கிராமத்து கோழிக் குழம்பு

தேதி: October 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (22 votes)

இந்த குறிப்பினை நான் வனிதா அவர்களின் கிராமத்து கோழிக் குழம்பு குறிப்பை பார்த்து செய்தேன். இதன் சுவை எனக்கு மிகவும் பிடித்ததால் அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இங்கு கசகசா கிடைக்காததால் நான் அதை மட்டும் சேர்க்கவில்லை.

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் பெரியது - ஒன்று (அ) சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
மிளகாய் வற்றல் - 8
தனியா - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம்
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது - கால் கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
பூண்டு - 5 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நுறுக்கி கொள்ளவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தனியா, மிளகாய் வற்றல், மிளகு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
அதில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு முதலியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சிறிது நேரம் வேக விடவும்.
வறுத்து வைத்த பொருட்களுடன் தேங்காய், பட்டை, லவங்கம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை சிக்கனில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து சேர்க்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இப்போது கமகமக்கும் கிராமத்து கோழிக் குழம்பு தயார். இது சூடான சாதம், இட்லி, தோசை, பூரி எல்லாவற்றிற்கும் சரியான ஜோடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்!!! ரொம்ப ரொம்ப அருமையா அழகா செய்து படமும் எடுத்திருக்கீங்க. மகிழ்ச்சியா இருக்குங்க :) நான் செய்து அனுப்பி இருந்தா கூட இத்தனை மகிழ்ச்சி இருக்காது, தோழிகள் செய்து படம் அனுப்பினால் தனி மகிழ்ச்சி தான் :) மீண்டும் மீண்டும் நன்றி இந்திரா. அசத்தலா அனுப்பி இருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

picture paarkave romba nalla irukku...i will also try sooner

அருமையான குறிப்பு +படங்கள் மிகமிக அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த குறிப்பின் சொந்தக்காரர் வனிதாவிற்கு நன்றிகள் பல. எனக்கு இங்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் அனைத்தையும் உங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//நான் செய்து அனுப்பி இருந்தா கூட இத்தனை மகிழ்ச்சி இருக்காது, தோழிகள் செய்து படம் அனுப்பினால் தனி மகிழ்ச்சி தான் :) //உங்களுக்கு நிஜமாவே ரொம்ப பெரிய மனசு அதான் இப்படி சொல்றீங்க. இப்படி ஒரு குறிப்ப கொடுத்ததுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.நன்றி நன்றி நன்றி....வாழ்த்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என்ன இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க... உண்மையில் எல்லாருக்குமே அவங்க குறிப்பை யாராவது செய்து படம் எடுத்து போட்டா அது பெரிய மகிழ்ச்சி தான். அது மட்டுமல்ல... வெறும் குறிப்பை விட படக்குறிப்பா வரும் போது பலரும் செய்து பார்ப்பாங்க. அந்த வகையில் நீங்க எனக்கு தந்த மகிழ்ச்சி இருமடங்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிராமத்து கோழிக் குழம்பு சூப்பர். எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு. வாழ்த்துக்கள்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

கிராமத்து கோழிக் குழம்பு அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Best cooking web site.
Please include Italian cuisine,French cuisine and Thai cuisine

Ravindran

Ennaku migavum pidithirundhadhu taste mikgavum nanru

அறுசுவை அனைத்தும் அறுசுவை
மிக்க‌ நன்றி