ஈச்சங்கொட்டை பணியாரம்

தேதி: September 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

அரிசி மாவு - ஒரு கிலோ
தேங்காய் - ஒரு மூடி
முட்டை - 2
கரூர் நெய் (அல்லது) டால்டா - 100 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் பால் எடுத்துக் கொள்ளவும். திரும்பவும் மிக்ஸியில் அரைத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து 2-ம் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முதல் பால், முட்டை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து வைத்துக் கொண்டு நெய்யை உருக்கி மாவில் ஊற்றவும்.
நெய்யை மாவில் ஊற்றியவுடன் ஒரு கரண்டியால் நன்கு ஆறும் வரை அனைத்து மாவிலும் படும்படி கலக்கவும்
மாவு ஆறியவுடன் கலக்கி வைத்து இருக்கும் பாலையும் முட்டையும் அதில் ஊற்றி நன்கு பிசையவும்
பிறகு 2-ம் பாலையும் ஊற்றி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். (மாவு கையில் ஒட்டாதவாறு பிசையவும்)
மாவை நன்கு பிசைந்தவுடன் மாவை கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும்.
சிறு அச்சுகளால் தட்டிய மாவை வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

புதுசா இருக்கு :) அழகாவும் இருக்கு. எந்த ஊர் ஸ்பெஷல் இது? ஈசியா இருக்கு செய்ய. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்...பணியாரம் ரொம்ப அருமைய செஞ்சு இருக்கிங்க மா....பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு....அச்சு எல்லாம் ரொம்ப அழகா இருக்கு...

பூப்பூவாய் பணியாரம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஈச்சங்கொட்டை பணியாரம்,ரொம்ப நல்லா வந்துள்ளது.இது நாகூர்ல ரொம்ப பிரபலம் ஆட்சே.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மாவை எவ்வளவு நேரம் ஊர வைக்கனும்

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபர்வீன்.பார்க்கும் போதே நாக்கு ஊறுது இப்பவே செய்யனும் போல இருக்கு ஆனால் என்னிடம் அச்சு இல்லை ஏதாவது மூடியில் செய்தால் நல்லா வருமா?
ப்ளீஸ் உடனே பதில் போடுங்கப்பா .
அரிசி மாவு இப்பத்தான் இடித்து வந்திருக்கு

SSaifudeen:)

நன்றி வனிதா. முஹ்சினா சொல்வது போல் இது நாகூரில் ரொம்ப பிரபலம் அதனால் இது நாகூர் ஸ்பெஷல்.
நன்றி ஷமிலா.
நன்றி இந்திரா.
நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

மாவை ஊற வைக்க தேவையில்லை மாவை பிசைந்ததும் உடனே செய்துவிடவும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அலைக்கும் முஸ்ஸலாம் ஷமிஹா எந்தா அச்சியாலும் செய்யலாம். அல்லது மாவை நீளவாக்கில் உருட்டி கத்தியால் சிறு சிறு துண்டு களாகவெட்டியும் செய்யளாம்.மன்னிக்கவும் உடனே பதில் அனுப்ப முடியவில்லை.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பெயரும் நல்லா இருக்கு ; குறிப்பும் ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள் !

பெயரும் ஆச்சுகளும் கலக்கலாக இருக்கு :) குறைவான பொருளில் எளிமையான அழகான பலகாரம். பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு பனியாரம் ரொம்ப பிடிக்கும். அழகான டிசென். சூப்பர்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

லாவண்யா உங்கள் பாராட்டுக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கார்திகா உங்கள் கருத்துக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஈச்சங்கொட்டை பணியான் அச்சுக்கள் நல்லா இருக்கு,நான் காரைக்கால்பா,அதனால் எங்க ஊர்லயும் இது ஃபேமஸ்,இனிப்பு பணியான் சாப்பிட முடியாதவர்கள் இதை விரும்பி சாப்பிடுவர்,நெய் அதிகம் சேர்த்தால் பணியான் எண்ணெயில் சுடும்போது கரைந்துவிடும்,பார்த்து செய்யுங்கள்,கோச்சிகாதீங்க ஹலிலா,எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.என்னுடைய குறிப்பில் நானஹத்தா செய்த அச்சில்தான் செய்வார்கள்.என்னிடம் இருந்த அச்சுக்கள் போல் இருந்தால் அதிலும் செய்யலாம்.

Eat healthy

சலாம் ரஸியா இந்த முறையில் செய்து பாருங்கள் கரையாது. நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பார்க்க ரோம்ப அழகாக உள்ளது .நான் கும்பகோணத்தில் வசிக்கிறேன் இந்த அச்சு எங்கு கிடைக்கும்

இந்த அச்சு எனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தார்கள் இதுபோல் சென்னையில் வேண்டும் மானால் கிடைக்கலாம். (பிஸ்கட் அச்சு என்று கேட்டு வாங்கவும்)நன்றி!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Ithai cup alavil sollunga plss