நாகூர் உரட்டி

தேதி: October 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

அரிசி மாவு - அரை கிலோ
தேங்காய் பால் - ஒரு கப் (கால் மூடி)
எண்ணெய் - 5 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
சீனி - 5 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு

மாவில் பால், முட்டை, சீனி, உப்பு, நெய் சேர்த்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்து அரை இன்ச் அளவிற்கு வட்டமாக தட்டியெடுத்து தவாவில் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அவற்றை திருப்பி போட்டு எண்ணெய் விட்டு திரும்பவும் இரண்டு நிமிடம் வைத்து வேக விடவும்.
இரு புறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான நாகூர் உரட்டி ரெடி. விரும்பினால் சீனியை பாகு காய்ச்சி மேலே தடவலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நாகூர் உரட்டி ரொம்ப அருமையா செஞ்சிருக்கீங்க.வாழ்த்துக்கள் !
பார்க்க பன் போலவே இருக்கு ,but சுவை அதை விட சூப்பரா இருக்கும் போலே...

ரொம்ப நல்லா சுலபமான குறிப்பாவும் இருக்கு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாகூர் உரட்டி ரொம்ப அருமையா இருக்கு.வாழ்த்துக்கள் !

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

நல்லா செய்து இருக்கீங்க,இதே போல தான் நாங்களும் செய்வோம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி ஜெபி. அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி வனிதா அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி கார்த்திகா அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும்
பார்க்கவே சூப்பரா இருக்கு ஹலிலா....
கண்டிப்பா ட்ரை பண்றேன் மா...
நாகூர் வாடா புகழ் பெற்றதாச்சே....என்னோட பிடித்தமான பண்டம்...அதனோட செய்முறை அனுப்ப முடியுமா?இதுல கேட்டதுக்கு தவறாக நெனைக்காதீங்க.....முடிஞ்சா அனுப்புங்க மா..

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா. இன்ஷா அல்லாஹ் விரைவில் நாகூர் வாடா செய்முறை உங்களுக்கு படத்துடன் அனுப்புகிறேன். நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நாகூர் உரட்டி வித்தியாசமா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப நன்றி இந்திரா அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,

எளிமையான,வித்தியாசமான குறிப்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதா அவசியம் செய்து பாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

namma oru vada adikkuthu naan nagapattinam

அஸ்ஸலாமு அலைக்கும் ரஃபிகா நான் நாகூரில் இருக்கேன்மா. நீங்க நாகப்பட்டிணத்தில் எங்க இருக்கீங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)