சிக்கன் ஸ்டஃப்ட் சப்பாத்தி

தேதி: October 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

மேல் மாவு செய்ய:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஸ்டஃப்பிங் செய்ய:
எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
வெங்காயம் - 2
குடை மிளகாய் - பாதி
கேரட் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை கப்


 

சிக்கனை சிறிது உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி வைத்து கொள்ளவும்.
கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் கேரட் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும். அதில் சிக்கன் சேர்த்துக் வதக்கி கொள்ளவும்.
பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இந்த கலவையை நன்கு ஆற விடவும்.
ஒரு உருண்டை மாவு எடுத்து தேய்த்து ஒரு கரண்டி சிக்கன் கலவையை உள்ளே வைக்கவும்.
பின்னர் அதனை ஓரத்தில் நீர் தடவி முக்கோணமாக மடக்கவும்.
தோசை கல்லில் சப்பாத்தியை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சிக்கன் ஸ்டஃப்ட் சப்பாத்தி தயார். இதனை சிக்கன் சேர்க்காது காய்கறிகள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஷமீலா ஸ்டஃப்ட் சப்பாத்தி செம சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஷமீலா,ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க,படங்கள் அருமை,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் குறிப்பே அசத்தலா இருக்கு. சப்பாத்திய ரொம்ப அழகா மடிச்சி இருக்கீங்க. கண்டிப்பா நான் செஞ்சி பாக்குறேன். மேலும் பல நூறு குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீலா சிக்கன் ஸ்டஃப்ட் சப்பாத்தி ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சூப்பர் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி செய்திருக்கீங்க... கட்டாயம் இந்த மாதம் முடியட்டும்னு செய்து பார்த்துடுறேன். வாழ்த்துக்கள். கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷமீலா சப்பாத்தி பார்க்கவே சூப்பரா இருக்கு.இதை செய்து பார்த்துட்டு சொல்றேன்.அப்படியே கடைசி பிளேட்ட எனக்கு குடுங்க.வாழ்த்துக்கள்...

சப்பாத்தி சூப்பரா இருக்கு.நாங்க கொஞ்சம் வேறு மாதிரி செய்வோம்.
இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.....

ஹசீன்

Super... Super... Super... First kurippe kalakkal kurippa anupi irukeenga... Innum pala kurippugal vazhanga vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினர்க்கு மனமார்ந்த நன்றி...

மிக்க நன்றி ஸ்வர்ணா...அவசியம் செய்து பாருங்க....

வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி முசி....

ரொம்ப நன்றி இந்திரா...செஞ்சு பார்த்துட்டு சுவை புடிச்சுருக்கான்னு மறக்காம சொல்லுங்க.....

வலைக்கும் சலாம் ஹலிலா..
ரொம்ப நன்றி மா...

ரொம்ப நன்றி வனிதா அக்கா...செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க...

மிக்க நன்றி சாதிக்கா.....கண்டிப்பா செஞ்சு பாருங்க...உங்களுக்கு இல்லாததா தாராளமா எடுத்துக்கோங்க.....

மிக்க நன்றி ஹசீன்...
உங்க முறை எப்படின்னு குறிப்பு அனுப்புங்க மா.. அதையும் செஞ்சு பார்க்குறேன்....

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நித்தி...செய்வதும் சுலபம் தான்..செஞ்சு பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க....

சப்பாத்தி பார்க்கவே சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்...

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஷமீலா ஸ்டஃப்ட் சப்பாத்தி செம சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீலா.
ஸ்டஃப்ட் சப்பாத்தி செம சூப்பர்.
கடைசி படம் அழகோ அழகு.
வாழ்த்துக்கள்.

All For The Best

மிக்க நன்றி கார்த்திகா...அவசியம் செய்து பாருங்க...

மிக்க நன்றி ரேவதி...அவசியம் செய்து பாருங்க...நன்றாக இருக்கும்...

வலைக்கும் சலாம் பானு
வாழ்த்துக்கு நன்றி....
நேரம் கிடைச்சா செய்து பாருங்க பானு...

hi shamee..mmm cook pannilam asathuringa. paakuradhukey superb ah irukkudhu. vazhthukkal.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மிக்க நன்றி ரேவதி...

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிலா நானும் நாகை மாவட்டம்தான் நம்ம ஊர்ல முர்த்தபாவை மைதால போடாம கோதுமை மாவுல போட்டிருக்கி ங்க சூப்பர்

ஷமீலா,

அழகாக ப்ரெசென்ட் பண்ணி இருக்கீங்க..take a bite ..ன்னு சொல்றபோல இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வலைக்கும் சலாம் மா..நன்றி.....
நாகை மாவட்டம் தானா?? சந்தோஷம்...இப்போ எங்கே வசிக்கிறீங்க?
இதுவும் கிட்டதட்ட முர்தபா மாதிரி தான்....ஆனால் கோதுமைல செய்வதுனால டயட்ல இருக்குறவங்க கூட சாப்பிடலாம்...அவசியம் செஞ்சு பாருங்க ......

வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி கவிதா.....
நேரம் கிடைச்சா செஞ்சு பாருங்க ......

ஷமிலா நான் இப்ப துபாயிலயிருக்கேன் எனக்கு ஏனங்குடி உங்களுக்கு என்ன ஊர் நீங்க எங்குயிருக்கீங்க உடனே பதில் சொல்லுங்க