சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

பிந்து, ஸகந்தா... அடுத்த பாகம் துவங்கியதுக்காக வாழ்த்துக்கள். :) என் கணக்கை இனிதே துவங்குகிறேன்...

1. பிரேமாவின் துவரம்பருப்பு அடை
2. அபியின் டூனா சாண்ட்விச்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் காலையிலேயே ரசமலாய் பன்னிட்டேன் ஆனா பதிவு போட தான் லேட் ஆகிடுச்சி.நான் வெள்ளி கிழமையே உங்ககிட்ட இந்த வாரம் சமத்து அசத்தலாம்ல யாரு குறிப்புனு கேட்டு சமைக்க தேவையானது எல்லாம் வாங்கிகலாம்னு நினைச்சேன் (ஏனா வெள்ளி தான் மார்க்கெட் போவோம்) ஆனா அன்னிக்கி உங்கள அரட்டைல சந்திக்க முடியல. இருந்தாலும் என்கிட்ட இருக்குறத வச்சி என்னென்ன பன்ன முடியுமொ அதெல்லாம் பன்றேன்.

//பகுதி ஒன்றின் வெற்றிக்கு முக்கிய காரணமே நீங்க தானே?// நீங்க என்ன இப்படி புகழுற அளவுக்கு நான் எதுவும் செய்யலயே???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//நீங்க என்ன இப்படி புகழுற அளவுக்கு நான் எதுவும் செய்யலயே???//
இந்திரா, நீங்க தானே அரட்டை மக்களை சென்ற சமைத்து அசத்தலாம் பகுதிக்கு ரீடைரக்ட் செய்து அனுப்பியது.. அதை தான் சொல்கிறேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஓ அதுவா ஏதோ என்னால் முடிஞ்சது.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்று இரவு பூரிக்கு ஸ்வர்ணாவின் உருளைகிழங்கு குருமா செய்தேன் சூப்பரா இருந்துச்சி... கணக்குபிள்ளை ஸ்கந்தா நோட் பன்னிக்கோங்க..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

reem,
சாரிங்க உங்களை மிஸ் பண்ணிட்டேன்...

உங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//ஏனா வெள்ளி தான் மார்க்கெட் போவோம்//
அடுத்த சமைத்து அசத்தலாம், இழையை முன்பே தொடங்கி விடலாம்... அப்போது நீங்கள் திட்டமிட வசதியாக இருக்கும் தானே...

கட்டாயம் அடுத்த முறை செய்து விடுவோம் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து அசத்தலான பட்டமெல்லாம் கொடுத்துருக்கீங்க ;)

சாரி என்னால இம்முறையும் ஆரம்பமே கலந்துக்க முடியல ஏன்னா புரட்டாசிக்காக வீடு க்ளீனிங் வேலை நடக்குது அதனால எதுவும் செய்ய முடியல கண்டிப்பா கடைசியாகவாவது வர முயர்ச்சிக்கிறேன்.சுஸ்ரீ சொல்வது போல என்னோட குறிப்புகள் இப்போ வரும்னு நினைக்கவே இல்லை, நன்றி :)

சமைத்து அசத்தலாம் பகுதி 2-ம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!
கலந்துகொண்டு பட்டம் வாங்க போகும் தோழிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Samithu asathalam ippaguthiyai patri enaku koorungalan. Puthiya nabaraga irupathal enaku puriyavillai. Nanum ithi pangarka mudiuma?

Samithu asathalam ippaguthiyai patri enaku koorungalan. Puthiya nabaraga irupathal enaku puriyavillai. Nanum ithi pangarka mudiuma?

மேலும் சில பதிவுகள்