annai tersha kavithai

என் குழந்தையின் பள்ளியில் அன்னை தெரசா பற்றிய கவிதை தமிழில் 10 வரியில் எழுத்தி வர சொல்லி உள்ளர்கள் உதவவும்.

உன் முக வரிகளில்
என் முகவரியை கண்டேன்

உன் கருணை விழிகளில்
என் உலகம் காண தொடங்கினேன்

உன் பாசமிகு நெஞ்சில்
என் அன்னைமடி உணர்ந்தேன்

வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வளித்து
உன் அறநெறியை வலியுறுத்தி வாழ்ந்தாய்

ஓராயிரம் குழந்தைகளுக்கு தாயாகி
வியக்க வைத்த பேரொளி நீ

ஏழையின் சிரிப்பில் கடவுளை நீ கண்டு
எண்ணிலடங்கா பேருக்கு கடவுளாகி நின்றாய்

சும்மா ரஃபா எழுதியது. எனக்கு அன்னை தெரசா பத்தி பத்து வரியில் நச்சுனு எழுத தெரியலை.
ஏனா ஒரு பக்கமே எழுதலாம். நான் எழுதியதை உங்களுக்கு பிடித்த மாதிரி மாத்தி எழுதுக்கொங்க. குழந்தை தானே. என்ன படிக்கிறாங்க.குழந்தை என்பதால் லைட்டா எழுதி இருக்கேன்
சும்மா பாத்துட்டு போக முடியலை. அதால் எதோ எழுதியிருக்கேன் .டீச்சர் திட்டினா அவ்ளோ தான் ;)
நாள் முடிந்தும் இருக்கலாம். ஒரு வேலை இதை பாத்திங்கனா பயன்ப்படுமானு பாருங்க.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்