மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா !

இன்று தினமலரில் இந்த செய்தியை படித்தேன் "வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சட்ட மசோதாவை நான் வரவேற்கின்றேன். ஏனென்றால் என் வீட்டில் ( என் வயது 34 ) அம்மா எல்லா வேலைகளையும் செய்கின்றார். என் தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தை என்று எல்லோருக்கும் நிறைய உழைத்து இருகின்றார்கள். என் அம்மாவுக்கு வேண்டிய துணிமணிகள், நகை என்று என் தந்தையே வாங்கி கொடுத்து விடுவார். ஆனால் இன்று வரை என் அம்மா சுயமாக எதுவும் வாங்கி கொள்ள முடியாது, எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்தால் என் தந்தை கொடுக்கும் சொற்ப பணத்தில்( கரெக்டாக கொடுப்பார்கள் ) பேருந்து, செல்லுமிடத்தில் செலவிட வேண்டிய பணம் அதை தவிர கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா கொடுக்க மாட்டார்கள். அதனால் அம்மா விருப்பத்திக்கு எதுவும் செலவு செய்ய முடியாது, திரும்பி வந்ததும் மிச்ச காசுக்கு கணக்கு கேட்பார்கள். சரி நானும் என் சகோதரனும் நிறைய சம்பாதிக்கிறோம். அம்மாவுக்கு கொடுக்கலாம் என்றால் அதிலும் என் தந்தைக்கு கவுரவம் ( வரட்டு பிடிவாதம், உனக்கு வேண்டியதை நானே செய்வேன், பிள்ளைகள் கொடுத்தால் கூட அது எனக்கு இழுக்கு அப்படி என்று சொல்வார்). அதனால் என் தந்தைக்கு தெரியாமல் கொடுக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட மனிதனுக்கு என்று சிலவுகள் இருக்கும். அதை கட்டிய கணவனிடம் கூட கேட்க சில சமயம் சங்கடமாக இருக்கும். வேலைக்கு போகும் பெண்ணுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் மனைவிக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. என் தாயின் பிரச்சினையை கடந்த 35 வருடமாக பார்த்தால் சொல்கின்றேன். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் என் அம்மா அந்த பணத்தை உரிமையாக எடுத்து அவர்கள் இஷ்டத்துக்கு செலவு செய்து கொள்ள முடியும். இப்போது நான் சம்பாதிப்பதால் கொடுக்க முடிகின்றது 5 வருடங்களுக்கு முன்பு வரை என் அம்மா பட்ட கஷ்டம் இன்று வரை என் அம்மா படும் இந்த துயரம் என்னை தவிர யாருக்கும் தெரியாது. என்னதான் கணவனே எல்லாம் வாங்கி கொடுத்தாலும் வேலையில் செல்லும் போது சுதந்திரமாக செலவு செய்ய முடியாது, ஏனெனில் அதற்கும் கணக்கு காட்ட வேண்டுமே. இதை பற்றி தோழிகள் தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

எனக்கும் இந்த சட்டம் வந்ததில் மகிழ்ச்சிதான் ............. இப்பொழுதான் செய்தியில் பார்த்தேன். எனக்கும் இந்த விஷ்யம் மகிழ்ச்சி தருவதாக உள்ளது...............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மனைவி என்ன வேலையாளா??? சம்பளம் கொடுக்க?!!! ஆச்சர்யமா இருக்கு... இப்படிலாம் கூட மசோதாவா??? இதன் காரணம் சரி... மனைவிக்குன்னு ஒரு தொகையை கணவன் தரணும்னு சொல்றது... ஏன்னா இன்னைக்கும் பல வீடுகளில் ஆண்கள் கையை எதிர் பார்த்து தான் பெண்கள் இருக்கிறர்கள். பையன் சம்பளத்தை முழுசா வாங்கும் பெற்றோரும் இருக்க தான் செய்யறாங்க. அளந்து கொடுத்து மருமகளை சமைக்க சொல்லும் மாமியார்களும் இருக்காங்க. இதை எதையும் நான் மறுக்கவில்லை.

இருந்தாலும் மனைவிக்கு கணவன் சம்பளத்தில் உறிமை உண்டு என்று சொல்லலாமே தவிற அதென்ன... 10 - 20%னு கணக்கு போட்டு சம்பளம்???!!! கேட்கவே ஒரு மாதிரி இருக்குங்க. கணவன் பாதி மனைவி பாதி என்பதே குடும்பம்... நீ பாதி நான் பாதி என வாழும் உறவில்... கட்டாய சம்பளமா??? இது பெண்களுக்கு அவமானம். நம்மை ஏற்கனவே வேலைக்காறி போல நடத்தும் ஆண்களுக்கு இன்னும் நல்ல வசதியா போச்சு. மாசா மசம் நீ செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுகறேன்லன்னு சொல்லிக்கலாம் தைரியமா. கணவன் சம்பளத்தில் மனைவிக்கு முழு உறிமை உண்டு. இதை மறுத்தால் கணவன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிஞ்சா அது சட்டம்!!!

மன்னிக்கணும் தோழிகளே... நீங்க இருவரும் இதை வரவேற்பதாக சொல்லியும் நான் என் கருத்தை தெரியப்படுத்தியமைக்கு மன்னியுங்கள்... இது யாரையும் காயப்படுத்த அல்ல... நம் கணவரிடம் நமக்கு இருக்கும் உறிமையை அளவிட்டு சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. சம்பாதிக்கும் அவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்ய என்ன உறிமை இருக்கோ அதே உரிமை அந்த பணத்தை சம்பாதிக்க அவனுக்கு பின்னாடி துணையா முதுகெலும்பா நிற்கும் மனைவிக்கும் இருக்கு.

நீங்க சொல்லி தான் இப்படி ஒன்னு வர போறதே எனக்கு தெரியும்... அதனால் நான் புரிந்து கொண்டது சரியா இல்லையான்னு கூட சரியா தெரியல. தப்பா இருந்தா மன்னிக்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சம்பளம் வாங்கிட்டு வேலை பார்க்க நாம என்ன வேலை ஆளா??? இப்படி எல்லாம் கணக்கு பார்த்தா குடும்பம் குடும்பமா இருக்காது... அப்போ நமக்கு தர சம்பளத்தை மீறி நமக்கு பெருசா ஏதோ அவசர (மருத்துவ) செலவு வந்தா நாமலே பார்த்துக்குவோமா என்ன !!! அப்போ யார் வந்து நிற்பது??? உறவுகளுக்குள்ள கணக்கு பார்க்க கூடாது ... அதுலயும் கணவன் மனைவி உறவு அதையும் தாண்டுன ஒரு பந்தம்... அதுல போயி சம்பளம் அது இது னு !!!

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Correct ah sonneenga vani akka. Yarum nan vani akka ku jaalra adikkiren nu nenaika vendam. Yen na vani akka sonnadhai nan munmozhigiren. En manasula patta sila visayatha apdiye solli irukanga vani akka. Already ellaa aangalum ladiesa servant madhiri thaan nadathuranga. Ini paarunga, sambalam kuduthuttu innum thenavatta nadandhukka poranga. Naanum en thanipatta karuthaye inge solli iruken. Thappa irundha sorry.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் மட்டும் தானிப்படி எல்லாம் யோசிக்கறனோன்னு பயந்துட்டேன்... கார்த்திகா, நித்யா பதிவை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு.

பெர்சண்டேஜ் வாங்கிட்டு வேலை செய்ய நாம பிசினஸ் பார்ட்னர் இல்லையே... லைஃப் பார்ட்னராச்சே. கார்த்திகா சொன்ன மாதிரி உயிரோடு கலந்த பந்தம் இது... இதில் உன் பணம் என் பணம் என்ற வார்த்தையே தப்பானது. இவர்களில் யார் சம்பாதிச்சாலும் அது அவர்கள் வாழ்க்கைக்கு, அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கைக்குன்னு பொதுவானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,நித்யா,கார்த்திகா நானும் உங்க கட்சி தான். நான் காலையிலேயே இந்த இழைய பாத்தேன் எங்க என் மனசுல இருக்குறத சொன்னா தப்பா நினைப்பாங்களோனு தான் எதும் சொல்லாம் போயிட்டேன்.

கணவன் மனைவி உறவு என்பது ரொம்ப புனிதமானது. அதுல போயி பணத்த சம்மந்த படுத்துறது எனக்கு சுத்தமா பிடிக்கல.அப்புறம் நமக்கும் வேலைக்காரிக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு பணம் தேவைனா உரிமையோட(சண்ட போட்டு கூட) கணவர்ட்ட கேட்டு வாங்கிக்கலாம் அதுக்கு எதுக்கு சட்டம்?இன்னும் சொல்லப்போனா கணவர் கஷ்டபட்டு சம்பாதிக்கிறதே மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தானே இத யாராவது மறுக்க முடியுமா? அப்புறம் எதுக்கு தனியா மசோதா?
//கணவன் சம்பளத்தில் மனைவிக்கு முழு உறிமை உண்டு. இதை மறுத்தால் கணவன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிஞ்சா அது சட்டம்!!!//
என் கருத்த்ம் இது தான்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய்..... அன்புத்தோழிகளே....... இந்த மசோதாவில் நன்மையும் உண்டு, மறைமுகத் தீமையும் உண்டு.

நன்மை என்னன்னா அன்றாட வீட்டு செலவுக்கு கூட கணவனோடு மல்லுகட்டி போராடும் குடும்பத்தலைவிகளுக்கு இது மிகுந்த நன்மை.

மாதம் பிறந்ததும் மனைவி கையில் குறிப்பிட்ட தொகை தந்து வீட்டு செலவை பார்த்துக்கோமா என சொல்லும் கணவர்கள் உள்ள வீட்டில் இந்த மசோதாவால் ஒரு பாதிப்பும் இல்லை.

தன்னோட குழந்தைக்கு ஆசையாய் ஒரு ஐஸ்கிரீம் வாங்கக்கூட கைய்யில் காசில்லாத படி மனைவியை வைத்திருக்கும் கனவர்கள் உள்ள வீட்டில் கண்டிப்ப பிரச்சனை வரும். நான் காசு கொடுத்திட்டேன்; என் வேலை முடிந்தது என ஒதுங்கி நழுவப்பார்ப்பர்கலாக மாற வாய்ப்புள்ளது.

எனினும் ஊதாரி கணவர் உள்ள வீட்டிற்கு நன்மை.......
ஊதாரி மனைவி உள்ள வீட்டிற்கு இது பெருந்தொல்லை.........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நானும் உங்க கட்சி தான் தோழிகளே. அன்பு, பாசம், சோகம், சந்தோஷம் இப்படி எல்லாத்தையுமே இருவரும் பகிர்ந்துக் கொள்ளும் போது அது என்னங்க பணம்னு வந்தா மட்டும் அவங்களா நமக்கு 20% 30% னு பிரிச்சு கொடுக்கறது அதுலயும் ந்மக்கு சரியான உரிமை இருக்குங்க.
ஆமாங்க இந்த சம்பளம்ங்கிற வார்த்தைய கேட்கவே ஒரு மாதிரி இருக்குங்க, மனைவிகளாஇ டாமினேட் பண்ணாதவங்க கூட இனிமே ஆரம்பிச்சுடுவாங்க. இந்த மாதிரியான வார்த்தைகளையும் மசோதாகளையும் கொண்டு வந்து கணவன் மனைவி உறவை அன்னியப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து.

காலையிலே எனக்கு இப்படி போடணும் னு தோணுச்சு... ஆனா முதல்ல இந்த நியூஸ் போட்டவங்க தப்பா (அவங்களை oppose) பண்றேனு நினைச்சுப்பாங்க னு தான் பேசாம விட்டுட்டேன்... எதையுமே தொடங்கி வைக்க ஒரு தல வேணும்ல(ஹா ஹா ஹா)

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஆனந்தப்ரியா 100% சரி. வீட்டு செலவுக்கு பணம் கொடுத்தாலே சம்பள்ம் முழுசா கொடுத்துட்டேன். இதுக்கு மேலே எனக்கு தெரியாது என்று சொல்லுபவர்களிடதிலிருந்து கொண்டு என்ன செய்வது என்று சொல்பவர்கள் நிறய பேர் பார்த்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்