இறால் குழம்பு

தேதி: September 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

இறால் - 25 - 30
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
புளி - சிறு கோலி அளவு
உப்பு - தேவைக்கு
முந்திரி - கால் கப் (தேவையென்றால்)
கடுகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், சீரகம், உளுந்து - சிறிதளவு, தாளிக்க
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு


 

இறாலை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு அனைத்தையும் சிறிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். புளியை நீரில் கரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த இறாலில், புளி கரைசலையும் உப்பையும் சேர்த்து தனியே ஊற வைக்கவும்.
முந்திரி சேர்ப்பதாக இருந்தால், ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்/எண்ணெய் விட்டு, முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் பட்டை, கிராம்பு, வெந்தயம், சீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம், மீதம் இருக்கும் மூன்று பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய உடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மஞ்சள் தூள் வெங்காயத்துடன் நன்றாக சேர்ந்த உடன் தனியா தூள் சேர்க்கவும்.
தனியா தூளும் நன்கு கலந்த பின் மிளகாய் தூள் சேர்க்கவும்.
எல்லா தூள்களும் நன்கு சேர்ந்த உடன், தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு குழைந்தவுடன், இறாலை சேர்க்கவும். சிறிது நீரையும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
இறால் வெந்த உடன், தேங்காய் பால் சேர்த்து கிளறி வேக விடவும். உப்பு சரி பார்த்து, வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக முன்பு வதக்கி வைத்திருந்த பெரிய வெங்காயத்தையும், வறுத்த முந்திரியையும் சேர்க்கவும். சுவையான, காரமான ‘சென்னை’ இறால் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அந்த கடைசி ப்ளேட் எனக்கு குடுதுடுங்களேன் ஹ்ம்ம் சூப்பர் இறால் குழம்பு பாத்தாலே சாப்டனும் போல இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சொன்ன மாதிரியே குறிப்பு வந்துட்டுது ;) கலக்கல். எனக்கும் இங்க இறால் கிடைக்காதே, நான் என்ன செய்ய.... :( ஊருக்கு போனா செய்து பார்த்து சொல்றேன். ரொம்ப அருமையா இருக்குன்னு மிஸ்டர் பிந்துகிட்ட சொல்லிடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இறால் குழம்பு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்னைக்கு 2 குறிப்பும் சென்னை ஸ்பெஷலா வந்திருக்கு. ரிச்சான இறால் குழம்பு. நல்லா செய்து இருக்கீங்க (மிஸ்டர்) பிந்து. வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

கனிமொழி,எடுத்துக்கோங்க... உங்களுக்கு இல்லாததா ;-)

வனிதா மேடம், நாங்க எல்லாம் சொன்ன சொல் தவற மாட்டோம்ல :) ஓ, இறால் கிடைக்காதா? நான் தீவு என்றால் மீன் வகை தான் நிறைய கிடைக்கும்ன்னு நினைச்சேன் :) பரவாயில்லை ஊருக்கு போகும் போது செய்து பாருங்கள்... அவர்கிட்ட நீங்க சொன்னதை அப்படியே சொல்லிடுறேன் :)

நன்றி இந்திரா :)

நன்றி வினோஜா :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நல்லா இருக்கு பிந்து அக்கா.

ரிச்சான இறால் குழம்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இறால் குழம்பு ரொம்ப நல்லா இருக்கு :) படங்களும் அருமையா வந்திருக்கு ... வாழ்த்துக்கள் !
அடுத்த முறை வாங்கும் போது உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்.

பிந்து சூப்பர் குழம்பு இதுவும் மிஸ்டர் கைவண்ணமா ம்ம் கலக்குறாங்க :)
வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிந்து,

இறால் குழம்பு ரிச்சான குழம்பா, ரொம்ப நல்லா இருக்கு! :) படங்களும் அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள் மிஸ்டர் பிந்துக்கு, பாராட்டுகள் (படம் எடுத்ததற்காக) உங்களுக்கு! :)
அப்படியே, எப்போ உங்க குறிப்புகள் வரும்னு சொல்லுங்க?! ;) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பர் பிந்து. முந்திரி எல்லாம் போட்டு வைத்தது கிடையாது. அடுத்த தடவை றால் சமைக்கும் போது முந்திரி சேர்த்துப் பார்க்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

பிந்து இறால் குழம்பு பாக்கவே நல்லாயிருக்கு. முந்திரி எல்லாம் போட்டு வித்தியாசமா செஞ்சுயிருக்கிங்க.. :) இந்த மாசம் நாங்க அசைவம் செய்யமாடோம் அதனால அடுத்த மாசம் கன்டிப்பா செய்யபோரேன் அவருக்கு இறால் ரொம்ப பிடிக்கும் ;)

அன்புடன்,
லலிதா

Good Receipe