அவரைக்காய் பொரியல்

தேதி: September 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று சிறியது
பச்சை மிளகாய் - 2
பொரிக்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பொரிக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
அவரைக்காயை வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்
வடசட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த காய், பொடித்த பொரிக்கடலை, தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு எல்லாம் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய அவரைக்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிளான நல்ல கறிவகை :) இன்னைக்கு தான் இருந்த அவரக்காயை சாம்பார் வெச்சாங்க, இன்னும் இரண்டு நாள் போகட்டும் செய்ய சொல்றேன் :) நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொரியல் ரொம்ப நல்லா இருக்கு,இந்திரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி. அம்மாவ செஞ்சி தர சொல்லி சாப்ட்டு பாத்து எப்படி இருந்துச்சினு மறக்காம சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அவரைக்காயில் இப்படியும் பண்ணாலாமா? அக்கா சூப்பர்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!! ம்ம் பண்ணலாம்பா ட்ரை பண்ணி பாருங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா எனக்கு மிகவும் பிடித்த அவரைக்காய் பொரியல் அருமை

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

எப்பவும் அவரக்காயை ஒரே மாதிரியா செய்து போரடிக்குதுப்பா.
இந்ததடவ பொரிகடல சேர்த்து சமைச்சு பார்த்திர்றேன்!
வாழ்த்துக்கள் இந்திரா!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!செஞ்சி பாத்துட்டு எப்படி இருந்துச்சினு சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.