நெஞ்சு சளி

குழந்தைக்கு அதிகமாக நெஞ்சு சளி உள்ளது எதனால் காய்ச்சல் அதேகம இருக்கு டாக்டர் தந்த சிறுப் சரியாக வில்லை காய் விதம் செய்யலாமா? ௧௦ நாட்களுக்கு மேல் இருக்கு..... என சிய என்று வழி கூறுங்கள்

குழந்தை என்றால் எவ்வளவு பெரிய குழந்தை என்று சொன்னால் வைத்தியம் சொல்ல எதுவாக இருக்கும்.

தாய் பால் குடிக்கும் குழந்தை என்றால் இரண்டு துளசி, அரை கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதை தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை சூடு செய்து அதனுடன் கற்பூரத்தை (ஒரு துளி) கரைத்து இளஞ்சூட்டில் நெஞ்சில் தடவவும். ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தை என்றால் குடிக்க அடிக்கடி சுடு நீர் கொடுக்கவும். தேன் சளி இருமலுக்கு மிக சிறந்த நிவாரணி. பாலில் தேன் கலந்து கொடுக்கலாம். இஞ்சி சாறு பிழிந்து அதை தேன் கலந்து குடிக்க கொடுக்கலாம். குழந்தை தூங்கும் ரூமில் (தூங்கிய பிறகு) கொதிக்கும் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் சில துளி யூக்கலிப்டஸ் எண்ணெய் அல்லது விக்ஸ் சேர்த்து வைத்து விட்டு ரூம் கதவை பூட்டி விட்டு அங்கயே இருக்கவும். (குழந்தை திடீரென்று எழுந்து தண்ணீரை தொட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்) அதே போல் குளிக்கும் அறையில் சென்று பூட்டிக் கொண்டு ஷவரில் சூடு நீர் வருமாறு திருப்பி விட்டு விட்டு தள்ளி நிற்கவும். ரூம் பூராவும் ஆவியாக இருக்கும். இதுவும் குழந்தையின் நெஞ்சு சளியை கரைக்க உதவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக நன்றி ... அவசரத்தில் சொல்ல விட்டுடன் 11 மாத குழந்தை. aத்தையும் சாப்ட மாற்ற. இருமல் இருக்கு. சாப்பிட என் தரலாம்... என்றும் கூறுங்கள்

brindhashankar

குழந்தைக்கு இருமல் இருந்தால் சாப்பிட ரொம்பவும் கஷ்டமாக தான் இருக்கும். ரசம் சாதம் (நல்ல குழைவாக பிசைந்தது) சூப், இட்லி, இடியாப்பம், அப்பம், போன்றவைகளை கொடுக்கலாம். மஞ்சள் தூள் மற்றும் மிளகு கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் நல்லது. இருமலுக்கு தேன் நல்லது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வெற்றிலையில் விக்ஸ் தடவி ஒத்தடம் குடுத்தால் நெஞ்சு சளி குணமாகும்...என் கசினுக்கு வீட்டில் இது போல் செய்வார்கள். நன்றாக கேட்கும்....விருப்பமிருந்தால் செய்து பாருங்கள்..

appadiea saikeran nandri.....

brindhashankar

மேலும் சில பதிவுகள்