hai friends
எனக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகின்றன. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் காதலிக்கும் போது என் அண்ணன் மிகவும் problem பண்ணினான். அவரை மிகவும் கஷ்ட படுத்தினான். ஆனால் திருமணத்திற்கு பின்பு என் கணவர் என்னை விட என் அண்ணனிடம் தான் அதிகம் பழகுகிறார். அவர் வீட்டிற்கு வந்தால் என்னிடம் சரியாக பேசுவது இல்லை. என் அண்ணன் வந்தால் அவனிடமே பேசி கொண்டு இருக்கிறார். என் அண்ணன் அவரை எதாவது திட்டினால் எதுவும் சொல்ல மாட்டேன்கிறார். நான் அண்ணாவை எதாவது சொன்னாலும் என்னை திட்டுகிறார். நான் leave போட்டு என்னை எங்காவது கூட்டி போக சொன்னால் leave இல்லை என்று சொல்கிறார். ஆனால் என் அண்ணன் லீவ் போட்டு வீட்டில் இருந்தால் இவரும் பொய் சொல்லி லீவ் போட்டு அவனுடன் வெளியில் செல்கிறார் என்னை எங்கும் கூட்டி செல்வது இல்லை. நான் சமைத்தால் நன்றாக இல்லை என்று சொல்கிறார். ஆனால் என் அண்ணன் எப்பொழுதாவது சமைத்தால் நன்றாக இல்லா விட்டாலும் super என்று பொய் சொல்கிறார். இதுவரை என்னிடம் ஒரு 5 நிமிடம் கூட உட்கார்ந்து பேசினது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நான் சரியாக சமைப்பது இல்லை என்று அவர் குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்கிறார். இதுவரைக்கும் எனக்காக எந்த விசயத்திற்கும் support பண்ணினதே இல்லை. நான் என்ன செய்வது என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் please
Sangeetha
கஷ்டப்பட்டு காதலிச்சு கல்யாணம் பண்ணி ரெண்டு மாசத்திலேயே வாழ்க்கை வெறுத்து போச்சா...அறுசுவையில் வந்துட்டீங்கல்ல நல்ல சமைச்சு பழகுங்க..ஆனது ஆச்சு நீங்களா வந்து குதிச்சு ஏத்துக்கிட்ட வாழ்க்கை கண்டிப்பா இதை இனிமையா வச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு.நிஜவாழ்க்கைக்கு இப்ப தானே வந்திருக்கீங்க முன்பிருந்த அதே இனிமையையும் சுவாரஸியத்தையும் கைவிடாம காதலிங்க சரியாயிடுவார்
thlika
hai thalika
நான் அறுசுவை ல இருந்து நிறைய reciepe try பண்றேன் பா. ஒரு சில receipe tatste வர மாட்டேன்கிறது.
Hello friend, oru sila
Hello friend,
oru sila receipe taste varlanna enna....balance neriya irrukkeee....whatever i tried from this beautiful website arusuvai..have turned out well for me....
tension illamaa relaxaa cook pannunga...ella nalla varum pa.
If you do your work with luv and dedication,success will cum automatically.
friends
hai friends
என் கணவர் என்னிடம் பேசவே மாட்டேன்கிறார். நான் tea கொடுத்தால் வாங்க மாட்டேன்கிறார் அவரே சென்று தனியாக ஊற்றி குடித்து கொள்கிறார். நான் சாப்பாடு கொடுத்தால் சாப்பிட மாட்டேன்கிறார். நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்கிறார். அவரை எப்படி மாற்றுவது எனக்கு divorce பண்ணி விடலாம் என்று தோன்றுகிறது ஆனால் என்னால் அவர் இல்லாமல் வாழ முடியாது அதை அவர் புரிந்து கொள்ள மாட்டேன்கிறார் நான் என்ன செய்வது. (என் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய இழையை ஆரமிக்க வேண்டாமே என்று இதிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் தயவுசெய்து பதில் கூறுங்கள்.)