சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

தோழிகள் அனைவரும் பகுதி ஒன்றை போலவே இந்த பகுதிக்கும் ஆதரவு தந்து வெற்றி அடைய செய்ய வேண்டுகிறேன் :)

நம் கேம்ஸ் எக்ஸ்பெர்ட் சுவர்ணா, மெல்லிசை தென்றல் சுஸ்ரீ, நாட்டிய பேரொளி அபி, (அமானுஷ்ய)கதை ராணி பிரேமா, இவர்களின் குறிப்புகளில் இருந்து சமைத்து அசத்துங்கள்...

நம்ம வனிதா மேடம் சொல்லி இருப்பது போல், தோழிகளை ஊக்குவிப்பதும், பல காலமாக யாரும் காணாத குறிப்புகளை தூசு தட்டுவதுமே இந்த பகுதியின் முக்கிய காரணம். :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அட... துவங்கிட்டுதா!!! நல்லா சூப்பர் குறிப்புகளா இருக்கே... கலக்கிடுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் இப்பகுதியில் கலந்துகொள்ள விருப்பம்.கடந்த வார சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்துதான் எப்படி இதில் கலந்து கொள்வது என்பதை புரிந்துகொண்டேன்.இது ஒரு நல்ல இழை,என்னையும் இதில் சேர்த்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்,நன்றி

பரணிகா:)

பரணிகா, இது என்ன ஒரு கேள்வி எல்லோருக்காகவும் தானே இந்த சமைத்து அசத்தலாம் இழை :) உங்களை நாங்கள் அனைவரும் அன்புடன் வரவேற்கிறோம்... போதுமா இந்த பார்மல் வரவேற்ப்பு ;-)

கலந்துக் கொண்டு சமைத்து அசத்துங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்துவிற்கும், ஸ்கந்தாவிற்கும் சமைத்து அசத்தலாம் பகுதி- 2ற்கு வாழ்த்துக்கள். இதில் என் குறிப்புகளையும் சேர்த்திருப்பதற்கு மிக்க நன்றி.
இதில் முதலில் நான் தான் கணக்கு தொடங்குவது.. சுவர்ணாவின் தக்காளி சாதமும், ஈசி சிக்கன் கறியும் செய்தேன்.

வாழ்க வளமுடன்

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி அபி.. உங்கள் வரவு நல் வரவாகுக ;-)

ஸ்கந்தா, உங்க வேலை ஸ்டார்ட் ஆகி விட்டது... உதவி ஏதேனும் வேண்டும் என்றால் சொல்லுங்கள்..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வீக் எண்டு முடிந்து வார நாட்கள் தொடங்கி விட்டது.. எல்லோரும் ப்ரெஷ்ஷா வந்து, சமைத்து அசத்துங்க பார்க்கலாம்... நாளைக்கு நான் வரும் போது, நிறைய அசத்தல்கள் இருக்கணும்... ஓகே??

ஸ்கந்தா, உங்களை தான் பிடிக்கவே முடியலை... கணக்கு வேலை எப்படி போகுதுன்னு வந்து சொல்லுங்க... ஓகே?

பை....

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து,

வந்தேன், வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...!! :)

அப்புறம்?!! எனக்கு பட்டமெல்லாம் கொடுத்து அசத்திட்டிங்க! அதனால்தான் பாடிட்டே வந்திட்டேன்! :)
என்னோட குறிப்பு இவ்வளவு சீக்கரமா வரும்னு நினைக்கலை, அதிலும், அழகா எல்லாருக்கும் ஒரு அறிமுக பட்டமும் வழங்கி ஆரம்பித்து வைத்திருக்கிங்க. ரொம்ப தேங்க்ஸ்!

இந்த சமைத்து அசத்தலாம் பகுதி 2-ம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஆல்ரைட், ஸ்கந்தா இப்போ உங்களுக்கு...

நேரமிது, நேரமிது...
அக்கவுண்ட் ஓப்பன்,
பண்ணும் நேரமிது...
வார‌ம் முழுதும் நான் வ‌ருவேன்... :)

இன்னைக்கு சுவ‌ர்ணாவின் த‌க்காளி கொஸ்து & ஃப்ரைட் ரைஸ் செய்தேன். இர‌ண்டுமே சுவை அருமை! என்னோட‌ க‌ண‌க்கில் சேர்த்துக்கோங்க.

இந்த‌‌ ப‌குதி 2 சமைத்து அசத்தலாமும் இனிதே வெற்றிய‌டைய‌ வாழ்த்துக்க‌ள்!!

அன்புடன்
சுஸ்ரீ

இந்த வாட்டி சமைத்து அசத்தலாம் ரயிலில் நானும் சீக்கிரமா ஏறிட்டேன் :).

இன்னிக்கு சுஶ்ரீ யின் திடீர் ஓட்ஸ் தோசை செய்தேன். வெரி ஈசி அன்ட் டேஸ்டி. கணக்குல வச்சுக்கோங்கோ கணக்கு பிள்ளை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்