்
சௌமியன்
கவலைபடாதீங்க... சில குழந்தைகளுக்கு கழுத்து நிக்க, குப்புற கவிழ நாளாகும் தான். தப்பில்லை. பயம் வேண்டாம். நல்ல ஹெல்தியா இருக்காங்களா? எடை, உயரம், தலை சுற்றளவு எல்லாம் சரியா இருக்கா? கூப்பிட்டா திரும்பி பார்க்கிறாங்களா? பார்வை நேரா உங்களை பார்க்குதா? கையில் நம் விரலை கொடுத்தா நல்லா க்ரிப்பா பிடிக்கறாங்களா? இதெல்லாம் தான் டாக்டர் செக் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதெல்லாம் சரியா இருந்தா எதை பற்றியும் கவலை வேண்டாம். காத்திருங்க... மெதுவா செய்யட்டும். பயம் வேணாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
sowmi
each baby is different. Vanitha had given a fantastic reply. like u even my baby had the same problem but days went head stood well. so pls wait, don't worry. just think ur baby's is fine and fit.
செளமியன்,
குட்டிக்கு 4மாதம் ஆகிடுத்தா? மனைவி நலமா? குட்டிகூட ரொம்ப டைம் ஸ்பென்பண்ணுரீங்க போலப்பா......:) இங்கு பதிவிடுவது குறைந்துடுச்சே அதான் கேட்டேன்.......
குழந்தை புஸ்டியாக(கொழுகொழுன்னு குண்டா)இருந்தால் திரும்பி விழ தாமதமாகும்பா....மேலும் அவளது பாகங்களுக்கு வலு கிடைத்துவிட்டதுன்னு அவங்களுக்கு தெரிந்ததும் ட்ரைபண்ணுவாங்க, குப்புற கவிழ்ந்து கொஞ்ச நாளாகுப்பா தலைய்ஹூக்கி பார்க்க, அப்பதான் அவங்க கழுத்து நின்று சரியான விஷன் கிடைக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமா தலை நிக்கும்பா......கவலையும் பயமும் வேணாம்,ஆனாலும் எப்போதும் குழந்தைகளை ஒருகண் கவனித்துக்கொண்டே இருக்கனும்,
வனி சொன்னதுபோல அவள் வார்வை நேராகவும்,காதுகள் கூர்மையாகவும் இருக்கானு நீங்களே கவனிங்க.....மெதுவா செய்யட்டும்,,,,,,, சீக்கிரம் செய்து நம்மைப்போல ஓடிட்டே இருப்பாங்க......:)
தோழிகள் வனிதா மற்றும் ரேணுகா
ஆலோசனை சொன்ன தோழிகள் வனிதா மற்றும் ரேணுகா இருவருக்கும் எனது நன்றிகள் . பாப்பாவும் எனது மனைவியும் நலம் .அலுவலகத்தில் இணைய தளம் பயன்படுத்த முடியாது .அது தான் அறுசுவை கு தொடருந்து வர முடிய வில்லை . பாப்பா ஆறு கிலோ இருக்கிறாள் .கூபிட்டால் திரும்பி பார்க்கிறாள் நேராக .கையை க்ரிப் ஆக பிடித்து கொள்கிறாள் .அப்பறம் தலை சுற்றளவு எவளவு வேண்டும் அது பற்றி சொல்லுங்கள் .sowmiyan
சௌமியன்
மன்னிக்கணும், அந்த அளவுக்கு நினைவில்லை. ஒவ்வொரு மாதமும் கூடி இருக்கான்னும் பார்ப்பாங்க... ஆனா அளவு சரியா எவ்வளவு இருக்கணும்னு நினைவில்லை. கூகில் அடிச்சு பாருங்க... தகவல் கிடைக்கும். மருத்துவரை சரியா இருக்கான்னு கேட்டாலே சொல்லிடுவாங்க. திரும்பி பார்க்கிறாங்க, கையை பிடிக்கறாங்க என்றாலே தலை அளவும் சரியா தான் இருக்கும்... வொரி பண்ண வேண்டாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai sowmyan vanakam
sila kulandaigal konjam late aaga ellam seiyum kavalai vendam
5 to 6 months la kuda kupura vizhum sila kulandaigal, apadi kupura vizhundadhum thalai nindru vidum.
anbudan
sowmya
நெத்தி மிதப்பு
எனது மகள் 2 மாதம்.அவளின் நெத்தி மிதப்பாக உள்ளது.என்ன செய்யலாம்
சாெல்லுங்காே. எண்ணை வைத்து பிடிக்கிறனான். சரி வரும் பாேல தெரியல. வேற ஆலாேசனை .....?
En baby ku 4 month complete
En baby ku 4 month complete agiduchi. Kavunthu padukkuranga, first kavunthukum podhu thalai thukka matanga ippo thalai nimirnthu pakkuranga appo baby thalai ninnuduchi nu arthama???
I love my parents...
Bosco
daily mrng evng thai lite ta pidichi vidunga crt ta vanthudum
I love my parents...
4 month baby
என் நான்கு மாத பையனுக்கு தலையைச் சுற்றி வட்டமாக முடி கொட்டுகிறது.தொட்டி திங்கிதுனு சொல்றாங்க.இத எப்டி தடுப்பது.மொட்டை எடுத்துட்டா நார்மலாகுனு சொல்றாங்க.But இப்டி கொட்டாம எப்டி கன்ரோல் பன்றது.
Jaisripriya