உருளை ப்ரை

தேதி: September 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (6 votes)

 

உருளைக் கிழங்கு - 350 கிராம்
சிக்கன் 65 பொடி - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

உருளையை படத்தில் உள்ளது போல் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கி வைத்த உருளை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகும் வரை விடாமல் வதக்கவும். கை விடாமல் வதக்கி கொண்டே இருக்கவும் இல்லையெனில் அடிப்பிடிக்கும்.
உருளைக் கிழங்கு வெந்ததும் சிக்கன் 65 பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய உருளை ப்ரை ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற ஜோடி.

சிக்கன் 65 பொடியின் அளவை அவரவர் காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும். சில சிக்கன் 65 மசாலாவிலேயே உப்பும் சேர்ந்து இருக்கும் அதனால் உப்பின் அளவை பார்த்து குறைத்து போடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் இந்து
நான் தான் முதல் பதிவு.முகப்பிலே நீங்க தான்னு கெஸ் பண்ணினேன்..சரியா தான் இருக்கு :)
உருளை ப்ரை சூப்பர்.
உருளை 65 என்று பேர் வச்சுருக்கலாம்.இன்னும் பொருத்தமா இருக்கும்...அடுத்த தடவை இப்படித்தான் செய்யணும்.

இந்திரா நானும் இப்படி தான் செய்வேன் ஒரே வித்தியாசம் நான் தனி மிளகாய் தூள் சேர்ப்பேன் அவ்வளவே இந்த உருளைக்கிழங்கு ப்ரையோட தயிர் சாதம் சேர்த்து சாப்பிட்டா அடடா எனக்கு தேவாமிர்தம் தான். 65 பொடி சேர்த்தா வேற மாதிரியான டேஸ்ட் தான். உங்க முறையில் செய்யனும் செய்துட்டு சொல்றேன்.
இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி. நானும் உருளை 65னு வைக்கலாம்னு யோசிச்சேன் அப்புறம் 65 கு டீப் ஃப்ரை பன்னுவோமே இது அப்படி இல்லையேனு நினைச்சி தான் அந்த பேரு வைக்கல சமீலா.செஞ்சி பாத்துட்டு எப்படி இருந்துச்சினு மறக்காம சொல்லுங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி. நீங்க மிளகாய்தூள் சேர்த்து செய்வீங்களா? இப்படி செஞ்சி பாருங்க நல்லா இருக்கும் சிக்கன் 65 வாசம் பிடிக்கிறவங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். 65 பொடி சேர்த்து செஞ்சி பாத்துட்டு எப்படி இருந்துச்சினு மறக்காம சொல்லுங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

65 வாசம் இங்க வரை வீசுது,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்து உருளை ப்ரை சூப்பர்! வாழ்த்துக்கள் !! நீங்கள் கூறியது போல் டீப் ப்ரை பண்ணுவதை விட half cook தான் அதிக சுவை .
என்ன இந்து ...?உருளையோட மெயின் ஜோடி தயிர் சாதத்தை விட்டுடீங்க :)

வாழ்த்திற்கு நன்றிகள் பல... அச்சச்சோ தயிர் சாதத்த எப்படி மறந்தேனு தெரியலயே?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த்ரா

முசினாவின் கொள்ளு புலாவிற்கு உங்க உருளை ரொம்ப நல்லா இருந்தது.நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன் மசாலாவுடன் உருளை ;) சுவர்ணா மாதிரி என்னை மாதிரி இம்மாதம் சைவம் சாப்பிடுறவங்களுக்காகவே இந்த குறிப்பு :) தேன்க்யூ தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுக்குள்ள செஞ்சிட்டீங்களா ரொம்ப ரொம்ப நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி... நீங்களும் இந்த மாசம் நான்வெஜ் சாப்பிட மாட்டீங்களா? நான் சாப்பிடுவேனே ஹா ஹா ஹா...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
உருலைகிழங்கு வறுவல் மிகமிக அருமை.........................நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அருமை.......................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு உருளை கிழங்கு செஞ்சி பார்த்ததோட இல்லாம மறக்காம வந்து பின்னூட்டம் அனுப்பனதுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு பிடிச்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அருமையான ரெசிப்பி கொடுத்த உங்களுக்கு நன்றி...............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

ஹாய் இந்திரா.. நேற்று உங்க உருளை ப்ரை செய்தேன்.. சூப்பரா இருந்துச்சு.. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. நான் இப்பொழுது தான் சமையலில் அடியெடுத்து வைக்கிறேன்.. உங்க குறிப்பால எங்க வீட்டில் எனக்கு பாராட்டு கிடைச்சது... மிக்க நன்றி...

கலை

supar

supar

rompa nanri

i do the potato pairai very nioce taste. my children like it.

பிரான்ஸ் பிரய்ஷ் செய்வது எப்படி யாரவது உதவுங்கள் தோழிகளே

உருளை கிழங்கு பொரியல் ரொம்ப நல்லா இருந்துது. ப்ரை பன்னும் போது கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்.

உனக்கொரு நல்ல நட்பு வேன்டுமெனில் நீ ஒரு நல்ல நண்பாணாயிரு.