பட்டிமன்றம் - 74 "பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார்? சாலமன் பாப்பையாவா...?திண்டுக்கல் லியோனியா...?"

பாசமிகு சகோதரர்களே,அன்புமிகு சகோதரிகளே,உறுதுணையான நட்புகளே காலை வணக்கம்.......(பாப்பையா ஸ்டைலில்)
அட என்னப்பா வணக்கமெல்லாமிருக்கட்டும் விஷயத்துக்கு வருவோமா.......(லியோனி ஸ்டைலில்)

பட்டி துவங்க வேண்டிய நாளாச்சேன்னு நானும் கலந்துக்கலாம்னு எட்டிபார்த்தேன் இன்னும் யாரும் பட்டி துவங்களை அதான் நானே துவங்கிட்டேன் மன்னிக்கவும்..........
தலைப்பு நம் தோழி கார்த்திகாவினுடையது"பட்டிமன்றங்களுக்கு சிறந்த நடுவர் யார் ??? சாலமன் பாப்பையாவா ??? லியோனியா???""
அனைவருக்கும் வித்யாசமாக இருக்குமென நம்புகிறேன்.முடிந்தவரை அனைவரும் கலந்து பட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.நானும் முடிந்தவரை பட்டியை நன்றாக நடத்த முடியும்னு நம்புறேன்.....அனைவரும் வருக,வாதங்களைத் தருக..........

பட்டி விதிமுறைகள் அனைவருக்கும் தெரியும்.
மன்ற விதிகளும் பட்டிக்கு பொருந்தும், நினைவில் வைத்து அனைவரும் பட்டியில் கலந்துகொள்ள வாருங்கள்....

வாங்க வாங்க பட்டி ஆரம்பிச்சாச்சு,
பேசக்கூடிய தலைப்புதான் சீக்கிரம் வந்து வதங்களை துவங்குங்கள்.....

இப்போ தெரிஞ்சுருக்குமே ... நான் எந்த அணி னு ... முதல்ல நான் கொடுத்த தலைப்பை எடுத்ததுக்கு மிக்க நன்றி நடுவரே .... கண்டிப்பா சாலமன் பாப்பையா தான் சிறந்த நடுவர் னு பேச போறேன்.... வாதங்களோட மீண்டும் மீண்டும் சந்திப்போம் நடுவரே

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா(எங்க ஊரு, எங்க ஊரு , எங்க ஊரு).. அது மட்டும் இல்லை... மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை( எங்க கல்லூரி (g)old ஸ்டூடண்ட் ). தமிழ் பேராசியரா இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது பட்டிநடுவராகவும், இலக்கிய விரிவுரையாளராகவும் இருக்கிறார்.. நகைச்சுவை உணர்வோடு இவர் ஆற்றும் உரைகள் மிக சிறப்பாக இருக்கும்.

அப்புறம் முக்கியமா குழந்தைகளுக்கு திருக்குறளை எழுதின திருவள்ளுவரை தெரியுமோ இல்லையோ சாலமன் பாப்பையா அதுக்கு கொடுக்கிற விளக்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்தது.

அப்புறம் இவரோட பட்டி மன்ற அணியும் இவரை மாதிரி பிரபலமானவர்கள் (ராஜா, பாரதி பாஸ்கர் )அடங்கியது தான். ஏதாவது விஷேசம் னா கூட வீட்டுல எல்லாரும் தொலைக்காட்சியில விரும்பி பார்க்கிறது சாலமன் பாப்பையா பட்டி மன்றம் தான்.. சன் டி‌வி ல எல்லா விசேச தினங்கள் யும் இவரோட நகைச்சுவையை சிறந்த கருத்துக்களோட ரசிக்கலாம். இப்படி இவரோட பெருமையை சொல்லிக்கிட்டே போகலாம்... மீண்டும் சந்திக்கலாம் ...........

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய பட்டி நடுவர் அவர்களே,

எங்களையெல்லாம் சரியான முறையில் மேய்க்க வ்ந்திருக்கும் மேய்ப்பர் அவர்களே! முதற்கண் என் வணக்கத்தை தங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்றேன்.

ஒவ்வொருமுறையும் என்னுடைய பதிவை படிக்கும்முன் இதை
படித்துமரியாதையை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சாலமன் பாப்பயா அவர்களின் அணி நான்.
தோழி கார்த்திகா அருமையான தலைப்பு கொடுத்துள்ளார்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தலைப்புக்கு ரொம்ப நன்றிங்க
வாங்க உங்க முதல் வாதத்தை நடுவர் முன் வச்சாச்சா........இனி எத்தன வாதங்கள் குவியப்போகுதோ....நடுவ்ர்பாடு திண்டாட்டம்தான் போங்க......
நிங்க பாப்பையா அணியா...வாழ்க......இன்னும் சிறப்பான கருத்துக்களை வாதங்களா தொகுத்து கொண்டாங்க......

கரும்பு தின்ன கூலியாய்யா?
திரு.சாலமன் பாப்பயா அவர்கள் நகைச்சுவையுடன் தன்னுடைய கருத்துக்களை மக்கள் மனதில் வேரூன்ற செய்வதில் வல்லவர்.
1936 ஆம் வருடம் திரு. சுந்தரம், திருமதி. பாக்கியம் அவர்களுக்கு மகனாக பிறந்தார்.
மிகவும் ஏழைக் குடும்பதில் பிறந்த இவர் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் தனது கல்வியை வெற்றிகரமாக முடித்தார்.
இவரது பேச்சற்றல் பாமர மக்களும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கும்.
இவருக்கு தமிழக அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தது. தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பற்றும் கொண்டவர்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருட்செல்வி வாங்க நீங்களும் பாப்பையா அணியா........நல்லது.....வாதங்களோட மீண்டும் வாங்க,(நம்ம தம்பி லியோனி பக்கத்துல வாதாட யாருவரப்போரீங்க)

தோழிகள் தங்கள் கருத்துகளை வாதங்களாக சமர்பித்தால் பட்டி சிறப்பாக செல்லும்.....வாசகமாக இருப்பதைவிட வாதங்களாக இருந்தால் பாடிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.......

அன்பான நடுவர் அவர்களே ,எனது வாதம் லியோனி தான். நான் சாலமன் பாப்பையா அவர்களை பற்றி குறைவாக சொல்ல வரவில்லை. படிக்காதவர்களுக்கும் புரியும் படி, பழைய மற்றும் புதிய பாடல்களை பாடி ,நகைசுவையாக குரலை மாற்றி களைப்பு தட்டாத படி சொல்ல கூடியவர் லியோனி அவர்கள். இவர் பெரும்பாலும் கலைவாணர் என் . எஸ். கிருஷ்ணன் பாடல்களைத்தான் பாடுவார். அது என்னை போன்ற பழைய கருத்துள்ள பாடல்களை தெரியாமல் இருப்பவர்களுக்கு,நகைச்சுவையுடன் சேர்த்து பாடும் போது,அந்த பாடல்களை பற்றியும் அதன் கருத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் ஏதாவது கருத்து இருந்தால் பிறகு வந்து சொல்கிறேன். நன்றி

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

இந்த தலைப்பு கொஞ்சம் கத்தி மேல நடக்கிற மாதிரி இருக்கு நடுவர் அவர்களே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்