புடலங்காய் பருப்பு கறி

தேதி: September 6, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பருப்பு - 200 கிராம்
புடலங்காய் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
தேங்காய் பால் - 2 தேக்கரண்டி (முதற்பால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைப்பதற்கு :
உள்ளி - 4 பல்
மிளகு - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி


 

பருப்பை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
புடலங்காயை சுத்தம் செய்து சின்ன சின்ன சதுரங்களாக வெட்டவும். வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பருப்பை பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அவிய வைக்கவும்.
தண்ணீர் கொதித்து வந்ததும் புடலங்காயையும் அதனுள் போட்டு அவிய விடவும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றையும் சேர்க்கவும்
அடுத்து பருப்பு, புடலங்காய் அவிந்து வந்ததும் உப்பு மற்றும் அரைத்து வைத்த எல்லாவற்றையும் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் விடவும்.
கடைசியாக தேங்காய் பாலை விட்டு அது கொதித்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி சாதம், தோசை, இட்லி என்பவற்றுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று மதியம் சாதத்திற்கு உங்கள் புடலங்காய் பருப்பு கறி செய்தேன் சூப்பராக வந்தது.
நல்ல ரேசப்பி தந்தமைக்கு வாழ்த்துக்கள் வஜிதா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி மேம் இந்த குறிப்புக்கு எந்த பருப்பை பயன்படுத்தி செஞ்சீங்க. நாளைக்கு நானும் செய்யலாம் என்று இருக்கிறேன்.