ஈஸி குக்கர் கேக்

தேதி: October 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (22 votes)

இந்த குக்கர் கேக் சுந்தரி அர்ஜூன் அவர்களின் குறிப்பை பார்த்து சமைத்து அசத்தலாமிற்காக செய்தது.

 

மைதா மாவு - 2 கப்
சீனி - ஒன்றரை கப்
வெண்ணெய் - ஒரு கப்
முட்டை - 4
ரீஃபைண்ட் ஆயில் - அரை கப்
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - முக்கால் தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சீனியை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், ரீஃபைண்ட் ஆயில், பொடித்த சர்க்கரை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
மைதாவை சலித்து பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவு கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
இதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்தால் கேக் மாவு ரெடி.
இந்த மாவு கலவையை வெண்ணெய் தடவிய குக்கர் பாத்திரத்தில் ஊற்றவும். (குக்கருடன் கொடுத்து இருப்பார்களே அந்த பாத்திரம்)
அந்த பாத்திரத்தை குக்கரினுள் வைத்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து 40-45 நிமிடங்கள் வேக விடவும். வெயிட், கேஸ்கட் போட தேவை இல்லை. குக்கரில் தண்ணீர் ஊற்ற தேவை இல்லை. இடையில் வேண்டுமானால் திறந்து பார்த்து கொள்ளலாம் ஒன்றும் ஆகாது.
கேக்கை டூத் பிக் கொண்டு குத்தினால் ஒட்டாமல் வந்தால் சுவையான கேக் ரெடி.
இப்போது விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேக் அருமையாக செய்துஇருக்கீங்க,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பை தந்த சுந்தரிக்கும், அதை அழகாக செய்து காட்டி எல்லோர் கண்ணுக்கும் விருந்தாக்கிய இந்திராக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். சூப்பர் இந்திரா. என்ன செய்ய... நான் இப்போ முட்டை சேர்க்க மாட்டனே... இந்த மாதம் முடியட்டும்... செய்துருவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

like this cake

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

என் போல் ஓவன் இல்லாதவர்களுக்கு கேக் செய்ய ஏதுவாக இப்படி ஒரு அருமையான் குறிப்பிபை வழங்கிய சுந்தரி அவர்களுக்கு என் நன்றிகள் பல...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா, குக்கர் கேக் ரொம்ப சிம்பிளா, ஈசியா இருக்கு... வாழ்த்துக்கள்...

ஒரு சந்தேகம் குக்கரில் தண்ணி இல்லாமல் வச்சா போட்டோம் நெருப்பில் பிடிசிராதா... குக்கர் பாட்டம் போய்டாதா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!! இந்த மாசம் முடியவும் செஞ்சி பாத்துட்டு சொல்லுங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

hii Indira madam...

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!! உங்களுக்கு வந்த அதே சந்தேகம் தான் எனக்கும் வந்துச்சி இருந்தாலும் குக்கர் போனாலும் பரவாயில்லை செஞ்சி பாத்துடனும்னு ஒரு முடிவோட தான் செஞ்சேன். ஆனா நான் பயந்த மாதிரி எதுவும் ஆகல குக்கர் நல்லா இருக்கு அடியில லேசா கொஞ்சம் கருப்பா ஆச்சி அடுவும் குக்கர விளக்கவும் போயிடுச்சி.அதனால பயப்படாம பன்னுங்க ஒன்னும் ஆகாது. அடுப்ப மட்டும் சிம்ல வைங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உடனே பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி பா... நீங்க சொன்ன மேதட்லையே கண்டிப்பா செய்து பார்த்திட்டு உங்களுக்கு பதிவிடறேன்... நன்றி

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

receipe super mam

வாழ்த்துக்கள் இந்திரா... கேக் நல்லா செய்துருக்கீங்க... நானும் செய்து பார்க்கிறேன்..

கலை

இந்திரா கேக் ரொம்ப அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள்.நம்ம சுந்தரியோட குறிப்பை அழகா செய்து காட்டியிருக்கீங்க சூப்பர்..:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாவ் ...சூப்பர் ! படங்கள் ஒவ்வொன்றும் தெளிவாக ரொம்ப...ரொம்ப... அழகா இருக்கு.வாழ்த்துக்கள் !

பார்க்கவே நல்லா இருக்கு சுவையும் நல்லாதான் இருந்திருக்கும்..... நானும் செய்து பார்க்கிரேன் கன்டிப்பா... :) வாழ்த்துக்கள்

அன்புடன்,
லலிதா

இந்திரா சுவையான குறிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!செய்து பார்த்துட்டு எப்படி வந்துச்சினு மறக்காம சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!செய்து பார்த்துட்டு எப்படி வந்துச்சினு மறக்காம சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

looking too good... thanks a lot for u madam.... pls upload more recipes

super kek

என் போல் ஓவன் இல்லாதவர்களுக்கு கேக் செய்ய ஏதுவாக இப்படி ஒரு அருமையான் குறிப்பிபை வழங்கிய சுந்தரி அவர்களுக்கு என் நன்றிகள் பல...

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சூப்பரா இருக்கு இந்திரா. சுந்தரிக்கும் எனது பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

குக்கர் கேக் ரொம்ப ஈசியா இருக்கு, வாழ்த்துக்கள்...

ஒரு சந்தேகம் ... எனக்கு குக்கருடன் எந்த பாத்திரமும் கொடுக்கவில்லை, நான் எந்த பாத்திரத்தில் செய்ய வேண்டும்.

sharmila

உங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என் குறிப்பில் உங்க பதிவ பார்த்ததும் எனக்கு அளவில்லா சந்தோஷம். நன்றி.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி. நீங்கள் உங்ககிட்ட இருக்குற அடிதளம் சமமா இருக்குர ஒரு பாத்திரத்த வச்சி செஞ்சி பாருங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா நல்லா செஞ்சு இருக்கிங்க பா...
இப்படி கேக் கட் பண்ணி எல்லாம் வச்சா எனக்கு எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு.....இப்படி எல்லாம் ஆசையை கிளப்பாதிங்க...சொல்லிடேன்....

kukkaril water illana karugi poidatha?

yaravathu senju parthingala? naan ippathan paarthen.inimel than seiyanum.cake paarkave supera irukku.reply plz....

வாழ்த்திற்கு நன்றி. எடுத்துக்கோ எடுத்துக்கோனு சொல்லுதா அப்போ இந்தாங்க எடுத்துக்கோங்க ஃபுல்லா உங்களுக்கு தான் சாப்பிடுங்க....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி...அடுப்ப நல்லா சிம்ல வச்சி குக்கர்ல கேஸ்கட் போடாம விசில் போடமா தண்ணி ஊத்தாம வைங்க ஒன்னும் ஆகாது கருகாது பயப்படாம செஞ்சி பாருங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

karigi vidatha

மிக்க நன்றி. என்னை போன்ற பிகினர்கு மிகவும் உதவி. வேற ஏதாவது குக்கர் கேக் செய்முறை இருக்கிறதா

how are you i am new today

super kuripugal

maha

i tried this cake today and it turned out wonderful.do post other cooker cake recipes also...sponge cake, chocolate cake,etc.thanks

நான் முதன் முதலில் செய்த கேக் இதுதான் என் மாமனார்,மாமியார் அனைவரும் என்னை பாராட்டி இன்பகடலில் மூல்கடித்து விட்டனர்.உங்களுக்குதான் நன்றி சொல்லனும்.இந்த கேக்கை எப்படி அழங்கரிப்பது.கலர் கலராக ரோஜபூகிரீம் கொண்டு அழங்கறிக்க சோல்லிதாருங்கள் PLZ.

இந்திரா மேடம் ஈசிகுக்கர கேக்ல எப்படி ஐசிங் செய்வது

இந்த கேக்கை இன்று செய்தேன். நன்றாக வந்தது. ஆனால் அடியில் ஒரு லேயர் மட்டும் மிகவும் ப்ரௌனாக ஆகி விட்டது. அடி பிடித்து கொண்டது. சுற்றி ஓரங்களிலும் ப்ரௌன் ஆகிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் வைத்த பின் தான் நடுவில் வெந்தது. நான் எங்கு தப்பு செய்தேன் என்று தெரியவில்லை. ப்ளீஸ் விளக்குங்களேன்.

ஈஸி குக்கர் கேக் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது நான் முட்டைக்கு பதில் தயிர் சேர்த்து செய்தேன் மிக்க நன்றி அட்மின் குழு மற்றும் சுந்தரி அர்ஜுன்

Dhatchinamoorthy.G

Intha cake.butter melt aaki add pannanuma.illa bridgela irunthu yeduthu serkalama.cake.easyah iruku.seyialam endru iruken.plz help

Plz help.butter melt aakithan use pannanuma.cup alavu yenral evalavu

cup alavu yenral evalavu// சாதாரணமாக 250 ml.

//Intha cake. butter melt aaki add pannanuma. illa bridgela irunthu yeduthu serkalama. // எந்த கேக், குறிப்பாக இருந்தாலும் பட்டர் & முட்டைகளை முன்னாடியே ஃப்ரிஜ்ஜில் இருந்து வெளியே எடுத்து வைச்சிருங்க. அறை வெப்பநிலைக்கு வர வேண்டும். சூடு காட்டி உருக்கத் தேவையில்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுத்த உடனே அப்படியே குளிரக் குளிரப் போட்டால் விளைவு எதிர்பார்த்த விதமாக வராது.
~~~~~~
வசனங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைச்சதும் அடுத்த சொல் தட்டும் முன்னாடி ஒரு ஸ்பேஸ் தட்டுங்க. படிக்க ஈஸியா இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்