சிக்கன் சாபீஸ்

தேதி: October 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லிதழை - 2 கொத்து
எலுமிச்சைசாறு - ஒரு தேக்கரண்டி

சிக்கனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மிளகு தூள் , அரை தேக்கரண்டி சீரக தூள், சோம்பு தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மீதம் உள்ள மசாலா தூள் வகையை சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த சிக்கன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். மூடிபோட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு மூடியை திறந்து மல்லிதழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான சிக்கன் சாபீஸ் ரெடி

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

யம்மி சிக்கன் பா,நாக்கில் எச்சில் ஊறுது,கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு நன்றி.

Eat healthy

ரொம்ப நல்ல குறிப்பு :) இப்போ சிக்கனுக்கு லீவு ;) அப்பறமா செய்துடுவோம். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான் சிக்கன் குறிப்பு வாழ்த்துக்கள். 2 லெக்பீஸ்ம் எனக்கு தான்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய் ஹலிலா சிக்கன் சாபீஸ் பார்க்க சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

ம்ம் சுவையான சிக்கன் சாபிஸ்.நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்கவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சலாம் ரஸியா. அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொலுங்க நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி வனிதா. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி இந்திரா. அவசியம் செய்து சாப்பிட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி Nasreen.அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி முஹ்சினா.அவசியம் செய்து சாப்பிட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நன்றி கார்திகா. அவசியம் செய்து சாப்பிட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நாக்குல எச்சில் ஊருது ,.புரட்டாசி மாசம்...முடியல,.

Brintha
இதுவும் கடந்து போகும்

நன்றி. அவசியம் செய்து சாப்பிட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)