தக்காளி சாம்பார்

தேதி: September 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

துவரம்பருப்பு - 75 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3 பெரியது
பச்சைமிளகாய் - 3
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் தூள், கொத்தமல்லி எல்லாவற்றையும் போடவும்.
பின்பு தேவையான அளவு நீர் விட்டு குக்கரை மூடி 4 விசில் விடவும் (விசிலின் எண்ணிக்கை குக்கரை பொறுத்து மாறுபடும் அதனால் பருப்பு கரையும் வரை விடவும்)
மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.
பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கரண்டியால் நன்கு பருப்பு, தக்காளியை மசித்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த விழுதை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும் அல்லது குக்கரை மூடி 1 விசில் விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
தாளித்ததை சாம்பாரில் கொட்டவும்.
இப்போது எளிதில் செய்ய கூடிய தக்காளி சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹ்ம்ம் சுப்பர் சாம்பார் அக்கா கடைசி ல ப்றேசெண்டஷன் இஸ் சுப்பர் அக்கா ஈசியாவும் இருக்கு செய்முறை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹலோ இந்திரா ...தக்காளி சாம்பார் சூப்பருங்கோ :)
இன்று தோசைக்கு உங்க சாம்பார் தான் செய்யப்போறேன் ,மீண்டும் பதிவிடுகிறேன். நன்றி !

இந்த்ரா
சாம்பார் அருமை.
நான் நாளைக்கே செய்து பார்த்து பதிவு போடறேன்
கடைசி படம் செம ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் இந்து,
அருமையா செஞ்சு இருக்கிங்க...கடைசி படம் நல்லா இருக்கு....
தக்காளி அதிகம் சேர்க்குறதுனால நீங்க புளி சேர்க்கலையா??

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... நேத்து சாம்பார் செஞ்சீங்களா? நல்லா இருந்ததா? உங்க பதிலுக்காக வெயிட்டிங்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... செஞ்சி பார்த்டுட்டு எப்படி இருந்துச்சினு கண்டிப்பா சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... இந்த சாம்பார்க்கு புளி சேர்க்க தேவை இல்ல...புளி சேர்த்தா நல்லா இருக்காதுனு நினைக்கிறேன் .நான் இது வரைக்கும் புளி சேர்த்து செஞ்சது இல்ல..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா
சாம்பார் அருமை. வாழ்த்துக்கள்!
படங்கள் சூப்பரா இருக்கு. கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... செஞ்சி பார்த்டுட்டு எப்படி இருந்துச்சினு கண்டிப்பா சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா சூப்பரான சாம்பார் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,

நேற்று லன்ச்சுக்கு உங்க தக்காளி சாம்பார் செய்தேன். செய்வதற்கு ரொம்ப ஈசியா, சுவை சூப்பரா இருந்தது! :) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

தக்காளி சாம்பார் செஞ்சதோட மட்டும் இல்லாம் அத மறக்காம வந்து பதிவு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.சாம்பார் உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோசம்..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த்ரா

இன்று இரவு உங்க சாம்பாரும், உருளை வறுவலும் செய்தேன்.நன்றாக இருந்தது. சுலபமாக இருந்தது. நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாம்பார் செய்து பார்த்து மறக்காம பதிவிட்டதற்கு நன்றி... உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோசம்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப வித்தியாசமா அரைச்சு விட்டு சாம்பார். அவசியம் செய்து பார்த்து சொல்றேன். நல்லா வாசமா இருக்குனு தோணுது. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்திற்கு மிக்க நன்றி... செஞ்சி பார்த்டுட்டு எப்படி இருந்துச்சினு கண்டிப்பா சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹலோ இந்து...உங்க ஸ்டைலில் சாம்பார் வைத்து கூடுதலாக 2 தோசையை விழுங்கிவிட்டு உண்ட களைப்பில் அப்படியே தூங்கிவிட்டேன்,அதான் அன்றே(friday) பதிவிட முடியல....!
என்னவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டார். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)

சாம்பார் செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி... உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பிடித்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் பெயரே vibgy தானா? விருப்பம் இருந்தால் பெயர் என்னவென்று சொல்லவும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய் இந்து.... நான் mrs.விப்ஜி (பெயர் -ஜெபி )
அருமையான குறிப்புகளாக கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்:)ம்ம்...அசத்துங்க!

இந்திரா.. இன்னைக்கு உங்க தக்காளி சாம்பார் செஞ்சேன் ரொம்ப நல்லா இருந்துது.. வீட்ல எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அதான் உடனே பதிவிட ஓடி வந்துட்டேன் .. ரொம்ப ரொம்ப நன்றி..

அன்புடன்,
zaina.

தக்காளி சாம்பார் செஞ்சி பார்த்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி. உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சதுனு கேக்குறப்போ ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்க பேரு அழகா இருக்கு.உங்க வாழ்த்திற்கு நன்றி.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நீங்க முன்னாடி அரட்டைக்கு வருவீங்களே அந்த ஜைனா தான? இப்போ ஏன் அரட்டைக்கு வரது இல்ல.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அதே ஜைனா தான் .. எப்படி இருக்கீங்க இந்திரா ..ஊருல இருந்து வந்து 20 நாள் ஆகுது பையனுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல அதான் அரட்டைக்கு மட்டும் வரல மத்தபடி டைலி அருசுவை பார்த்துட்டுதான் இருக்கேன் .. இனி அரட்டைக்கும் வந்துட வேண்டியதுதான்.

அன்புடன்,
zaina.

ஊருக்கு போயிருந்தீங்களா? அதான் வரலையா ஓகேஓகே.. நான் நல்லா இருக்கேன். நீங்க முதல பையன நல்லா பாத்துக்கோங்க பையனுக்கு உடம்பு சரியானதுக்கு அப்புறம் அரட்டைக்கு வாங்க நாங்க வெயிட் பன்னுறோம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

migavum tasty yaaga irunthathu,