ஹாட் மட்டன் சூப்

தேதி: October 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

மட்டன் - கால் கிலோ
வேக வைத்த சோளம் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல்
டவுன்டா இலை - இரண்டு
பார்ஸ்லே கீரை (அ) மல்லி தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட்டை நறுக்கி வைக்கவும்.
பிரசர் குக்கரில் மட்டனை கழுவி சுத்தம் செய்து போட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேக விடவும்.
பின் ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெங்காயம், டவுன்டா இலை போட்டு வதக்கி நறுக்கிய பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், பார்ஸ்லே கீரை, சோம்பு தூள், கரம் மசாலா தூள் போட்டு தாளித்து மட்டன் சூப்பில் ஊற்றவும். அதில் கேரட், சோளம் சேர்த்து ஒரு விசில் விடவும்.
ஹாட் மட்டன் சூப் ரெடி. சூடாக பரிமாறவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சூப். பார்ப்பதுக்கு ரொம்பவே அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

அருமையான சூப் :) அப்படியே கொடுத்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முஹ்சினா மட்டன் சூப் சூப்பர்...

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும்.ஹஜ்ஜி பெருநாளைக்கு ஏற்ற டிஸ் செஞ்சிருக்கீங்க செய்து பார்த்திட வேண்டியது தான்.

SSaifudeen:)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,கார்திகா அவசியம் செய்துபாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி கேட்டு கொடுக்காமல் இருப்பேனா!;;;;அப்படியே உங்களுக்குதான்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி ஹலிலா,செய்து பார்த்து வீடு சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அலைக்கும் சலாம்,அவசியம் செய்து பாருங்க,சமீஹா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மட்டன் சூப் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சூப்பரா செய்து இருக்கீங்க.'டவுன்டா இலை' என்றால் என்ன என்று சொல்லுங்க
முசினா

மிக்க நன்றி,இந்திரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி ப்ரியா,டவுன் பான்டா இலை என்று சொல்வார்கள்.இது சைனா கடைகளில் கிடைக்கும்.மேலும் தெறிந்துகொள்ள டவுன் பான்டா என்று google custom search தட்டி பருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி மட்டன் சூப் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மட்டன் சூப் பிரமாதம்...வாழ்த்துக்கள்!

ரொம்ப நன்றி,சுவர்னா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,mrs.vibjy.அவசியம் செய்து பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.