வாங்க தோழிகளே...... உணர்வோம்.....பின்பற்றுவோம்.....

அன்புத்தோழிகள் அனைவருக்கும் வணக்கம். பொதுபிரச்சனைகள் தற்போதைய சூழலில் மணிக்கொரு செய்தியாக வருவதும், அடுத்த பிரச்சனை வந்ததும் பழைய பிரச்சனையை மறப்பதும், மீண்டும் மீண்டும் ஒரே வகை பிரச்சனையில் வலிய போய் சிக்கிக் கொள்வதும் இன்றைய மக்களின் வாடிக்கையாகிவிட்டது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை தீர்க்க எடுக்கும் முயற்சியை நம்மிலிருந்தே ஆரம்பிப்போம் என்ற எண்ணம் கூட இல்லை. அப்படியே சொன்னாலும் காதுகொடுத்துக்கேட்பதில்லை. அன்றாடம் பிரச்சனைகளை எதிர்கொண்டு எதிர் கொண்டு மரத்துப்போனவர்கலாகவே ஆகிவிட்டோம் என்றே தோன்றுகிறது.

தற்போது வெளிவரும் பிரச்சனைகள் எல்லாம் எந்த ரூபத்திலாவது மனித உயிரை பலிவாங்கியபின்புதான் விளிச்சத்திற்கு வருகிறது. எல்லாவற்றிலும் அலட்சியம். அதற்கு பலன் உயிரிழப்பு.

# "சாலைவிபத்தில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்"
[சாலை விதிகள் பற்றி சுத்தமா அக்கறை இல்லை மக்களுக்கு. சென்றவாரம் என் மகலை பள்ளியிலிருந்து டூவீலரில் அழைத்துவரும்போது என்னைப்போலவே இன்னொரு அம்மா அவர் குழந்தைகளை டூவீலரில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அவர் வண்டியிலுள்ள புத்தகப்பையின் வார் வெளிப்பக்கமாக இருப்பதை சுட்டிக்காட்டினார் ஒருவர். அதை அவர் அலட்சியம் செய்தபடி போனதில் கொஞ்ச தூரத்திலேயே வேறொரு வண்டியில் மாட்டி ரோட்டில் விழுந்து ஒரு டிராஃபிக் ஜாமை உண்டுபண்ணி குழந்தைகள் அழ, அவர் அழ, திட்டு, காயம், வண்டி டேமேஜ் என சகலத்தையும் வாங்கிகிட்டு போனார். இதுபோல அன்றாடம் வயது வித்தியாசம் இன்றி அலாட்சியத்தால் தானும் சிக்கி, அருகில் இருப்பவர்கலையும் சிக்க வைக்கின்றனர் என்பதே சோகம்........]

# அரசுத்தேர்வாணைய தேர்வில் வினாத்தாள் மோசடி

# குறந்த முதலீட்டில் அதிக லாபம் என்க்கூறி ஈமு, நாட்டுக்கொழி பண்ணை மோசடி

#எம்.எல்.எம் பிசினஸ் என்ற பெயரில் மோசடி
[ இதில் சேருவதற்கு அவர்கள் சொல்லும் கதையை கேட்டா ஐ.நா சபை நீதிமன்ற தீதிபதி கூட மயங்கிடுவார். குறிப்ப இப்போ இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பென்கள் படும் பாட்டை பார்த்தால் பாவமாதான் இருக்கு. தங்கல் உறவினர்கல், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எனத் தனக்கு தெரிந்தவர்கல், தெரியாதவர்கள் என யாராவது சிக்கினால் போது; அது வாங்குங்க, இதை வாங்குங்க என்று தனது பொருளை விற்பதில் மும்முரமாகிவிட்டனர். நிச்சயமா இதுபோன்றவர்களைக்கன்டால் தெரித்து ஓடி ஒளிபவர்கலே அதிகம்]

# யாராவது மனித உயிரிழப்பு ஏற்பட்ட பின்புதான் மக்கள் மாய்ஞ்சு மாஞ்சு குரல் கொடுப்பாங்க. அரசும் மாங்கு மாங்குனு சட்டம் இயற்றும். அதுவரைக்கும் சரி அதற்குப்பிறகும் சரி எல்லோருமே கண்ணிருந்தும் குருடர்கள்..... காதிருந்தும் செவிடர்கள்..........

கொஞ்ச நாளா அருசுவை பக்கம் வராததால் உங்கல் அனைவருடனும் பேச, உங்கல் கருத்துக்கலையும் கேட்க விருப்பம். அனைவருக்குமே நமது சமுதாய பிரச்சனை குறித்து ஆதங்கம் இருக்கும். அதை இங்கு என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கல் தோழீஸ்........& தோழர்ஸ்........ தெரியாதவர்களுக்கு விழிப்புனர்வாக இருக்கட்டும்.

நீங்கள் சொல்வது உண்மைதான். எங்கு பார்த்தாலும் சாலை விபத்துகள் நடக்கின்றன. நாம் கவனமாக சென்றாலும் பக்கத்தில் வருபவர்களின் கவன குறைவால் தான் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. சமீபத்தில் நான் டூவிலரில் ஆபிஸ் செல்லும் வழியில் டூவிலரின் சைடு ஸ்டான்டு எடுக்காமல் வேகமாக சென்று திரும்பியதில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்து நடந்த்தை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. எனவே நாம் டிரைவ் செய்யும் போது மிகவும் கவனமாக இருந்தால் விபத்துகளை தவிர்கலாம் என்பது என் கருத்து.

thanks

நேற்று கூட சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர்.பலி எண்ணிக்கை இனியும் உயரக்கூடும்னு சொல்றாங்க. இதுக்கு என்ன காரணம்? இவ்வளவு பட்டாசு தயாரிக்கிறாங்க அதுக்குரிய பாதுகாப்பு எதுவும் கிடையாது.முதலாளிகளுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள் , தொழிலாளிகளோட உயிர பத்தி கவலையே இல்ல.அளவுக்கு அதிகமா வெடிபொருள் இருக்கு ஆலைய மூடுங்கனு ரைடு வந்த அதிகாரி சொல்லியும் கேக்காம மெத்தனமா இருந்ததோட விளைவு தான் இது. இந்த மாதிரி விபத்து நடக்குறது ஒன்னும் முதல் தடவை இல்ல இதே மாதிரி நிறைய தடவ நடந்து இருக்கு . ஒரு வாரத்துக்கு இத பத்தி பெருசா பேசிட்டு அதுக்கு அப்புறம் எப்போவும் போல பழய குருடி கத தொறடி கதை தான்.

நான் சிவகசி பக்கத்து ஊருனால எனக்கு வெடி தயாரிக்கிறத பத்தி கொஞ்சம் தெரியும். வெடிக்கு யூஸ் ப்ன்னுற திரி அதாவது நாம வெடியில அத வெடிக்க வைக்க ஒரு திரியில பத்த வைப்போம்ல அந்த திரி தயாரிக்கிற வேலை தான் சிவகாசி அத சுத்தி இருக்குற கிராமத்து மக்களோட வேலை. இந்த திரி தயாரிக்கிறத வீட்டுல வச்சி செய்ய கூடாது லைசன்ஸ் வாங்குன அதுக்குனு இருக்குற கம்பெனில போயி தான் பன்னனும்னு சட்டம் இருக்கு.ஆனா அதை எல்லாம் யாரு கேக்குறா.இந்த திரி தயாரிக்கிற வேலைய சிவகாசி அத சுத்தி உள்ள கிராமம் எல்லாத்துல்யும் வீட்டுல வச்சி தான் செய்யுறாங்க இதுல எங்க ஊரும் அடங்கும்.இந்த மாதிரி வீட்டுல பன்னுறது மிகவும் ஆபத்து . வீட்டுல வச்சி பண்ணுறது சம்மந்த பட்ட அதிகாரி போலிஸ் எல்லாருக்குமே தெரியும் ஆனா யாரும் கண்டுக்கிறது இல்ல காரணம் லஞ்சம் எல்லா இடத்துலயும் பணம் தான் பேசுது.இந்த தொழில்னால(வீட்டுல வச்சி பன்னுறதால) மாசத்துக்கு ஒரு விபத்து நடந்துட்டு தான் இருக்கு 2 பேராவது செத்துட்டு தான் இருக்காங்க.இந்த மாதிரி எதாவது விபத்து நடந்த மட்டும் ஒரு 2 நாளைக்கி அதிகாரி எல்லாம் ரைடு வர மாதிரி வருவாங்க ஆளுங்கள பிடிக்கிற மாதிரி பிடிப்பாங்க எல்லாம் ஒரு கண் துடைப்பு வேலை தான். 2 நாள் கழிச்சி திரி சுத்துற வேலை வீட்டுக்கு வீடு எப்போவும் போல ஜோரா நடக்கும்.

இப்போ எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரும் அதான் கம்பனில போயி பன்ன சொல்றாங்களே அப்புறம் ஏன் வீட்டுல ப்ன்னுறாங்கனு அதுக்கும் பணம் தான் காரணம். இப்போ கம்பனில போயி பண்ணா இந்த வேலைக்கு ஒரு ரோல் திரி சுத்துனா 150 ரூபாய் சம்பளம் தரணும்.அந்த கம்பனிக்கு சில ஏஜண்டுக போயி நீங்க எங்களுக்கு மொத்தமா திரி குடுங்க நீங்க குடுக்குற கூலிய விட குறச்ச விலைக்கி(125 ரூபா) நாங்க சுத்தி தரோம்னு வாங்கிட்டு வருவாங்க. இந்த ஏஜண்ட்டுக அத பிரிச்சி யாரு யாரு கேக்குறாங்களோ அவங்க வீட்டுக்கே போயி குடுப்பாங்க.இவங்க ஒரு ரோலுக்கு 100 ரூபா தான் குடுப்பாங்க.சின்ன குழந்தைய தனியா வச்சிட்டு இருக்குறவங்க, வீட்டு வேலையும் பாத்துட்டு சம்பாதிக்கணும்னு நினைக்கிறவங்க, சொகுசா டிவி பாத்துட்டே சம்பாதிக்கனுனு நினனிக்கிறவங்களுக்கெல்லாம் இது தான் சரி பட்டு வரும் கம்பனில போயி வேலை பாக்க விரும்ப மாட்டாங்க....இந்த மைனஸ் பாயிண்ட ஏஜண்ட் யூஸ் பன்னிகிறாங்க. மக்களும் இதுல இருக்குற ஆபத்த தெரிஞ்சே இந்த தொழில வீட்டுல செய்யுறாங்க..இதுல யார குத்தம் சொல்றது? அதிகாரிகள் ஒழுங்கா இருந்தா பிரச்சனையே இல்லயே.. அவங்க ஒழுங்கா இருந்தா ஏஜண்டும் இருக்க மாட்டாங்க ... ஏஜண்ட் இல்லனா எல்லாரும் ஒழுங்கா கம்பனிக்கி போயி திரி வேலை பாப்பாங்க..

இது என் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருந்த ஆதங்கம். நான் ஊருக்கு போன் பன்னுறப்போ என் அம்மா யார் வீட்டுலயாவது திரி விபத்து நடந்தா சொல்லுவாங்க அத கேக்கும் போதெல்லாம் மன்சு வலிக்கும்.இன்னிக்கி இத சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சதும் எல்லாத்தயும் கொட்டிட்டேன்.(ரொம்ப அதிகமா பேசிட்டேனோ....)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா மிகச்சரியா சொல்லிருக்கிங்க,அதும் நீங்க பக்கத்துல இருந்து பார்த்ததால அதனோட பாதிப்பு உங்களுக்கு நல்லவே தெரியும் ,னீங்க அதிகமா பேசல ,நானும் இதை பத்தி கருத்து தெரிவிக்கலாம்னு வந்தேன் ,நீங்களும் என்னுடைய கருத்தையும் சேர்த்து இன்னும் நல்லாவே சொல்லிட்டிங்க..

Be simple be sample

ஆனந்தபிரியா உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆகுது,எப்படி இருக்கிங்க,

நல்ல இழை தொடங்கினிங்கப்பா.சரியாதான் சொல்லறீகீங்க,இதும் சமிபத்தில் நடந்த ஒரு ந்கழ்ச்சி ,அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையி முகத்தை எலி கடித்து குதறியுள்ள்து..குழந்தை இறந்ததே கொடுமை ,இதில் அந்த குழந்தைக்கும் இப்படி ஒரு கொடுரம் என்றால் ,உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததும் ,விஷயம் பெரிதாகி செய்திதாளில வந்ததும் ,அரசு மருத்துவமணைகாலி உள்ள எலி,நாய் அனைத்தைஉம் பிடிக்க உத்திரவு போடப்பட்டுள்ளது.......எலி பிடிக்க போனா அங்க பாம்பு கிடைக்கிரது தனி கதை .....இது நடந்து ஒரு வாரம் முடிந்தது....இப்ப இது பெரிய விஷயம் இல்லை நமக்கு........வேறு விஷயம் நடக்கும் வரை........

Be simple be sample

ரேவதி எங்க ஊரு முழுவதும் இந்த வேலை தான். பார்க்க கஷ்டமா இருக்கும் ஆனா அவங்க வயித்து பொழைப்புக்கு பன்னுறாங்க என்ன பன்னுறது? எங்க சித்தியும் இந்த வேலை தான் பன்னுறாங்க. அவங்க தனியா வேலை பாக்க எப்படியோ இருக்குனு எங்க வீட்டுல திரிய கொண்டு வந்து சுத்துவாங்க என்னயும் கொஞ்சம் சுத்தி தர சொல்லுவாங்க. ஆபத்துனு தெரிஞ்சும் எங்களால எதும் சொல்ல முடியாது ... நானும் பாவமேனு கொஞ்சம் திரி சுத்தி தந்து ஹெல்ப் பன்னுவேன்....வேற என்ன பன்ன முடியும் சொல்லுங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அன்புத்தோழிகளே...... ரேவதி, இந்திரா....... நலமா. சிவகாசி விபத்து மிகவும் கொடுமையிலும் கொடுமை. மனசுக்கே ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. அந்த பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்க்காகவே அத்தொழிலை நோக்கி வர வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

அங்கு விவசாயத்திற்கு வழியில்லை. நன்கு வானம் பார்த்த பூமி. வேறு என்ன தான் செய்வார்கல். பாவம்.

தீவிரவாதிகல் தான் கலவரத்திற்காக குண்டு வைத்து மனிதர்கலை சின்னாபின்னமாக்கி கொல்லுகின்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்து எந் தெரிந்தும் வேறு வழியின்றி போய் இப்படி சின்னாபின்னமாகிவிட்டனரே........

தோழிகலே....... இனியாவது முடிந்த வரை பட்டாசு உபயோகிப்பதை தவிrப்போம். நாம் வாங்க போய் தானே அவங்கலும் அதிகமா தயாரிக்கறாங்க. தற்போது அது ஸ்டேட்டஸ் சிம்பல் மாதிரி நிறைய பேர் காட்டிக்கறாங்க. அது போன்றவர்கள் கண்டிப்பா தவிர்க்கனும்.

அப்பகுதி மக்கள் எல்லோரும் சேர்ந்து போராடினால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அப்பகுதிகளுக்கு கிடைக்கும்.

சிறிய விபத்தானாலும் சரி பெரிய விபத்தானாலும் சரி பாதிப்பு பாதிப்பு தான். விழிப்புணர்வு மட்டுமே தேவை.............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அதேபோல டப்பர்வேர் பிசினஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தோழீஸ். எனக்கென்னவோ அது நல்லதா படலை. அதுபற்றியும் ஆலோசிக்கலாம். பிளாஸ்டிக்கெ செயற்கை. இது இயற்கை பிளாஸ்ட்டிக்னு சொல்லிக்கொண்டிருக்கிரார்கள். இயற்கை சாயம் பயன் படுத்தியுள்ளார்களாம். எப்படி நம்புவது......... சொல்லுங்க தோழீஸ்.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆமாம் சுபா.... கவனக்குறைவும், அவசரமும் தான் விபத்திற்கு காரணமாகிவிடுகிறது.

அதுவும் ரோட்டில் நடந்து செல்லும் போது கல்யான ஊர்வலத்திற்கு செல்லுகிறமாதிரிதான் போறாங்க. அட போனாலும் பரவாயில்ல திடீர்னு ரோட்ட கிராஸ் செய்வாங்க. அப்புரம் வன்டிக்காரன் இடிச்சிட்டான்னு ஊர கூட்டிடுவாங்க. அதற்கு ரோட்டை கடக்கும் முன்பு ரோட்டின் இருபுரமும் வண்டி வருதான்னு பார்த்திருந்தாலே பாதி பிரச்சனை போயிருக்கும்....

அவசரம் அவசரம் என அனைத்திலும் அவசரம். இதுபோன்ற அவசரக்காரர்களால் தான் லஞ்சம், விபத்து, மோசடி என எல்லா பிரச்சனைகளும் உருவாகிறது.

சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தால் வெளியான விவகாரம் தொடர்பாக திரு.நட்ராஜ் அவர்கல் சொன்னது போல எப்படியாவது அடுத்தவனை மிதித்து நசுக்கியாவது குறுக்குவழியில் சுலபமா எல்லாத்தையும் வாங்கிடனும் என்ற எண்ணம் பொதுவாக மேலோங்கிவிட்டது.

எல்லா தரப்பு மக்களுக்கும் தாமும் மற்றவர்களைப்போல முன்னேரனும் என்ற எண்ணம் இருப்பது நியாயமானதே. நல்ல விஷயம் தான். ஆனால் அது இயற்கைக்கு மாறாக ஆசை என்பது பேராசை என்ற சொல்லையும் தாண்டி கொலவெறியாகவே இருக்கிறது........ பொறுமை, நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே நிரந்தரம் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இந்த இழை ஆரம்பிச்சதற்கு நன்றி. ஈமு கோழி பத்தி பேசலாம்ணு போனவாரம் சொன்னேன். ஆனால் இவ்வளவு குற்றங்கள் நம் நாட்டில நடக்குதேனு வேதனையா இருக்கு. நீங்க சொன்னது போலவே இன்னுமொறு மோசடி தொலைபேசி மூலம் உங்களுக்கு ஒரு கிப்ட் வவுச்சர் வந்து வாங்கிக்கோங்க. 45000 மதிப்புடையது அப்படிம்பாங்க ஏமாந்துறாதீங்க தோழிகளே! சிவகாசி தீ விபத்து ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

ஆனந்த பிரியா... ரொம்ப நாளைக்கு பின் ஒரு நல்ல இழையில் பயனுள்ள விஷயங்களை பேசுறோம். மகிழ்ச்சி.

எதுல இல்ல நம்ம மக்களுக்கு அலட்சியம்??

இந்த தளத்தில் மெயில் ஐடி, போன் நம்பர் கொடுக்காதீங்கன்னு சொல்லும் சின்ன விஷயத்தில் இருந்து துவங்குது... நம்ம அலட்சியம். இவங்க யாரு சொல்லன்னு போயிட்டே இருப்பாங்க. இது அந்த அளவு ஆபத்து இல்லைன்னாலும், இதுவும் பெண்ணுக்கு பிரெச்சனை தரும் விஷயம் தான்... யாரும் கேட்பதில்லை. :)

ரோட்டில் போகும் போது ஒரு வண்டியில் ஸ்டாண்ட் எடுக்கல, ஒரு காரில் எதாவது லீக் ஆகுது என்றால் யாரும் முடிஞ்சா சொல்வாங்க, ஆனா அதுக்காக மெனகிட்டு ஒரு உயிராச்சே, எப்படியாவது சொல்வோம்னு சொல்ல மாட்டாங்க. நமகென்ன... அவங்களுக்கு உதவ போய் நமக்கு ஒன்னும் ஆயிட கூடாது.

குழந்தைகளை கூட்டிட்டு டூ வீலர்... பெல்ட், ஹெல்மட் எதுவும் இல்லாம குழந்தை. கூட்டி போகும் நாம சேஃபா ஹெல்மட் போட்டா போதுமா??? போதாதுக்கு பலர் குழந்தையை முன்னால் நிக்க, உட்கார வைக்காம பின்னாடி உட்கார வைக்கிறாங்க... பள்ளி முடிஞ்சு தூங்கி வழிஞ்சுட்டே போகுதுங்க பாவம். அது பின்னாடி தூங்கும், இந்த அம்மாவோ அய்யாவோ முன்னாடி எதுவும் தெரியாம வண்டி ஓட்டுவாங்க. என்ன செய்ய கூட்டிட்டு போக நம்மகிட்ட காரா இருக்கு??

ரோட்டோரம் தூங்குறவங்க மேல தூங்கிகிட்டே வண்டியை விட்டான் லாரி ட்ரைவர்... என்ன செய்ய... அதுக்காக வீட்டுக்கு எங்க போக?? அரசு வீடு கொடுத்தாலும் அதை வாடகைக்கு விட்டு சம்பாதிப்போம், நாங்க ரோட்டுல தானே தூங்குவோம்??? அரசு வீடு கொடுக்கும், பணம் கொடுக்குமா??

ரோட்டோரம் கடைகள் வேணாம், ட்ராஃபிக் பாதிக்குது, சாலை ஓரம் நடைபாதை இல்லை... அதுக்காக நாங்க கடையை எங்க போட??? நாங்க எல்லாம் ஏழைகள், ரோட்டோரம் ப்ளாட்ஃபார்ம் தான் கடை போட முடியும்!!! எங்க கடைக்கும் ரெகுலர் கஸ்டமர்ஸ் இருக்காங்க... எங்க கடை முன்னாடி அரசு பார்க்கிங் இருந்தாலும், அது நோ பார்க்கிங் ஏரியா தான்.

அங்க அங்க அரசு சாக்கடை, பல்லம் தோண்டுறதுன்னு தோண்டி யாராவது விழுந்தா சண்டைக்கு நிப்போம்... ஆனா வீட்டு பக்கம் போர் போட்டா சேஃபா மூடி வைக்க மாட்டோம். எங்கையோ யார் பிள்லையோ அப்படி விழுந்துச்சுன்னா நம்ம வீட்டிலும் அபொபடி நடக்கணும்னு அவசியமில்லையே... அதனால் நாங்க பிள்ளைகளையும் சேஃபா பார்க்க முடியாது... இருக்குறது குடுசையில... பசங்க எங்க போகுது எங்க விளையாடுதுன்னா பார்க்க முடியும்?? எவன் போட்டான் போருன்னு தெரியல, அவன் தான் நஷ்ட ஈடு தரணும். பிள்ளை போனாலும் பணம் வருதே.

ஃப்ரெண்ட் ஓசியில் தண்ணி வாங்கி கொடுப்பதே பெரிய விஷயம்... சீப்பா பாண்டிச்சேரி போய் கிடைச்சா இன்னும் சந்தோஷம்... அடிச்சாலும் போன டூ வீலர்ல தானே வர முடியும்??? அதை பாண்டிசேரியில் விட்டுட்டு பஸ்லயா வர முடியும்?? போட்ட சரக்கு தெளியும் முன்னாடி பரலோகமே போனாலும் தெரியாதே. நாங்க ரொம்ப ஸ்டெடி.

புடவை கட்டிகிட்டு டூ வீலரில் ஒரே பக்கமா உட்காருவோம்... பாலன்ஸ் இல்லையா, புடவை சக்கரத்தில் மாட்டுதா?? அத அவ தான் கவனமா இருக்கணும், என் குடும்ப வழக்கம் புடவை தான் கட்டணும். வேகமா தான் போயாகணும் பின்னாடி பொண்டாட்டி இருக்காளே உருட்டுனா என்ன நினைப்பா, இந்த ட்ராஃபிக்கில் சிக்கினா பூந்து பூந்து தான் போயகணும், ஒத்த பக்கமா இருக்கவ காலு இடிக்குமோ??? தெரியல... அவ பார்த்துப்பா.

ஹாஸ்பிடலில் சேர்க்கிறோம்... லஞ்சமா, இடம் சரி இல்லையா... என்ன செய்ய... இன்னும் 2 நாளோ 3 நாளோ... முடிஞ்சதும் கிளம்பிடுவோம்... அதுவரை பல்லை கடிச்சுகிட்டு இருப்போம்.. சொன்னாலும் நம்மை ஒழுங்கா கவனிக்காம விரட்டி விட்டுடுவாங்க ஹாஸ்பிடல் ஆட்கள். இங்க இருந்து போனா எங்க சேர்க்க?? எதாவது பிரெச்சனையா?? ஹாஸ்பிடலும், அரசும் நஷ்ட ஈடு தரும்.

இன்னும் நிறைய இருக்குங்க... பார்ட்டி சமையலை துவங்கணும்... வரேன் நாளை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்