சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

பிந்து, ஸ்கந்தா சமைத்து அசத்தலாம் பகுதி- 2வை வெற்றிகரமா நடத்தி முடிக்க என் வாழ்த்துக்கள். போன வார சமைத்து அசத்தலாம் பகுதிலே கலந்துக்கனும்னு நினைத்தேன் ஆனால் கொஞ்சம் வேலையினால் கலந்து கொள்ள முடியவில்லை. சோ இந்த வாரம் டெரரா ஆரம்பிச்சாசு.
நேற்று இரவு சப்பாத்திக்கு ஸ்வர்ணாவோட காலிஃப்ளவர் கிரேவி செய்தாச்சு.
இன்று சுஸ்ரீயின் சுரைக்காய் மோர்க்குழம்பு மற்றும் ஸ்வர்ணாவோட பாகற்காய் சிப்ஸ்.

கணக்குபிள்ளை ஸ்கந்தா என்னோட லிஸ்ட்
1. ஸ்வர்ணாவோட காலிஃப்ளவர் கிரேவி.
2. சுஸ்ரீயின் சுரைக்காய் மோர்க்குழம்பு
3. ஸ்வர்ணாவோட பாகற்காய் சிப்ஸ்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

Indha pagudhi 2 vetri pera vazhthukkal:)
Bindu, neenga sonna madhiri olunga first day ve start panniten. Okya?
Kanakku pulla:) en ac open pannikonga.
9th Dinner ku chappathi kooda swarna's tomato gosthu,
10th Breakfast ku Dosai kooda swarna's pudhina chutny... Marubadiyum en vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமைத்து அசத்தலாம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..... போன வாரம் எப்படின்னு பார்த்து புரிந்துகொண்டோம் .இந்த வாரம் கலந்துக்கறோம்ல... பிந்தி,ஸ்கந்தா வாழ்த்துக்கள்

இன்றைய கணக்கு ஸ்வர்ணா(க்கா)வின் மினி இட்லிசாம்பார்,பிரட் சாண்ட்விச்

மதியம் ச்வர்ணா(க்கா)வின் முருங்கைகீரை குழம்பு,வெண்டைகாய்குடமிளகாய் பொரியல்...

இன்னைகு அம்புடுதேன் ,கணக்கு கணக்கு சரியா இருக்கணும் (நாங்களாம் கோவக்கார பயபுள்ளைங்கோ)ஆமா....

Be simple be sample

பிந்து,ஸ்கந்தா சமைத்து அசத்தலாமின் இந்த பகுதியும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!

நான் என் கணக்க ஸ்வீட்டோட ஆரம்பிக்கிறேன். இன்று காலையில் சுஸ்ரீயோட திடீர் ரசமலாய் செய்தேன். செய்வதற்கு ரொம்ப சுலபமாக இருந்தது.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த முறை நானும் கலந்து கொள்கிறேன்.என் கணக்கு
காலை--ப்ரட் சாண்ட்விச்
மதியம்--முட்டை அடை,முருங்கைகாய் மசாலா
இரவு--ராகி தோசை.எல்லாமே சுவர்ணா குறிப்புகள்
பிந்து,ஸ்கந்தா சமைத்து அசத்தலாமின் இந்த பகுதியும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

கணக்கு ஆரம்பம் ஆகிடுச்சி.
reem உங்க பெயர் என்ன? கணக்கு எழத கேட்கிறேன்
இது வரை
-------------------------------------------------------------
அபி: தக்காளி சாதம், ஈசி சிக்கன் கறி
சுஸ்ரீ: த‌க்காளி கொஸ்து, ஃப்ரைட் ரைஸ்
கவிசிவா: திடீர் ஓட்ஸ் தோசை
ஷிபா: காலிஃப்ளவர் கிரேவி, பாகற்காய் சிப்ஸ், சுரைக்காய் மோர்க்குழம்பு
நித்யா: த‌க்காளி கொஸ்து, புதினா சட்னி
ரேவதி: மினி இட்லிசாம்பார், பிரட் சாண்ட்விச், முருங்கைகீரை குழம்பு, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல்
இந்திரா: திடீர் ரசமலாய்
reem: ப்ரட் சாண்ட்விச், முட்டை அடை, முருங்கைகாய் மசாலா, ராகி தோசை
---------------------------------------------------

சுஸ்ரீ, சான்சே இல்லைங்க பாட்டு பாடி அசத்துறீங்க :) உங்களுக்கு சிச்சுவேஷன் பாடல் ராணின்னு பட்டம் கொடுத்துருக்கலாம் போல இருக்கே :)
உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி சுஸ்ரீ :)

அட விஐபி மேடம் (கவிசிவா)இந்த தடவை டைமுக்கு வந்துட்டாங்க... சூப்பர் சூப்பர்... :) மிக்க நன்றி கவிசிவா... :)

ஷீபா, டெரரா ஆரம்பித்து ஆதரவு தரும் உங்களுக்கும் எங்களின் இதயம் கணித நன்றிகள் :)இப்படியே சமைத்து அசத்திக் கொண்டே இருங்கள் :)

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நித்யா.... இந்த வாரம் முடிந்த பிறகு உங்கள் கணவர் புதிது புதிதாக சமைத்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல போகிறார் பாருங்கள் :)

ரேவதி, வாங்க... உங்கள் வரவு நல் வரவாகுக... உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி... என் பெயர் பிந்து, பிந்தி இல்லை.. :)

இந்திரா, வாங்க வாங்க, என்ன இன்னைக்கு லேட்... பகுதி ஒன்றின் வெற்றிக்கு முக்கிய காரணமே நீங்க தானே? மிக்க நன்றி இந்திரா.. :)

அனைவரின் ஆதரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
கணக்கு எல்லாம் சரியா இருக்கு... சூப்பர்....
மிக்க நன்றி மேடம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்ன இந்த தடவை சில பெரிய / சின்ன தலைகள் எல்லாம் மிஸ்ஸிங்... எல்லோரும் சீக்கிரமா வந்து சேருங்க... ;-)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்னிக்கு டின்னர் ஸ்வர்ணாவின் ராகி தோசை செய்தேன். குறிப்பு எளிது சுவை அதிகம்.

கண்ண்க்கில் ஏத்திடுங்கோ கணக்கு பிள்ளை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்