இறால் பிரியாணி

தேதி: September 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

அரிசி - 3/4 கிலோ
இறால் - அரை கிலோ
வெங்காயம் பெரியது - 4
தக்காளி பெரியது - 3
பச்சை மிளகாய் - 3
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
புதினா - 5 கொத்து
மல்லி கீரை - 5 கொத்து
எண்ணெய் - 50 மில்லி
தயிர் - அரை கப்
முந்திரி - 10
மஞ்சள் கலர், சிகப்பு கலர் - தலா ஒரு சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை கழுவி விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இறால் போட்டு நன்கு கிளறி விடவும்.
அதனுடன் எல்லா மசாலாதூள் வகைகள், தயிர், தக்காளிசாஸ், உப்பு, பன்னீர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு பரப்பி விடவும். முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடவும். மல்லி தழை போடவும். மஞ்சள், சிகப்பு கலர், இரண்டையும் தனித்தனியே இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அதில் ஊற்றவும்.
தட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து 5 நிமிடம் தம்மில் வைக்கவும். பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு திரும்பவும் 15 நிமிடம் தம்மில் வைக்கவும்.
சுவையான இறால் பிரியாணி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும்,
வாவ்.....இறால் பிரியாணி அட்டகாசமா இருக்கு ஹலிலா.....அருமையா செஞ்சு இருக்கிங்க....வாழ்த்துக்கள் மா....

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும்,
வாவ். என்னொட favorate இறால் பிரியாணி. அருமையா செஞ்சு இருக்கிங்க
///வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்./// படம் சூப்பர் எனக்கு இப்பவே வேணும். வாழ்த்துக்கள்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வாவ்!!! ஊருக்கு வந்தாச்சு ஆனா இந்த மாசம் முடிஞ்சு தான் அசைவம் வீட்டில். :) அடுத்த மாசம் சமைச்சுடுறேன், இங்க இருக்க வரை ஒரே இறால் தான்.... அங்க போன கிடைக்காதில்ல. சூப்பர்.... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

halila,இறால் பிரியாணி சூப்பர்,படங்கள் ரொம்ப சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கமகமக்கும் இறால் பிரியாணி சூப்பர் வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அலைக்கும் முஸ்ஸலாம் கார்திகா அவசியம் செய்து சாப்பிட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க. ரொம்ப நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி வனிதா. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி முஹ்சினா.அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி செய்து பாருங்க. இந்திரா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,

அருமையான குறிப்பு..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)