கட்டி சோறு

தேதி: October 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

புழுங்கல் அரிசி - ஒரு கப்
தேங்காய் - கால் மூடி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு பல் - 10
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு

தேங்காயை மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பூண்டை நறுக்கிக் கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.
நன்கு பொரிந்ததும் அதில் தேங்காய் பால், அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசியை அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டும் நேரம் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு நன்கு தண்ணீர் சுண்டியதும் ஒரு மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான கட்டி சோறு ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

பேரு வித்தியாசமா இருக்கே... நல்லா இருக்கு கடைசி படமும். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டு சோறு தெரியும் .கட்டி சோறு இப்போ தான் கேள்விபடுறேன் வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹலிலா,கட்டி சோறு அருமையாக செய்திருக்கீங்க.படங்கள் ரொம்ப சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி இந்திரா. (நாகூரில் இஸ்லாமியர்கள் வீடுகளில் செய்வார்கள்)

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கட்டி சோறு ரொம்ப நல்லா இருக்கு ஹலிலா...நானும் அடிக்கடி ஆபிஸ்க்கு செஞ்சு எடுத்துட்டு போவேன்.....

கட்டி சோறு அபாரம்,எனக்கு ரொம்ப பிடிக்கும்,நாங்களும் இப்படிதான் செய்வோம்,ஆனால் ஒரு வித்தியாசம்,சாதத்தை ஏற்கனவே தனியாக சமைத்து பிறகு தாளித்து அதில் சாதத்தை போட்டு பிரட்டி எடுப்போம்.உங்க முறைபடி செய்து பார்க்கிறேன்.

Eat healthy

கட்டு சோறு தான் பா எங்க ஊர் பக்கம் கட்டி சோறுன்னு சொல்லுவோம்.

Eat healthy

ரொம்ப நன்றி ஷமீலா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி ரஸியா அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இந்திராக்கு சரியான பதிலை சொன்னமைக்கும். ரொம்ப நன்றி ரஸியா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)