சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

இன்றைய கணக்கு..
காலையில் என் டூனா சாண்ட்விச்
மதியம் சுஸ்ரீயின் பீட்ரூட் புலாவ்
இரவு சுஸ்ரீயின் அடை..

வாழ்க வளமுடன்

அபி, சமைத்து அசத்தலாம்ல உங்க சமையலை நீங்களே சமைத்தால் ஸ்கோர் இல்லை... மற்றவர்களின் சமையல் குறிப்புகளை பயன்படுத்தினால் மட்டுமே ஸ்கோர் பண்ண முடியும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
என்னோட அக்கவுன்ட்டையும் ஒப்பன் செயதுக்கோங்க...

சுவர்ணா - தக்காளி சாதம், வாழக்காய் பொடிமாஸ்

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் பிந்து ,ஸ்கந்தா...
என்னோட கணக்கு
நேற்று இரவு - புதினா சட்னி (ஸ்வர்ணா)
காலை - ப்ரட் சாண்ட்விட்ச் (ஸ்வர்ணா)
மதியம் - தக்காளி சாதம் (ஸ்வர்ணா) , வாழைக்காய் ப்ரை (சுஸ்ரீ)
ஒரு வாரத்திற்கும் ப்ளாண் பண்ணிடோம்ல.....................

பிந்து ஸ்கந்தா உங்கள் இருவருக்கும் சமைத்து அசத்தலாம் 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்று ஸ்வர்ணாவின் உருளை குருமா
அபியின் மசாலா வெண்டைக்காய்

என்னோட‌ க‌ண‌க்கில் சேர்த்துக்கோங்க.

இதுவும் கடந்து போகும்

நேற்று இரவு சுவர்ணாவின் ராகி தோசை
இன்னைக்கு காலை சுஸ்ரீயின் திடீர் ஓட்ஸ் தோசை

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து ஸ்கந்தா என் இன்றைய கணக்கு
நேற்று இரவு:சுவர்ணாவோட ராகி தோசை, தக்காளி கொத்சு
இன்று: சுவர்ணாவோட முட்டை வடைகுழம்பு, சுஸ்ரீயின் கத்தரிக்காய் பொரியல்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ஹாய் என் இன்றைய கணக்கு
காலை ஸ்வர்ணாவின் புதினா சட்னி,இட்லி பொடி
மதியம் ஸ்வர்ணாவின் முட்டை அடை

எனக்கு ஒருசந்தேகம் தோழிகளே எனக்கு அபி,பிரேமாவின் குறிப்புகள் ஒப்பன் ஆகவிலை ,அவர்களுடைய குறிப்புகளை மொத்தமாக எங்கு பார்ப்பது...

Be simple be sample

இன்று என் கணக்கு
சுவர்ணா==ப்ரைட் ரைஸ்,ஈசி சிக்கன் கறி
சுஸ்ரீ==நட்ஸ்புட்டிங்,மாம்பழகேசரி
ஸ்கந்தா,என் முழு பெயரே ரீம் தான்.

இன்று மதியம் சுஶ்ரீ யின் ப்ராக்கலி பொரியல் செய்தேன். கணக்கில் சேர்த்துடுங்கோ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்