பனீர் பட்டர் மசாலா

தேதி: September 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (11 votes)

 

பனீர் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
குடை மிளகாய் - பாதி
கொத்தமல்லி - சிறிதளவு
முந்திரி - 10
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், பட்டர்(விரும்பினால்) - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் போட்டு சீரகம் தாளித்து குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். எண்ணெய் உபயோகிப்பவர்கள் பனீர் பொரித்த எண்ணெயையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடை மிளகாய் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
பச்சை வாசம் அடங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்பு பனீர் துண்டுகளை போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தூள் வாசம் அடங்கியதும் அரைத்து வைத்த முந்திரி விழுது, கரம் மசாலா சேர்க்கவும்.
நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். விரும்பினால் கடைசியில் சிறிது பட்டர் சேர்த்து கொள்ளலாம்
இப்போது சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி. பரோட்டா, சப்பாத்தி, பூரி, நாண் உடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்னும் கொஞ்சம் ரிச் டேஸ்ட் விரும்புகிறவர்கள் கடைசியில் சிறிது ப்ரஷ் க்ரீம் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹைய்யா.......நான் தான் முதல் பின்னூட்டம்...................
வாவ்!!! இந்து ரொம்ப அழகா செஞ்சு இருக்கிங்க...நானும் இதே போல தான் செய்வேன்...ஆனால் பனீர் மட்டும் கடைசியா பொரித்து சேர்ப்பேன்...பல நூறு குறிப்புகள் தர எனது வாழ்த்துக்கள்....

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நீங்களும் இப்படி தான் செய்வீங்களா சூப்பர்...முதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா பனீர் பட்டர் மசாலா ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பனீர் பட்டர் மசாலா சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பரவாஇல்லையெ,என் பெயர்ரை கரெக்டா நியாபகம் வைத்து இருக்கீங்க இந்திரா....

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

என்னோட எல்லா குறிப்புலயும் மறக்காம வந்து பதிவு போடுறீங்க உங்க பேர எப்படி மறக்க முடியும்.உங்க பேரு என்னனு நானே கேட்டுட்டு அத மறப்பேனா சொல்லுங்க... நீங்க ஏன் அரட்டைக்கு எல்லாம் வரது இல்ல?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நேரமின்மை தான் காரணம்.1வயது குழந்தை உள்ளது,தவிர நிரைய ரெசிபி அனுப்பும் ஆர்வத்தில் பிஸியாக இருக்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஓகே ஃப்ரீயா இருக்கும் போது அரட்டைக்கு வாங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

nice recipe..all the best

priyasatheesh

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

குறிப்பு அருமையாக உள்ளது. நான் ஏற்கனவே நம்ம ரம்யா அக்காவோட பனீர் மசாலா செய்திருக்கிறேன் ....மிகவும் சுவையாக இருந்தது .
அடுத்து உங்க ஸ்டைலில் செய்துருவோம் :)

சூப்பர். அப்படியே 2 ரொட்டி கொடுத்தா சாப்பிட்டுடுவேன்... கலக்கல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்திற்கு மிக்க நன்றி. இந்த முறையில செஞ்சி பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி... ரொட்டி தானே கொடுத்துட்டா போச்சி உங்களுக்கு இல்லாததா...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

very nice recipe..

ஹாய் இந்திராகணேசன்

நலமா? பனீர் பட்டர் மசாலா நன்றாக இருந்தது. பின்னுட்டம் தாமதமாக கொடுத்ததுக்கு மன்னிக்கவும். விருப்ப பட்டியலிலும் சேர்த்தாச்சு. இதுபோல் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
மேனகா