தேதி: September 5, 2006
பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மட்டன் - ஒரு கிலோ
கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
பூண்டு - பத்து பற்கள்
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
தக்காளி - இரண்டு
மிளகாய்தூள் - இரண்டு மேசைக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - மூன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - அரை கோப்பை
அரைக்க:
துருவிய தேங்காய் - நான்கு மேசைக்கரண்டி
கசகசா - இரண்டு மேசைக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கறியை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
அதில் ஒரு தேக்கரண்டி உப்பு, அரைதேக்கரண்டி மஞ்சள்தூள், நான்கு கீறிய பச்சை மிளகாய், ஆகியவற்றை போட்டு இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
கத்திரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். குழம்பு வைக்கும் சட்டியில் எண்ணெயை ஊற்றவும்.
காய்ந்ததும் பட்டை இரண்டு, பிரிஞ்சி இலை இரண்டு போட்டு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதைப்போட்டு நன்கு வதக்கவும். பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் போட்டு கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு சிறிது வதக்கி அரிந்து வைத்துள்ள கத்திரிக்காய்களை போட்டு நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்துள்ள கறியை வெந்த நீரூடன் சேர்த்து கத்திரிக்காய் கலவையில் ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
மேலும் இரண்டு கோப்பை நீர் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு பதம் வந்தவுடன் இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை ரசத்தை ஊற்றி கொத்தமல்லியை தூவிவிட்டு இறக்கவும்.
Comments
Super
இப்பத்தான் சமையல் கத்துக்கிறேன். உங்க குறிப்பு எல்லாமே அருமை. இந்தக் குழம்பு ரொம்ப சூப்பரா வந்துச்சு. என்னை மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு. என் ப்ரெண்ட்ஸ் எல்லார் சார்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
Thank you
ஹலோ விஜய்,உங்க பாராட்டுதளுக்கு மிகவும் நன்றி.