மஷ்ரூம் மின்ட் பக்கோடா

தேதி: September 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டன் அல்லது ஷிட்டாக்கி மஷ்ரூம்- 10
புதினா இலைகள் - 1/2 கப்
கறிவேப்பிலை- 2 இனுக்கு
பச்சை மிளகாய் - 4 (காரத்துக்கு ஏற்ப)
கடலை மாவு- ஒன்றரை மேசைக்கரண்டி
அரிசி மாவு- ஒன்றரை மேசைக்கரண்டி
வெண்ணெய்- 1/2 தேக்கரண்டி (விருப்பப் பட்டால்)
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொரிப்பதற்கு


 

மஷ்ரூமை சுத்தம் செய்து மிக மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டவும்.
புதினா மற்றும் கறிவேப்பிலையை கையால் ஒன்றிரண்டாக பிய்த்து வைக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக வெட்டவும்.
எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கலந்து கையால் அழுத்தி பிசிறி விடவும்.
வெண்ணெய் சேர்க்கவில்லை என்றால் ஒரு மேசைக்கரண்டி சூடான எண்ணெய் விட்டு பிசையவும்.
இப்போது மிகக் கொஞ்சமாக நீர் தெளித்து பிசிறவும்.
சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்து விடவும்.
பொன்னிறமானதும் எடுத்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

arusuvai.com nanri

அருமையான சிற்றுண்டி. வாழ்த்துக்கள் கவி.
விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சாரி அருட்செல்வி. உங்கள் பின்னூட்டத்தை மிஸ் பண்ணிட்டேன்.

செய்து சாப்பிட்டு பாருங்க சுவையாகவே இருக்கும். பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி அருட்செல்வி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!