சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

Shiba, Uma... Ungal iruvarin vazhthukkalukku mikka nandri pa... Kandippa adutha samaithu asathalam il ellaarum top level la potti pottu samaithu asathi vetri peranum nu keattukiren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமைத்து அசத்தலாம் 3ல் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி வாகை சூடிய அன்பு தோழிகள் நித்யா,ரூபி,ஷமீலாவிற்கு வாழ்த்துக்கள்...

மேலும் இந்த பகுதியை வெற்றிகரமாக நடத்தி சென்ற தோழிகள் பிந்து மற்றும் ஸ்கந்தாவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இப்பகுதியில் பங்கேற்று சமைத்து அசத்திய தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

சுஸ்ரீயின் குறிப்புகள் எல்லாமே அருமையா இருந்தது நான் சமைத்ததில் அவங்க குறிப்புதான் அதிகம் :)
பிரேமா,அபி குறிப்புகள் கம்மியாகவும், இருக்கும் குறிப்புகள் அசைவமாகவும் இருந்ததால எல்லாத்தையும் செய்ய முடியல ;(

போட்டி போட்டா போட்டியா இருக்கபோகுதுன்னு போன முறை சொன்னேன் அதே போல் தோழிகள் அசத்திட்டாங்க :)
என் குறிப்புகளை செய்து பார்த்து அசத்தியது மட்டும் இல்லாமல் எனக்கு நன்றி சொன்ன தோழிகள் அனைவருக்கும் நான் தான் நன்றி சொல்லனும்.
என் குறிப்பு உங்க எல்லோருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சியோடு நன்றியையும் கலந்துகொண்ட தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டையும் தெரிவித்துகொள்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சமைத்து அசத்தலாம் பகுதி 2‍-ஐயும் கலக்கலாக நடத்தி முடித்த பிந்து & ஸ்கந்தாவிற்கு வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!

பிந்து,
உங்க‌ளுக்கு இப்போ கை ஃப்ராக்ஷ‌ர் எப்ப‌டி இருக்கு? இப்போ ப‌ர‌வாயில்லையா? கைக்கு ந‌ல்லா ரெஸ்ட் கொடுங்க‌. ஐ விஷ் யூ எ ஸ்பீடி ரெக்க‌வ‌ரி, டேக் கேர் பிந்து.

--

பகுதி 2-ல் ஒரு கலக்கு கலக்கி, வெற்றிவாகை சூடிய தோழிகள் நித்யா,ரூபி & ஷமீலாவிற்கு மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
மற்றும் பங்கு கொண்ட எல்லா தோழிகளுக்கும் வாழ்த்துக்கள் & ந‌ன்றிக‌ள்!!

ரூபி,
உங்க மகனுக்கும், அவர் ஃப்ரண்ட்ஸ்க்கும் மஷ்ரூம் ராப்ஸ் ரொம்ப பிடித்தது அறிந்து ரொம்ப மழிச்சியா இருக்கு! :) நன்றி!

அப்புற‌ம், நான் சொல்ல‌ நினைத்த‌தை எல்லாம் நம்ம சுவ‌‌ர்ணாவே மேலே சொல்லிட்டாங்க‌. :) போன‌ வார‌ம் முழுதும் என்னுடைய‌ குறிப்புக‌ளை ச‌மைத்து அச‌த்தி, தெரிவித்த‌ அன்பு தோழிக‌ள் அனைவ‌ருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! :)

என்னுடைய‌ குறிப்புக‌ளின்கீழ் தந்திருக்கும் புது பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி! அவைகளுக்கு எல்லாம் இனிமேல்தான் பதில் போடவேண்டும். வீட்டில் மகனுக்கு உடல்நலம் சுகமில்லாததால் உடனே முடியவில்லை, இன்றுதான் இங்கேயே பதிவு போடுகிறேன்.

மீண்டும் பிறகு சந்திக்கலாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வெற்றி பெற்ற தோழிகளுக்கும் மற்றும் பங்கேற்ற தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிந்து மற்றும் ஸ்கந்தாவிற்கு வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்

தனித்தனியாக பெயர் குறிப்பிடவில்லை, சமைத்து அசத்த முயன்றவர்கள், அசத்தியவர்கள், நடத்தி வைத்தவர்கள், குறிப்புக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். தொடருங்கள்.

‍- இமா க்றிஸ்

Ungalin anbana vazhthukkalukku romba nandri...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்