குழந்தைகளை பாட்டி ட்ரெயினிங் பண்ணுவது எப்படி?

இந்த சப்ஜெக்டில் தான் அனேகம் தாய்மார்கள் கஷ்டப்பட்டு போயிருப்பார்கள்..குறிப்பாக வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு இப்பழக்கத்தை கொண்டு வருவது கஷ்டம்...கீழே கார்பெட் வீட்டில் துடைத்து காயப் போகும் வசதியின்மையால் டயப்பரில் குழந்தை காலம் கழிக்கிறது அதன் பின் மாற்றுவது சிரமமாகிறது...இருந்தும் எப்படியோ கஷ்டப்பட்டு சிறுநீர் போக பழக்குவார்கள் அதன் பின் வரும் ஒரு ப்ரச்சனை எக்காரணம் கொண்டும் நம்பர் டூ போக மட்டும் டயப்பர் தான் வேண்டும் என்று அதை தூக்கிக் கொண்டு வருவார்கள்..அனேகம் குழந்தைகள் இதே ப்ரச்சனையால் கஷ்டப்படும்...பிறந்து உடம்பு பலம் பெற்று ஒரு ஏழு எட்டு மாசம் ஆகும்போதே பாட்டியில் உட்கார வைத்து பழக்கலாம்..இரண்டு வயதுக்கு மேலும் டயப்பரிலேயே காலம் கழிக்காமல் மெல்ல மாற்றிப் பழக்க வேண்டும்..பகலில் டயப்பர் இல்லாமல் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்க டாய்லெட்டுக்கு கொண்டு போய் பழக்க வேண்டும்..இதை பெரும்பாலும் குழந்தைகள் எளிதில் பழகி விடும்...ஆனால் நம்பர் டூ போக நோ நோ அதுக்கு டயப்பர் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்..அப்பழக்கட்தினை மாற்ற சில வழிகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன்..
1)முதலில் டயப்பர் பழக்கத்தை மாற்றலாம் என்ற முடிவுக்கு வந்தால் முடிவை ஒருபோதும் மாற்றக் கூடாது
2)பயமுறுத்தியோ தண்டனை கொடுத்தோ மாற்றலாம் என்று நினைப்பது தவறு.
3)மாற்றலாம் என்ற முடிவுக்கு வந்தால் டய்ப்பரை கண்ணால் காட்டாமல் அதனை ஒளித்து வைத்து விட வேண்டும்
4)சில முறை வீட்டுக்குள்ளேயே ஆக்சிடென்ட் பண்ணினாலும் பரவாயில்லை அதை ஒரு பெரிய ஆர்ப்பாட்டமாக கொண்டு செல்லாமல் சொல்லி புரிய வைக்கலாம்.
5)பாட்டியில் உட்கார வைத்து அல்லது டாய்லெட் சீட் போட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்டூள் போட்டு கூட உட்கார்ந்து பாட்டு பாடி கதை சொல்லலாம்..அல்லது எதாவது மொபைல் ஐ பேட் ஐ பாட் எடுத்து எதாவது வீட்யோ காட்டி குழந்தையின் ஸ்ட்ரெஸ் குறைக்கலாம்..ரொம்ப நேரம் அங்கயே வச்சிருக்காமல் ஒரு ஐந்து நிமிடம் உட்கார வைத்து பிறகு விட்டுவிட்டு சில நேரம் கழித்து ட்ரை பண்ணலாம்.

இனி எப்படி என்று பார்க்கலாம்..பழக்கத்தை மாற்றும் சில நாள் முன்பாகவே இனி கடையில் டயப்பர் கிடைக்காது இது தீர்ந்து போனால் இனி டாய்லெட்டுக்கு தான் போக வேண்டும் என்று சொல்லலாம்..பெரிய பிள்ளைகள் எல்லாருமே டாய்லெட்டில் தான் போவார்கள் நீயும் பெரிய பிள்ளை ஆகியாச்சு என்று சொல்லலாம்..நிச்சயமாக பெரும்பாலான குழந்தைகள் டாய்லெட்டுக்கு போக பயந்து இரண்டு மூன்று நாட்கள் கூட டாய்லெட்டுக்கு போகாமல் இருக்க பார்க்கும்..டயப்பரை தா என்று அனேகம் பாடுபடுத்தும்...இதனால் அவர்கள் வயிறு இறுகி விடும்..அதன் பின் கட்டாயப்படுத்தி டாய்லெட்டுக்கு போனாலும் வயிறு இறுகுவதால் குழந்தைக்கு பயஙர வலி உண்டாகும் பிறகு அடுத்த முறை இன்னும் பயந்து 3 நாள் என்பதை ஐந்து ஆறு நாள் கூட பிடித்து வைக்க பார்க்கும் ..வயிறு இறுகோ இறுகோ என்று இறுகி குழந்தைக்கு வலியும் உண்டாகும் மனசளவிலும் என்னடா டார்ச்சர் இது என்று சோர்ந்து போகும்..இதனை தவிர்ப்பது தான் முதல் வேலை.
டயப்பரை மாற்ற முடிவு செய்ததும் முதலில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணை கொடுக்கலாம்..அல்லது மருத்துஅவ்ரிடம் கேட்டு லாக்சேடிவ் ஒன்று வாங்கி கொடுக்கலாம்..வயிறு இளகி விடும்..பிறகு அவர்களால் பிடித்து வைக்க முடியாது..அதன் பின் potty பழக்கினால் வயிறு இறுக்கமில்லாததால் போட்டி போனதும் இது இவ்வளவு சுலபமா என்று புரிந்து கொள்வார்கள்...அதன் பின்னும் ஓரிருமுறை டயப்பரே கேட்பார்கள் என்றாலும் குழந்தைகளின் மாற்றம் என்பது அதிசயமான ஒன்று...ஒருமுறை பழகினால் அடுத்தடுத்து மறந்தே போவார்கள்..இதெல்லாம் என் அனுபவம் தான் உங்களுக்கும் சொல்லியிருக்கேன்.

டியர் தளிகா ரொம்ப நன்றி. என் மகனுக்காகவே தொடங்கப்பட்ட இழை போல்

உள்ளது, என் நிலைமையை அப்பிடியே சொல்லி உள்லீர்கள். நான் வசிக்கும் nadu netherlands,varudathil ettu mathamum snow than, temperature -20 varai pogum, en maganukku ippothu இரண்டு வயது, என் மகன் நீங்கள் சொல்வது போல் ஒன் பாத்ரூம் சரியாக டைபர் இல்லாமல் போga palakkiviten,, ஆனால் நம்பர் டூ தான் கஸ்ட படரான், பாட்டி பார்த்தாலே பயந்து எனக்கு வரலே என்று ஓடுகிறான், நானும் கெஞ்சி, கொஞ்சி பார்த்து விட்டேன்,எனக்கு ஒரே கவலையாகவே இருந்தது, எப்பிடி இவன பழக்கறதுண்னு,inge hospitalil medicine kudukka mattanga, enna viyathinalum paracetamol than, nan neenga soonathe medical shopla yavathu ketu parkaren, alalthu muthalil நீங்க சொன்னது போல mobile or ipodil பாட்டு தான் ட்ரை செய்ய போகி றேன். try pannivitu solkiren intha anupavam eppiid irunthathunnu, ரொம்பநன்றி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றிங்க...நாம எல்லோருமே இப்படி கஷ்டப்பட்டு பழக்குறவங்க தான்..ஆனால் பிலீவ் மீ குழந்தைங்க ஒரே ஒருக்க ஒரு விஷயத்தி செய்தால் பிறகு முன்பு இப்படி இருந்தார்களா என்ற சுவடே இல்லாமல் ஈசியாக மாறிடுவாங்க..இரண்டு வயது தானே முழுக்க விவரம் உள்ள வயது ஆகலை..நம்ப ஊர் விளக்கெண்ணை யார்கிட்டயாவது வாங்கி வர சொல்லுங்க அங்கெல்லாம் மாள்களில் எல்லாம் எண்ணை செக்ஷனில் வச்சிருக்க மாட்டாங்களா?இல்லையென்றால் மருத்துவரிடமே சொல்லி எதாவது வாங்கலாம்..அல்லது க்லிசெரின் சப்போசிடரீஸ் யூஸ் பண்ணலாம்..அது நல்லா வேலை செய்யும் ஆனால் சிவியெர்லி கான்ஸ்டிபேடடா இருந்தால் மட்டுமே அது யூஸ் பண்ணனும் இல்லையென்றால் குழந்தைகளுக்கு அசவுகரியம் ஏற்படும் ஆனால் க்லிசெரின் சப்போசிட்டரி யூஸ் பண்ணினால் சில நிமிடத்தி போட்டி போய் விடும் என்று சொல்லி கேட்டிருக்கிறேன்..நீங்க பொறுமையா பழக்குங்க...என் பைய்யனும் அலறிக் கொண்டு தான் ஓடிட்டிருந்தான்..பிறகு சும்மா உக்காரு என்று பாடி ஆடி கோமாளித்தரமெல்லாம் பண்ணி தான் பழக்கினேன்..நீங்க பொறுமையா ட்ரை பண்ணுங்க

ஹாய் தளிகா அக்கா,எனது குழந்தைக்கு 4 மாதம் ஆகிறது.நான் இப்போது இந்தியா-வில் இருக்கிறேன் ,என் குழந்தையை காலில் குப்புற படுக்கவைத்து குளிப்பாட்டுவேன் ,என் அம்மா தண்ணீர் ஊற்றுவார்கள் ,ஆனால் அடுத்த வாரம் அபுதாபி -கு செல்கிறேன் ,நானாக குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று பயமாக உள்ளது .எதாவது டிப்ஸ் குடுத்து உதஉங்கள்.plssssssss

அபுதாபிக்கு தானே வறீங்க இங்கு அருமையா பேபி பாத்திங் சேர் கிடைக்கும்..அதில் உற்கார வைத்தால் தனியாக சுலபமாக குளிக்க வைக்கலாம்..குழந்தை பிடித்து நிற்கும் வயசு வரை அதில் குளிக்க வைக்கலாம்.உங்கள் கணவரிடம் சொல்லி இங்கு பேபி ஷாப்பில் பார்க்க சொல்லுங்க அல்லது அங்கு கிடைக்காவிட்டால் லுலூவில் அல்லது கே எம்மில் பாருங்க கிடைக்கும்

ஹய்யோ தளிகா அக்கா,எப்படி எனக்கு தேவைபடும் ட்ரெண்ட் எல்லாமே நீங்கள் ஆரம்பிக்கிறீங்கள்.இப்போ நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.என் மகள் பொட்டிலே உட்காரமாட்றாள்.urine toiletல் போகிறாள் ஆனால் motion தான் போகமாட்றாள்.2 years 3months aakuthu. motionக்கு diaper தான் வேண்டும் என்கிறாள்.

கலை நீங்க இதுபடி ட்ரை பண்ணுங்க கண்டிப்பா மாத்திடலாம்..ஆனா நான் சொன்ன மாதிரி உறுதியா இருக்கணும் கஷ்டபட்டு ட்ரை பண்ணிட்டு சரி பிறகுன்னு விட்டா இதே கதையா இருக்கும்

vanakam tholikalay,
mandrathirku naan puthithu; erunthalum arusuvai moolam naan niraya visayangal therinthu erukayen atharku mudhalil nandri. naan france vasikirayen; enaku 13 maatha pen kulanthai ullathu;
en kaylvi yenna vendral yentha maathathil erunthu paati training panurathu; pls sollungappa; enukunu freinds yaarum enga kidayathu. unga ellar kudayam pallaga aasaiya eruku pa. pls uthavunga.

ஹாய் தாளிகா அக்கா அஸ்ஸலாமு அலைக்கும் .நானும் அபுதாபியில் madina zayed area வில்தான் NMC Hospital அருகில் இருக்கிறேன் ..அங்கு நீங்கள் எந்த இடத்தில இருக்கிறீர்கள்.. விருப்பம் இருந்தால் சொல்லவும் உங்களுடைய potty training பற்றிய information useful ஆக இருந்தது

மேலும் சில பதிவுகள்