பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

புதுமுக நடுவருக்கு வணக்கம்.பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள். நல்ல தலைப்பை கொடுத்த தோழி கல்பனாவிற்கு நன்றி!

ஹைய்யா எப்படியோ முதல் ஆளா வந்து சீட் பிடிச்சாச்சி...

சந்தேகமே இல்ல சமையலில் கில்லாடிகள் இக்காலத்து பெண்களே!!! அறுசுவையே இதற்கு ஒரு நல்ல உதாரணம்.விரிவான வாதங்களுடன் நாளை வருகிறேன்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே... வாழ்த்துக்கள் :) புதுசா பதவி ஏற்றிருக்கும் உங்களை வரவேற்கிறோம்.

நல்ல தலைப்பை தந்த கல்பனாக்கு நன்றிகள்.

ஆனா நடுவரே... பாட்டி, அம்மாவெல்லாம் லிஸ்டுல சேர்த்துட்டீங்க... அதனால் என்னால் வேற பக்கம் யோசிக்கவே முடியாது :) நீங்க வகை வகையா சமைப்பது யாருன்னு கேட்டிருந்தா எங்களை சொலி இருப்பேன்... கில்லாடி யாருன்னு கேட்டுட்டீங்க... அதனால் நிச்சயம் அந்த காலத்து பெண்கள் அணி தான் :)

நடுவரே... இந்த காலத்தில் மைக்ரோவேவ், அவன் எல்லாம் பயன்படுத்தறோம் தான், ஆனால் இது எதுவுமே இல்லாம அந்த காலத்தில் சத்தான ஆரோக்கியமான உணவை மட்டுமே கொடுத்த நம்ம அம்மா, பாட்டி சமையலுக்கு முன்னாடி இதெல்லாம் நிக்கவே முடியாது.

இன்னைக்கு சமைச்சு அசத்துற நம்மில் எத்தனை பேர் அம்மா சமையலுக்காக ஏங்காதவங்க??? எல்லாருக்கும் அம்மா சமையல் தான் பேஸிக்... அங்க இருந்து தான் நம்ம சமையலே துவங்கும். அடித்தளம் அமைச்சு கொடுப்ப்பதே அம்மா தானே. கூடவே பாரம்பரிய சமையல் என்பதை அம்மா, பாட்டி சொல்லி தான் நாம தெரிஞ்சுக்கறோம். அது தெரியாம வேறு எது தெரிஞ்சும் பயன் இல்லையே.

நடுவரே அந்த காலத்தில் வகைகல் கம்மியா இருந்திருக்கலாம். ஆனா செய்யும் எதிலும் உப்பு, காரம் தப்பாகாது. உப்பு, புளி, காரம் சரியான அளவில்லைனா சமையல் ருசிக்காதுன்னு சொல்வாங்க. அந்த பேசிக்கை நமக்கு கற்று கொடுப்பதே அம்மா தான். இன்றைய சமையல் எல்லாத்துக்கும் ஸ்பூன் அளவு தரும், அன்றைய சமையல் கை அளவு, கண் அளவு... கொஞ்சமும் மிஸ் ஆனதில்லையே. அதை என்னன்னு சொல்ல?

எங்க அம்மா செய்யும் சாஃப்ட் சாஃப்ட் கொழுக்கட்டை இன்று வரை எனக்கு அதே சாஃப்ட்னஸோடு வருவதில்லையே... ஏன்? எத்தனை வகை கோழி சமைச்சாலும் அம்மா செய்யும் கையால் அரைச்சு வைக்கும் குழம்புக்கு ஈடாகவில்லையே... ஏன்? ஆயிரம் ஃபிஷ் ஃபிங்கர், க்ரில்டு மீன் வந்தாலும் அம்மா செய்யும் வஞ்சரம் வறுவலுக்கு பக்கத்தில் நிக்கலயே... ஏன்? இவ்வலவு வகை வகையா பிக்னிக்குக்கு தயார் செய்தாலும் பயணத்துக்கு அம்மா கட்டி தந்த புளிசோறும், உருளை வறுவலும் போல் இல்லையே... ஏன்?

ஒரு அனுபவத்தை சொல்றேன் நடுவரே... நான் சமைக்க கத்துகிட்ட புதுசுல கடுகு வெடிக்கும் முன்பே சீரகம், உளுந்து எல்லாம் போட்டுடுவேன். சில நேரம் கடுகு வெடிக்கவே செய்யாது. வதக்கும் வேலையெல்லாம் செய்திருப்பேன். அம்மா சாப்பிட்டதும் சொல்வாங்க... “கடுகு வெடிக்கல... என்ன அவசரம்??”னு. ஆச்சர்யமா இருக்கும். நான் சாப்பிட்டு பார்த்தாலும் எப்படி அந்த சுவை வித்தியாசம் தெரியுதுன்னு இன்னைக்கு வரை என்னால கண்டு பிடிக்க முடியல. ஆனா இன்னைக்கும் என் வேலை ஆட்களை கடுகு வெடிக்க விடுங்கன்னு இன்ஸ்டர்க்‌ஷன் மட்டும் குடுக்கறேன்... அது தான் இந்த கால சமையலுக்கும், இந்த கால சமையலுக்கும் உள்ள வித்தியாசம். இப்போ எல்லாம் ப்ரொசீஜர்... அப்போ எல்லாமே அனுபவம், பக்குவம், திறமை, உணர்ந்து சமைச்சாங்க.

நடுவரே... வீட்டுக்கு 5 பேர் வந்தாலும் 50 பேர் வந்தாலும் அசராம சமைச்சு அப்போ கூட உப்பு புளி காரம் சொதப்பாம சமைச்ச அம்மா முன்னாடி நாங்க எல்லாம் ஒன்னுமே இல்லைங்க. :)

இது வெறும் முதல் கட்ட வாதம் தான்... இன்னும் வாதங்களோடு நாளை வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க இந்திரா, வாழ்த்துக்கு நன்றி. அணியை தேர்வு செய்ததோடில்லாம, நம்ம அறுசுவையை உதாரணம் சொல்லி அசத்தலா ஆரம்பிச்சிருக்கீங்க. நாளை உங்களோட வாதங்களுக்காகவும், மற்ற தோழிகளோட வாதங்களுக்காகவும், ஆர்வமா காத்திருக்கேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க வனி வாங்க, வாழ்த்துக்கு நன்றி. உங்களைதான் காணோமேனு நினைச்சிட்டிருந்தேன். வந்துட்டீங்க. இனிதான் பட்டி களைகட்ட போகுது.
//பாட்டி, அம்மாவெல்லாம் லிஸ்டுல சேர்த்துட்டீங்க... அதனால் என்னால் வேற பக்கம் யோசிக்கவே முடியாது. நீங்க வகை வகையா சமைப்பது யாருன்னு கேட்டிருந்தா எங்களை சொலி இருப்பேன்... கில்லாடி யாருன்னு கேட்டுட்டீங்க...// சரியா சொன்னீங்க வனி. நானும் இப்படி யோசிச்சதாலதான் அம்மா, பாட்டியெல்லாம் இழுத்து விட்டிருக்கேன்.

//இந்த காலத்தில் மைக்ரோவேவ், அவன் எல்லாம் பயன்படுத்தறோம் தான், ஆனால் இது எதுவுமே இல்லாம அந்த காலத்தில் சத்தான ஆரோக்கியமான உணவை மட்டுமே கொடுத்த நம்ம அம்மா, பாட்டி சமையலுக்கு முன்னாடி இதெல்லாம் நிக்கவே முடியாது.// ஆமாம் வனி, நானும்தான் மைக்ரோவேவ் ஓவனில் வகை, வகையா கணவருக்கு செஞ்சு கொடுக்கிறேன். ஆனா அவங்க அம்மா பண்ற மாதிரி இல்லைனுதான் சொல்வாரு.

//இன்னைக்கு சமைச்சு அசத்துற நம்மில் எத்தனை பேர் அம்மா சமையலுக்காக ஏங்காதவங்க???// இந்த லிஸ்ட்ல என்னை ஃபர்ஸ்ட் ஆளா சேர்த்துக்கோங்க.

//பாரம்பரிய சமையல் என்பதை அம்மா, பாட்டி சொல்லி தான் நாம தெரிஞ்சுக்கறோம். அது தெரியாம வேறு எது தெரிஞ்சும் பயன் இல்லையே.// நம்ம பாரம்பரிய சமையலை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு, பீஸா, பர்கர்னு சமைக்க கத்துக்கிட்டு என்ன புண்ணியம் சொல்லுங்கன்னு எதிரணியை நம்ம வனி கேக்குறாங்க.

//இன்றைய சமையல் எல்லாத்துக்கும் ஸ்பூன் அளவு தரும், அன்றைய சமையல் கை அளவு, கண் அளவு... கொஞ்சமும் மிஸ் ஆனதில்லையே. அதை என்னன்னு சொல்ல?// எனக்கெல்லாம் ஸ்பூன் அளவு கூட தெரியாது. கிச்சனுக்குள்ள போனாலே கையில அம்மா, மாமியார் எழுதி கொடுத்த சமையல் குறிப்பு நோட்டோடதான் போவேன். அது மட்டும் இல்லைனா, என் மானம் என்னைக்கோ கப்பல் ஏறியிருக்கும்.

//இப்போ எல்லாம் ப்ரொசீஜர்... அப்போ எல்லாமே அனுபவம், பக்குவம், திறமை, உணர்ந்து சமைச்சாங்க. வீட்டுக்கு 5 பேர் வந்தாலும் 50 பேர் வந்தாலும் அசராம சமைச்சு அப்போ கூட உப்பு புளி காரம் சொதப்பாம சமைச்ச அம்மா முன்னாடி நாங்க எல்லாம் ஒன்னுமே இல்லைங்க. :)// சூப்பர் வனி. ஆரம்ப கட்ட வாதமே கடுகு மாதிரி பொரிஞ்சி தள்ளிட்டீங்க. உங்களுக்கு கை கொடுக்க நம்ம அறுசுவையின் அம்மாக்களும் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

//சந்தேகமே இல்ல சமையலில் கில்லாடிகள் இக்காலத்து பெண்களே!!! அறுசுவையே இதற்கு ஒரு நல்ல உதாரணம்.// - சந்தேகமே இல்லாம அந்த கால பெண்கள் தான்... பெறுகி வரும் மசாலா பொடிகளும், ரெடிமேட் மிக்ஸ்களும், பொடி வகைகளும், ரெடி டு ஈட் வகைகளும், ரெஸ்டாரண்ட்டுகளுமே நல்ல உதாரணம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையலில் கில்லாடிகள் பழைய காலத்து பெண்கள் தவிர வேறு யாரா இருக்க முடியும் ?

நடுவரே..
எங்கே எதையாவது சாப்பிட்டதும், நமக்கு அது பிடித்து போயிடுச்சுனா வாயில் வர வார்த்தை என்ன தெரியுமா?
எங்கம்மா ரசம் போலவே இருந்தது. ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க பாட்டியோட மீன் குழம்பை நியாபகப்படுத்திட்டிங்க என்ற வரிகள் தான்.
அவங்க சமையல் முன்பெல்லாம் நாம நிக்க கூட முடியாது.

நமக்கு எத்தனையோ வசதிகள் வந்துவிட்டது. ஆனா அவங்க அம்மியில் அரைத்து வைக்கும் குழம்புக்கு நிகர் ஏது.
எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே அடுப்ப ஊதி சுவையான சமையலை தந்தவங்க. நாம எல்லாம் இப்ப வந்து நெட், யு டிப்னு பாத்து புதுமையா செய்து சாப்பிடுகிறோம்.
ஆனா அவங்களுடைய சாராம்சம் கண்டிப்பா இந்த கால பெண்களுக்கு வந்திடுமா?

ஏதாவது செய்துட்டு இருப்போம். திடிர்னு அடுப்படியை கடந்து போவாங்க பாட்டி. என்ன சமையலில் உப்பு கொஞ்சம் கம்மியா இருக்கு போலன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. சுவைத்து பார்த்தால், அட.... ஆமாம் உப்பு கம்மியா தான் இருக்குனு தோணும். அவங்களில் நாசியிலும் சுவை மொட்டுக்கள் இருக்கும்.

அந்த காலத்தில் அவங்க கைப்பக்குவத்தில் செய்யப்படும், களி, கம்புக்கு நிகர் இருக்கா? இல்ல அதன் சத்துக்களுக்கு தான் இப்ப வேறு எந்த பொருளும் போட்டி போட முடியுமா?

எத்தனை பேரு இருந்தாலும், நாலு பேரு சேர்ந்து உட்கார்ந்து, வெங்காயம் உரிச்சு, அம்மியில் அரச்சு , அடுப்பை ஊதி என எல்லா வேலையும் செய்து சமைச்சு அசத்திடுவாங்க..தண்ணி மாதிரி தான் கொழம்பு இருந்தாலும் அந்த சுவை நாக்கில ஒட்டிக்கும்.

அவங்க எல்லாம் சொல்லிக் கொடுக்காம எப்படி நம்மால் வர முடியும் ? பெரிய அளவு படிச்சு, நல்ல வேளையில் இருக்கிறோம். இப்ப அ ஆ இ ஈ இப்ப ஒண்ணுமில்ல மாதிரி தான் தோனும்.ஆனா மூனு வயதில் அதை சொல்லிக் கொடுத்த அம்மாவையும், டீச்சரையும் மறக்க முடியுமா? எத்தனை வசதிகள் வந்து நாம் சமையல் செய்தாலும், அந்த அடித்தளம் இன்றி எப்படி சமாளிக்க முடியும்..

இப்ப இருக்கும் வசதிகளை கொண்டு இந்த கால பெண்கள் ரொம்ப நல்லாவே சமைக்கறாங்க. ஆனா கில்லாடிகள்னா எதுவுமே இல்லாம சமையலில் கலக்கிய அந்த கால பெண்கள் தான் ;)

நமக்கு பருப்பை குக்கரில் வைத்து தான் சாம்பார் செய்ய நேரம் இருக்கும். அதுவும் காய்களை கடாயில் போட்டுவிட்டு , அலுவல் வேலைக்கு ரெடி ஆகிட்டு இருக்க தான் முடியும்.ஆனா நம்ம பழைய கால பெண்கள் , பக்கத்திலே நின்னு பக்குவம் மாறாம சமைப்பாங்க. அந்த கைகளுக்கு ஒரு வாசம் இருக்குனு சொல்வாங்களே ;)

நடுவரே.. புலி எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறாவது அடி பாயும் தான். ஆனால் முதல் அடி எடுத்து வைக்க உதவியதே அந்த பெரியவங்க தானே. அவங்க தானே அப்ப கில்லாடிகள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

புது நடுவருக்கு வாழ்த்துக்கள் :) தலைப்பை கொடுத்து விட்டு கொஞ்ச நாளாகவே கண்ணாம்பூச்சி விளையாடி கொண்டிருக்கும் கல்பனாவிற்கும் வாழ்த்துக்கள்... ;-)

சமையலில் கில்லாடிகள் கட்டாயம் இந்த கால பெண்களே :) அந்த காலத்து சமையல் எல்லாம் சூப்பர் தான் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அது எல்லாம் ஒன் டைமென்ஷன் சமையல்.. இந்த காலத்து பெண்கள் 3d, 4d என்று இல்லை 100d வரைக்கும் கூட வித விதமான சமையல் செய்யும் வல்லுனர்கள்.. அந்த காலத்து மக்கள் ஒரு விதமான சமையல் (single cuisine) தான் செய்தார்கள் ஆனால் இந்த காலத்து பெண்கள் பல விதமான சமையல் (multi cuisine) செய்து அசத்துகிறார்கள்..

அந்த காலத்தில் 70-80% பெண்கள் சமையலில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாக இருந்தார்கள்... ஆனால் இந்த காலத்தில் பெண்கள், பல துறைகளில் பிரகாசித்து கொண்டே சமையலிலும் கில்லாடிகளாக திகழ்கிறார்கள்...

சுருக்க சொன்னால், அந்த காலத்து பெண்கள் solid போல ஒரே வடிவத்தில் தான் எப்போதும் இருப்பார்கள்.. அவர்களுடைய சமையல் எல்லாம் சுவையான ஆனால் repeat ஆக கூடியவை..

இந்த காலத்து பெண்கள் liquid போல.. தேவைக்கு தகுந்தார் போல் வடிவத்தை மாற்றி, சிறப்பாக பிரகாசிக்க கூடியவர்கள்... அதாவது வித விதமாக வகை வகையாக சமைத்து அசத்த கூடியவர்கள்..:)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு நடுவர் பூர்ணிமா மற்றும் பட்டியில் கலந்து கொண்டு கதிகலங்க வைக்க போகும் மற்ற தோழிகளுக்கும் என் வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக :)

நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு பட்டிக்கு வருவது மற்றும், அன்புக்கினிய தோழி நடுவராக இருந்த போன பட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கும் வருத்தமான விஷயமாக தான் இருந்தது. தாய்வீடு அறுசுவையில் சிரித்து பேசி நாட்களாகிவிட்டபடியாலும், இந்த பட்டியில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும் என்பதாலேயே இந்த தலைப்பை தவற விட விரும்பவில்லை. யாராவது இந்த தலைப்பை ஏற்று நடத்த மாட்டார்களா என்றும் ஏங்கி இருந்தேன். அந்த ஆசையை பூர்த்தி செய்த பூரணிமாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ;)

ரொம்ப நாட்களாகவே என்னோட லந்து பண்ண காத்துக்கொண்டிருக்கும் பிந்துவுக்கும் சேர்த்து தான் இந்த பட்டியின் எண்ட்ரி :D நான் எதிர்பார்த்தது போலவே அவர் எதிரணியில் இருப்பது இரட்டிப்பு சந்தோஷம் ;) ஒரே பக்கமாக தராசு சாய போகிறதோ என்று நினைத்து வந்த எனக்கு நல்லதொரு நம்பிக்கையை தந்த பிந்துவுக்கும் என் நன்றிகள் :)

இதோ தலைப்புக்குள் வந்துட்டேன். நானும் அந்தக்கால பெண்கள் அணியிலேயே பேச ஆசையோ ஆசைப்படுறேன். இந்தக்கால பெண்கள் சமையல் எப்படி இருக்கும் என்று, என்போன்ற பெண்களிடம் மாட்டி அவதிப்பட்டவர்கள், படுபவர்கள் நன்கறிவார்கள். திருமணத்திற்கு முன்னாடி எள்ளடை மேலே ஆசை பட்டு நானே செய்கிறேன் பேர்வழி என்று, ஆத்தா நான் எள்ளடை பண்ண போறேன் என்று ஏலம் போடாத குறையாக, கண்ணாத்தா, பொன்னாத்தா, ராமாயி, பொம்மாயி நான் எள்ளடை பண்ண போறேன்னு ஊரை கூட்டி சொல்லாத குறையாக செய்ய காரியத்திலும் இறங்கி அந்த எள்ளடை எண்ணவாக மாறியது என்ற ஒரு அற்புதமான வரலாற்றை சொல்ல விரும்பினேன் இழையில் சொல்லியிருக்கிறேன். அதை படித்தவர்கள் அந்த வரலாற்றின் மேன்மையை நன்கறிகறிவார்கள். அதிலிருந்து பலகார ஆசையை விடுத்து மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த ஆசை மீண்டும் தலையெடுக்க அதிரசம் செய்ய இறங்கி அது எடுத்த இன்னொரு பிறவி என்னவென்பதை அதே இழையில் சொல்லியிருக்கிறேன். இவ்ளோ விஷயங்கள் செய்த பிறகுமா இந்த கால பெண்கள் தான் சமையலில் கில்லாடிகள் என சத்தியம் பண்ணி சொல்ல போகிறீர்கள் எதிரணி தோழிகளே !!!

பாட்டி பண்ணும் அதிரசம் பக்குவத்தை நானும் சிறுவயதிலிருந்து கவனித்து வருகிறேன். ஆனாலும் இன்னும் அந்த வெண்ணெய் போல கரையும் பக்குவத்தையும், பட்டு போன்ற மென்மையின் ரகசியத்தையும் அறிய முடியவில்லை. நான் பாட்டி வீட்டில் வளர்ந்தவள். நான் பள்ளி படிக்கும் பருவத்தில் பாட்டி தான் சமைப்பார். காலை 9 மணிக்குள்ளாக 2 வித பொரியல், குழம்பு, ரசத்தோடு மதிய சமையலையும், இரண்டு வித சட்னியோடு காலை டிபனையும் சிட்டு மாதிரி முடித்து வைத்திருப்பார். கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதிலேயே ரசத்தை வைப்பார். அரிசி கழுவிய தண்ணீரையும் வீணாக்காமல் அதிலேயே ரசத்தை வைப்பார். என்ன ருசி !! என்ன ருசி !!! அட இவ்ளோ விஷயம் எதுக்குங்க? ஒரு சப்பாத்தியை சாஃட்டாக செய்வது எப்படி என தெரியாமல் இன்று வரை நான் முழித்துக்கொண்டிருக்கும் உண்மையை உங்களிடம் சொல்லாமல் காப்பாற்றி வருகிறேன். இத்தனைக்கும் ஒரு புத்தகம் விடாமல் சமையல் டிப்ஸ் புக்குகள் அனைத்தையும் படித்து அதில் சொன்ன அனைத்து விதங்களையும் பின்பற்றி விட்டேன். ம்ஹும்.... மென்மை மட்டும் வரவே இல்லை. இத்தனைக்கும் நான் சப்பாத்தியில் வெந்நீர் தான் விட்டு பிசைந்து ஊற வைத்து சுடுவேன். சுடும் நேரம் தான் மென்மையாக இருக்கும். ஒரு 5 நிமிடம் கடந்தால் கடுகடுவென இருக்கும். அப்பளம் மாதிரி சாததில் பொடித்து சாப்பிடலாம் அத்தனை மிடுக்கு இருக்கும். என் அம்மா சுடும் சப்பாத்தியின் மென்மை எப்போது வரும் என தெரியவில்லை. இத்தனைக்கும் அத்தனை மெனக்கெடாமல் அநாயாசமாக தான் செய்வார். என்ன ஒரு ருசி, பஞ்சு போன்ற சாஃப்ட்னஸ்..

நாம் சமைக்கும் சமையலில் நம் மனநிலையும் பிரதிபலிக்கும். நல்ல அமைதியான மனநிலையோடு சமைக்கும் போதும், அன்போடு சமைக்கும் போதும் அந்த சமையல் மிகவும் ருசிக்குமாம். அது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த காலபெண்கள் வெளி வேலைக்கு என்று செல்லாமல், வீட்டோடு இருந்தாலும் ருசியான சமையல் என்பது சாத்தியமாயிற்று. மற்றுமொரு முக்கியமான விஷயம், அந்தக்கால பெண்களின் மனதில் கோபம், துவேஷம், பொறாமை போன்றவை குறைவு. அதனாலும் நல்ல எண்ணம் மற்றும் நல்ல வித சூழ்நிலைகள் நிலவ சமைக்க முடிந்தது.

இந்தக்கால பெண்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு கவலைகளாலோ, அல்லது மனச்சுமை, மன அழுத்தங்களாலும் இருப்பதாலேயே அவர்கள் செய்யும் சமையலிலும் இவை அனைத்தும் பிரதிபலித்து ருசியை உறிஞ்சி விடுகின்றன.

இந்தக்கால பெண்கள் வீட்டு விருந்துக்கு போய்விட்டால், அதுவும் தப்பித்தவறி சமையலில் ப்ரி.கே.ஜியில் இருக்கும் பெண்கள் வீட்டிற்கு போய்விட்டால் அவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அந்த காலத்தில் ஒரு பெண்ணை பார்த்து முடிக்க போவதற்கு முதல் தகுதியே அந்த பெண்ணுக்கு சமைக்க தெரியுமா என்பது தான்? அதனால் அந்த பெண் புதுபெண்ணாக இருந்தாலும் தைரியமாக போகலாம், ஏனென்றால் அவளின் தாய் நன்கு சமைக்க பழகியிருப்பாள். இந்த காலத்தில் சமைக்க தெரியாது என்று சொல்வதே ஒரு பேஷனாகி போய்விட்டது. "இன்னைக்கு என்ன கொண்டு வந்தேன்னு கேட்டால், பதில் இது தான் இருக்கும். அய்யோ... எனக்கு தெரியாதுப்பா.. என் அம்மா தான் டிபன்பாக்ஸ்ல வச்சு தந்தாங்க. நான் பார்க்கலன்னு..இவங்களுக்கெல்லாம் மூணு மாசம் பண்ண பிரியாணியை டிபன் பாக்ஸ்ல போட்டு தந்தா தான் வழிக்கு வருவாங்க ;) இந்த பெண்களா சமையல்ல கில்லாடிகளா இருப்பாங்கன்னு சொல்றீங்க?

எங்க அத்தை பொண்ணு ஒருத்தவங்க இப்படித்தான் நான் இன்னைக்கு சமைக்கறேன்னு இறங்கினாங்க ஒருநாள். சாம்பார் வச்சு, உருளை கிழங்கு வறுத்து வச்சிருந்தாங்க. தலையெழுத்தேன்னு பாதி பாத்திரம் சாம்பார் காலியாச்சு. சாயங்காலம் 6 மணி போல திடீர்னு ஞாபகம் வந்தவங்களா, அய்யோ புளி கரைச்சு ஊத்த மறந்துட்டேன்னு சொல்லி அப்பதான் கரைச்சு ஊத்தினாங்க. அப்படியே விட்டிருந்தா கூட பரவாயில்ல.. புளியை கரைச்சு ஊத்தி இன்னும் மோசமாக்கி அப்படியே தூக்கி மாட்டுக்கு தான் வச்சாங்க. பாவம் அந்த மாடு..;( அடுத்த நாள்ல இருந்த அந்த ஏரியாக்குள்ளயே நாங்க பார்க்கல.. இதெல்லாம் தனிக்கதை ;((

இதோ இப்ப இந்தியாவுக்கு போயிருந்தப்ப, மீன் குழம்பு நான் வைக்கிறேன்னு ஆசையா அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்டு, அம்மாவும் மனசில்லாம முக்கால் மனசோட தந்தாங்க. நானும் வச்சேனே...அன்னைக்குன்னு பார்த்து எங்க மாமாவுக்கு நேரம் சரியில்லை போல எங்க வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு வாய் சாப்பாடு வாயில் போட்டவர், உடனே குறி சொல்ற மாதிரி கேட்டுட்டார்.. இது கல்பனா வச்ச குழம்பான்னு.... எப்படிங்க மாமா கண்டுபிடிச்சீங்கன்னு நானும் ரெம்ப சந்தோஷமா கேட்டேன். உங்க வீட்ல உன்னால மட்டும் தானே இப்படி மீன் குழம்பை பருப்பு சாம்பார் மாதிரி சல்லுனு வைக்க முடியும்னு போட்டாரே ஒரு போடு. இந்த சின்ன மனசு என்ன பாடு பட்டிருக்கும் நினைச்சு பாருங்க ;(( இது கூட பரவாயில்லை என் தங்கச்சி சொன்னாளே ஒரு வார்த்தை, நல்ல ப்ரெஷ்ஷான மீன்ல அம்மா கையால வைக்கிற மீன் குழம்பை ஒரு வெட்டு வெட்டலாம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன். இப்படி அந்த ஆசைல மண்ணை தூக்கி போட்டுட்டியேன்னு.. ஜென்ம விரோதி மாதிரி திட்டிட்டு போய்ட்டா ;(( அன்னைக்கு முடிவெடுத்தேன்... (மீனே சாப்பிடகூடாதுன்னு இல்ல) மீன்குழம்பு இனி நம்ம கையால வைக்கவே கூடாதுன்னு.. இதுதாங்க நடுவரே இன்றைய பெண்களின் சமையல் லட்சணம்.(நன்றாக சமைக்கும் தோழிகள் மன்னிப்பீராக ;))

எதிரணி தோழி சொன்னது போல இந்த காலபெண்கள் 3டி, 4டி அந்த டீ இந்த டீ என எல்லா டைமென்ஷன்லயும் சமைப்பாங்களே. பின்னே கிளி பிடிக்க போய் குரங்கு பிடிச்ச கதையாகி அதுக்கு ஒரு புது பேரை வச்சுட்டு இப்படியெல்லாம் பீத்திட்டு இருக்க வேண்டியது தான். அந்த காலப்பெண்கள் ஒன்றை நினைச்சு செய்தால் அது ஒன்று தான் வரும் அச்சு அசல் டேஸ்டும், வடிவமும் மாறாமல். நம் அறுசுவையில் அந்தக்காலப்பெண்கள் யாராவது சமையலில் சந்தேகம் கேட்டு வந்திருப்பதை பார்க்க முடியுமா? எல்லாம் இந்தக்கால பெண்கள் தான் அணிவகுத்து நின்றிருப்பார்கள். அதுவும் அநியாயமாக சந்தேகங்களை அடுக்கிக் கொண்டு.. மனசுக்கு ரெம்பவே வருத்தமாக இருக்கு நடுவர் அவர்களே...இப்படியே போனால் சுடுதண்ணி எப்படி வைக்குறது? அடுப்பை எப்படி பத்த வைக்குறதுன்னு கேட்டு வந்தாலும் யாரும் ஆச்சர்யப்படாதீங்கோ.அதான் இந்தக்காலப்பெண்களின் சமையல் கில்லாடித்தனம் (??)

முதல்ல இந்த காலப் பெண்கள் எத்தனை பேர் பெருந்தன்மையோட சமைக்கலாம்னு முன்னாடி வர்றாங்க. அதுவும் கூட்டுக்குடும்பமாக இருக்கும் குடும்பங்களில். எங்க அத்தை பெண் ஒருவர், அதாவது புளி கரைக்க மறந்தவங்களுக்கு தங்காச்சி. கொஞ்சம் குண்டா இருப்பாங்க. வீட்ல ஒரு வேலை கூட மறந்தும் அசைக்க மாட்டாங்க. கல்யாணமும் ஆச்சு. ஆனாலும் அம்மா வீட்டோட தான் இருப்பாங்க. மாமியார் வீட்டுக்கு மட்டும் சண்டே போய்ட்டு வரும் சண்டே மருமகள். அப்ப போனாலும் சமைப்பாங்கன்னு நினைக்கறீங்க. அதான் இல்லையே. அங்கே போனா வேலை செய்த மாதிரியும் இருக்கனும், அதே சமயம் வேலையும் செய்யக்கூடாது. அதான் அந்தம்மா பாலிசி. அதனால் ஒரு சூப்பர் ஐடியா வச்சிருந்தார். எப்ப சமையல் வேலைக்கு போனாலும் வேறு யாரையாவது சமைக்க விட்டுட்டு இவங்க ஹாயாக உக்கார்ந்து பூண்டு உரிச்சு தந்துட்டு, உக்கார்ந்த இடத்துலயே காய்கறி அரிஞ்சு தந்து மருமகளுக்குரிய கடமையை பொறுப்பா நிறைவேத்திடுவாங்க. இந்த ரீதியில் போகும் பெண்களை கொண்ட இந்த காலத்தில் எப்படி இவர்கள் சமையலில் கில்லாடிகளாக இருக்க முடியும்?

எதிரணி தோழி நூத்துல ஒரு வார்த்தை சூப்பரா சொன்னாங்க.. உண்மையும் கூட... இந்த கால பெண்கள் லிக்விட் போல, தேவைக்கு தகுந்தாற் போல வடிவத்தை மாற்றி கொள்வார்களாம். அது வாஸ்தவம் தாங்க.. தேங்காய் பர்பி செய்யலாம்னு இறங்குவாங்க.. கடைசியா பார்த்தா கிளாஸ்ல ஊத்தி தருவாங்க. கேட்டா சர்க்கரை கொஞ்சம் கூடி போச்சு அதான் நீர்த்து போச்சு. அட்ஜீஸ் பண்ணிக்கோங்கன்னு.. கேசரி பண்றேன்னு, கீராக்கி கப்ல ஊத்தி பெருமையா தருவாங்க.

ஒரே பதிவில் இந்த காலப் பெண்களின் பெருமைகளை அடக்கி விடமுடியாது நடுவர் அவர்களே !!! அதனால் நாளையும் நான் வருவேன் !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே... ஒரு மேட்டர் சொல்றேன் கேளுங்க... என் அம்மாவோட பாட்டிக்கு கால் நடக்க முடியாது. விட்டு தின்னையில் தான் இருப்பாங்க. அடுப்படியில் அம்மா சமைக்க கத்துகிட்ட புதிதில் உட்கார்ந்த் இடத்திலேயே ”பாப்பா உப்பு கம்மி, காரம் கூட” என எல்லாம் சொல்லிடுவாங்களாம். அவ்வளவு எக்ஸ்பர்ட் சமையலில் அம்மாவின் பாட்டி.

இன்னொரு மேட்டர் சொல்றேன் கேளுங்க... நம்மில் எத்தனை பேர் எதாவது ஒரு குறிப்பை பார்த்தாலே இது நல்லா வரும், வராதுன்னு கண்டு பிடிப்போம்? என் அம்மா கரக்ட்டா சொல்வாங்க... சரியா வருமா வராதான்னும் சொல்லி, அதன் சுவை நமக்கு ஒத்துவருமான்னும் சொல்வாங்க. நானா இருந்தா அடம்ப்ட் அடிச்சுட்டு தான் ஃபெயிலியர்னு சொல்வேன்... அவங்க செய்யாமலே ஃபெயில் ஆகும்னு சொல்லிடுவாங்க.

இந்த கலத்தில் எத்தனை பெண்களுக்கு கொழுக்கட்டைக்கும், இடியாப்பத்துக்கும் வீட்டில் மாவு திரிக்க தெரியுது? பக்குவமா??? ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மிங்க. எல்லா ரெடிமேட் மாவு தான் கை கொடுக்குது. இல்லன்னா இடியாப்பம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊரில் காணாம போகும்.

இன்னும் எத்தனை இந்த கால பெண்கள் வீட்டில் ரசப்பொடி, சாம்பார் பொடி செய்றாங்க??? ஒன்னு அம்மா வீட்டில் இருந்து கொடுக்கணும், மாமியார் வீட்டில் இருந்து கொடுக்கணும், இல்ல கடையில் வாங்கனும். அம்மா மிளகாயை கையில் எடுத்தாலே காய்ச்சல் பத்தல, இன்னும் காயணும், தனியா பொடிக்கு இது சரியா வராதுன்னு சொல்வாங்க.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் மிளகாய், தனியா பதமா இருக்கான்னு கண்டு பிடிக்க தெரியாது. ரொம்ப நாளா கறி குழம்புக்கு மசாலா அரைச்சுட்டு திப்பி திப்பியா கரகரன்னு இருக்குன்னு சொல்வேன். அம்மா சொல்லி தந்தாங்க... தனியா, மிளகாய் ஒழுங்கா வறுத்து அரைக்கணும், அது பொடி ஆகும் முன்னாடி நீர் விட கூடாது, அப்ப தான் மசாலா நைசா வரும்னு.

இந்த பக்குவத்தை எல்லாம் எந்த புத்தகமும் கத்து குடுக்காதுங்க... அந்த கால பெண்கள் தான் கத்து குடுக்க முடியும். ஏன்னா அவங்க தான் நிஜமான எக்ஸ்பர்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புது முக நடுவருக்கு வாழ்த்துக்கள்... பட்டி மன்றம் கலைகட்டியிருச்சு போல... சரி நான் தலைப்புக்குள்ள வரேன்.....

சமையல் ல கில்லாடி யாரு னு கேட்ட நான் இக்கால பெண்கள் (நாம) தான் னு சொல்லுவேன்... ஏன் னா????

நம்ம அம்மா பாட்டி எல்லாம் எப்போ சமைக்க கத்துக்கிட்டு இருப்பாங்க னு கொஞ்சம் கேட்டு பாருங்க.. 10, 12 வயசு ல எல்லாம் எல்லாமே செய்து பழகிருப்பாங்க... ஆனா இந்த காலத்து பெண்கள் யோசிங்க.. கல்யாணம் அப்படினு ஒரு பேச்சு வர வரைக்கும் சாப்பிடுறதுக்கு கூட கிச்சன் பக்கம் போக மாட்டோம்.. தட்டுல போட்டு கொண்டு வருவாங்க.. இன்னும் சில பேர் இருக்காங்க... கல்யாணம் ஆன பின்னாடி தான் கணவனை தான் டெஸ்ட் piece(எலி, பூனை) ஆக்கி கத்துக்குவோம்... ஆனாலும் maximum 1 வருஷம் தான்... அவங்க சமையலை விட நல்லாவே செய்துருவாங்க... (அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போகும் போது சமைச்சு போடுங்க... அப்போ சொல்லுவாங்க உங்க அப்பா ( 1 வருஷத்துல உன்னை விட நல்லா சமைக்க கத்துக்கிட்டா. நீயும் தான் 25 வருஷமா ஒரே சமையலே செய்யுர னு)

நம்ம அம்மா பாட்டி எல்லாம் எத்தனை விதமா குழம்பு, சாதம், பொரியல், காலை உணவு செய்துருப்பாங்க... யோசிங்க... சாம்பார். ரசம். கார குழம்பு, குருமா, வழக்கமான புளிசாதம், லெமன் சாதம், தக்காளி சாதம்.... இன்னும் கொஞ்சம்... அதே இந்த காலத்து பெண்கள் எத்தனை விதமா செய்து கலக்குறாங்க தெரியுமா ... எதுவும் சரியா வராம புதுசு புதுசா பேர் வைக்கிறாங்கன்னு ஒரு தோழி சொல்றாங்க... நல்லா வரலைனு பேரை மாத்தி வச்சுட்டா டேஸ்ட் மாறிடுமா??? என்னங்க எதிர் அணியினரே.. இப்படி எல்லாம் வேற ஒரு ஐடியா வச்சுருக்கீங்களா???

அடுத்து பொடி வகைகள், மாவு வகைகள் எல்லாம் அம்மா வீட்டுல இல்லைனா ரெடி மேட் ஐட்டம் வாங்குறோமாம்... கில்லாடி னா என்னங்க! ஒரு செயலை எவ்வளோ திறமையா முடிக்கிறோம் ற து ல தான் அந்த பேர் கிடைக்கும்... சமையல் வேலை, மற்ற வேலை எல்லாம் முடிச்சு இந்த காலத்து பெண்கள் நிறைய பேர் வேலைக்கும் போறாங்க... பிள்ளைகளையும் பாத்துக்கணும்.. இதுல எங்க அவங்க பொடி அரைக்க, மாவு சளிக்க எல்லாம் நேரம் இருக்கும். இவ்வளோ இயந்திரமயமான வாழ்க்கையில இத்தனையும் சமாளிச்சு விதமா விதமா சமைக்கிற நாம (இந்த காலத்து பெண்கள் தான் கில்லாடிகள்)...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்