இரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .

நான் 17 வார கர்ப்பம், எனக்கு இப்பொழுது இரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .இரவு வேளைகளில் உறங்க முடிவதில்லை . ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே

மருத்துவரை காணுங்கள் ..சில சமயம் அவங்க ஸ்ப்லின்ட் கட்டி உறங்க பரிந்துரைக்கலாம் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்

corecta sonnenga pa

கையை தலைக்கு கொடுத்து தூங்குவியப்பா. அப்படி செய்தாலும் மரத்து போகும்

நீங்கள் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் என்ன ஒரு பிரட்சனையாக இருந்தாலும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை படி நடப்பது நல்லது.
சோ உங்கள் மருத்துவரிடம் நேரிலோ அல்லது போனிலோ கேளுங்கள்

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

சாந்தி லதா சொல்வது சரி, கைய தலைக்கு மேலைய்யோ கிழே ஓ வைத்து தூங்கினால் மறத்து போகும். இந்த பழக்கத்த கொஞ்சம் மாற்றிக்கங்க.

அதிக நேரம் கணணியில்தினம் டைப் செய்தாலும் மறத்து போகும்,( இதற்கு அரை மணிக்கொருமுறை ரெஸ்ட் கொடுங்கள்)

இதுக்கு கை விரல் களுக்கு எக்ஸர்ஸை கொடுத்து கொண்டே இருங்கள்/

இன்னும் ஒன்று கை விரல்கள அனைத்தையும் கட்டை விரலால் ஒன்று ஒன்றாக அழுத்தி எண்ணுங்கள்.15 எண்ணிக்கை வரும் அது போல் அப்ப அப்ப செய்து கொள்ளுங்கள் .

மருத்துவரிடமும் கேட்டு கொள்ளுங்கள்
இது தான் விரலுக்கான எக்ஸர்சைஸ் .
இப்படிக்கு
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்