கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனை

அன்பு தோழிகளே,
நான் இப்பொழுது 16 வார கர்ப்பம்.இரண்டாவது கர்ப்பம். இப்ப எனக்கு தைராய்டு பிரச்சனை.என் எடை அதிகமாயிட்டே இருக்கு.கர்ப்பம் ஆனதிலிருந்து அதுக்குள்ள 7 கிலோ எடை அதிகமாயிருச்சி.மருத்துவர் ஆலோசனைபடி மாத்திரை காலை வெறும் வயிற்றில் சாப்பிடறேன்.

என்னோட கைனகாலஜிஸ்ட் எடை பத்தி கவலை படாத, டெலிவரிக்கு பிறகு குறைச்சுக்கோங்கறாங்க.மைதா,டீப் ஃபிரை, இனிப்பு தவிர்த்து மீதி எல்லாம் சாப்பிடுனாங்க.எனக்கு கர்ப்பம் ஆன பிறகு தான் தைராய்டு வந்திருக்கு.முன்பு கிடையாது.

ஒரு மாசமா தைராய்டு மாத்திரை சாப்பிடறேன். அக்டோபர் முதல் வாரம் இன்னொரு தைராய்டு டெஸ்டு எடுத்துட்டு மாத்திரை டோஸ் பத்தலைனா அதிகப்டுத்தனும்னு சொன்னாங்க.

வாமிட், மார்னிங் சிக்னஸ்னால சரியா சாப்பிடாமலே மாதத்துக்கு 2 - 3 கிலோ எடை அதிகமாயிட்டேன். இப்ப தான் அதெல்லாம் சரியாகி பசிக்க ஆரம்பிச்சிருக்கு.சாப்பிடவே பயமா இருக்கு.பழம், காய்கறி, கீரைனு சத்தானதா தான் சாப்பிடறேன்.இனிப்பு, ஆயில் தவிர்த்துட்டேன்.நொறுக்கு தீனிக்கும் தடா தான்.

இந்த பிரச்சனை உள்ள தோழிகள் எப்படி எடைய கட்டுபடுத்துனீங்க? என்ன மாதிரி உணவு சாப்பிடனும்?

மேலும் சில பதிவுகள்