பெப்பர் கத்தரிக்காய்

தேதி: September 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (8 votes)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு & உளுத்தம்பருப்பு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு மசாலாதூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி காய் வேகவில்லை எனில் மேலும் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான பெப்பர் கத்தரிக்காய் ரெடி.

இதில் மிளகுதூளின் அளவை அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் கூட்டி குறைத்து கொள்ளவும். இதில் சேர்த்துள்ள மசாலா தூள் நான் குழம்பிற்கு பயன்படுத்துவது. வரமிளகாய், மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ இதெல்லாம் சேர்த்து வறுத்து மிஷினில் அரைத்தது. நீங்கள் அவரவர் உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூளையே இதற்கு உபயோகப்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கத்திரிக்காய் சிக்கன் ரேஞ்சுக்கு போஸ் குடுத்திருக்கு. சூபர். இந்த வாரமே செய்துடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... மறக்காம செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மிளகு கத்திரிக்காய் ரொம்ப நல்லா இருக்கு.தயிர் மற்றும் பருப்பு சாதத்திற்கு ஏற்ற ஜோடி :) வாழ்த்துக்கள் !!

இந்திரா ஆமாம் பா நிஜமாவே கத்திரிக்காய பார்த்தா வனிதா சொல்றது போல சிக்கன் போலவே இருக்கு. அப்படியே அந்த எண்ணெய் வெளிவந்ததோட பார்க்கறப்ப சாப்பிடனும் போலவே இருக்கு கத்தரிக்காய் கூட இருக்கு நாளைகு செய்யனும்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... இது தயிர் சாதம்,சாம்பார் சாதம்,பர்ப்பு சாதம்,லெமன் சாதம்,ரசம் சாதம் இது எல்லாத்துக்குமே ரொம்ப நல்லா இருக்கும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... கண்டிப்பா நளைக்கு ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அருமையான ஈசியான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நானும் சிக்கனை எதிர் பார்த்து தான் வந்தேன், ஆனால் சுப்பர் சிக்கரம் செய்து பார்க்கிறேன்

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!கண்டிப்பா செஞ்சி பாருங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கத்திரிக்காய்
அப்பா.. நாக்குல நீர் ஊருது ..
எனக்கு பித்த காய்
அவசியம் செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பெப்பர் சிக்கன் மாதிரி பெப்பர் கத்தரிக்காய் அசத்தலா இருக்கு. நீங்க அரைச்சு இருக்கற குழம்பு தூளில் மசாலா பொருள் சேர்த்து இருப்பது புதுசா இருக்கு. இந்த மசாலா தூள் வேற எதுக்கெல்லாம் பயன்படுத்தினால் நல்லா இருக்கும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி... அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு மிக்க நன்றி... இந்த தூள் எல்லா குழம்புக்கும் பயன்படுத்தலாம்.... சாம்பார், மட்டன் ,சிக்கன்,மீன் குழம்புக்கு கூட போடலாம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நன்றி இந்திரா உடனே பதில் சொல்லிட்டீங்க. நான் இதுப்போல் மசாலாதூள் அரைத்து வைத்துகலாமே தோணுச்சு. இந்த மசாலா தூள் அளவுகளோடு கூட்டாஞ்சோறு பகுதியில் ஒரு குறிப்பா கொடுக்கலாமே.

25 குறிப்பு குடுத்தா தான் கூட்டாஞ்சோறுல சேர முடியும். நான் 4 குறிப்பு தான் குடுத்து இருக்கேன் அதனால என்னால அனுப்ப முடியாது. சாரி வினோஜா வேற வழி இருக்கானு தெரியல. வேணும்னா நான் என் அம்மாட்ட அளவு கேட்டு அரட்டைல சொல்றேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
குறிப்பு அருமை.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு. நாவுல நீர் ஊறுது.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா பெப்பர் கத்தரி பார்க்கவே எடுத்து சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பெப்பர் கத்திரிக்காயை பார்க்கும்போதே சாப்பிடதோணுது ம்ம்ம்ம்... கன்டிப்பா செய்து பார்க்கிரேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
லலிதா

வாழ்த்திற்கு நன்றி... அவசியம் செய்து பாத்துட்டு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பெப்பர் கத்தரிக்காய் சிம்பிள் & சூப்பரான குறிப்பா இருக்கு!
அந்த கடைசிப்படம் அசப்பில 'பெப்பர் சிக்கன்' போலவே இருக்கு! :) கண்டிப்பா செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் இந்திரா.

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்திற்கு நன்றி... அவசியம் செய்து பாத்துட்டு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா இது நான்காவது குறிப்பா? வாழ்த்துகள்...

இதே மாதிரி... குழம்பு தூளிற்க்கு பதிலா ... சாம்பார் பொடி போட்டு செய்வோம்... மிளகு தூள் சேர்க்க மாட்டோம்.... உங்க பெப்பர் கத்திரிக்காய்... சிக்கன் மாதிரி இருக்கும் போல ... புரட்டாசி மாதத்தில் உதவும்

ஆமாம் 4 வது குறிப்பு தான்...வாழ்த்திற்கு மிக்க நன்றி...அதுக்காக நீங்க புரட்டாசி வரைக்கும் வெயிட் பன்ன வேண்டாம் உடனடியா செய்து பாருங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பெப்பர் கத்தரிக்காய் செய்தேன், சுப்பர், நல்லா இருந்தது

பெப்பர் கத்தரிக்காய் செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்று உங்க பெப்பர் கத்தரிக்காய் பண்ணினேன் சூப்பரா இருந்தது.

பெப்பர் கத்தரிக்காய் செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் உங்கள் கத்திரிக்காய் வறுவல் இன்று செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. கண்டிப்பா இப்படி தான் எப்பவுமே செய்வேன்.