உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

இறப்பிற்கு பின் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன். உடல் உறுப்புகளை எவ்வாறு தானம் செய்ய வேண்டும்? இதற்கு எங்கு சென்று register செய்ய வேண்டும்? என்னென்ன procedures உள்ளன? இதை பற்றி முழு விவரங்களை தெரிந்த தோழிகள் சொல்லவும்..

இங்கே எந்த லின்க்கும் கொடுக்க அனுமதி இல்லை. ஆனால் இது போல் ஒரு நல்ல விசயத்துக்கு உதவுவதால் அட்மின் ஏதும் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இங்கே கொடுத்திருக்கிறேன்.

http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation

இதில் உங்களுக்கு தேவையான முழு தகவலும் படிவங்களும் கிடைக்கும்.

அட்மின்... தவறாக இருப்பின் நீக்கி விடவும். என்னையும் மன்னிக்கவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உடனே பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

உடல் உறுப்பு தானம் நாம மரணித்த பிறகு செய்ய வேண்டியிருப்பதால் கண் தானம் உறுப்பு தானம்னு எழுதி வச்சுட்டும் ப்ரியோஜனமில்லை..நிறைய பேர் அப்படி எழுதியும் பிறகு தானம் செய்யாமல் போக நேரிடுகிறது...இதற்கு முக்கிய காரணம் அந்த நபர் இறந்தபிறகு மற்ற சடங்கு சம்பிரதாயம்னு இருக்க இது பற்றிய ஒரு நினைப்பு குடும்பத்தினருக்கு போகாது அதற்குள் காலம் கடந்து போயிருக்கும்..இப்படி ஒன்று மனசில் இருந்தால் உங்கள் உங்கள் குடும்பத்தினர் முக்கியமானவர்களிடமெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து சம்மதம் வாங்கி இறந்தபின் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் தானம் செய்ய ஏற்பாடு செய்வதாக ஒப்பந்தம் வாங்கிக் கொள்ள வேண்டும்.நாம் போன பிறகு மற்றவர்கள் மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்வார்கள்.எங்கு எப்படி தொடர்பு கொள்ள என்பதை இப்போவே குடும்பத்தினர் உதவியோடு இப்பவெ முடிவு பண்ணி வச்சுக்கலாம்

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் இதை பத்தி யோசிச்ச கா. உறுப்பு தானம்ங்கறது நாம இறந்த பிறகு செய்ய கூடிய விஷயம் அப்போ கண்டிப்பா இதில நம்ம குடும்பத்திலே இருக்றவங்க கையிலே தா எல்லாமே இருக்கு. நம் குடும்பத்தில் இருபவங்க அந்த சூழ்நிலையிலே கண்டிப்பா இதை பத்தி மறக்க சான்ஸ் நிறையவே இருக்கு. உறுப்பு தானம் செஞ்சவங்க அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் இதை பத்தி பேசணும். உறுப்பு தானம் செஞ்சு வெறும் donarcard வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அடிக்கடி நம்ம குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதை எடுத்து காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மற்றும் நம் நெருங்கிய தோழிகள் / நண்பர்கள் அவர்களிடமும் இதை பற்றி சொல்லி வைத்தல் மிகவும் அவசியம். அப்பொழுது தான் , நாம் இறந்த பின்பு, உறுப்பு தானம் செய்வதை அந்த நேரத்தில் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மறந்தாலும், அவர்கள் ஞாபகம் படுத்துவார்கள்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்